ரஷ்ய வர்த்தக நிலையத்தில் பாரிய தீ: 37 பேர் பலி, 64 சிறார்களை காணவில்லை

ரஷ்யாவில் வர்த்தக நிலையமொன்று தீப்பற்றியதால் குறைந்தபட்சம் 37 பேர் உயிரிழந்ததுடன் 41 சிறார்கள் உட்பட 64 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேமேரோவோ நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இறந்தவர்களில் 9 சிறார்களும் அடங்குவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேற்படி ஷொப்பிங் நிலையத்திலுள்ள திரையரங்குகளில் பெரும் எண்ணிக்கையான மக்கள் இருந்த நிலையில் இத்தீப்பரவல் இடம்பெற்றுள்ளது.   Просто ад pic.twitter.com/AHoSSluBbL — Dasha (@DashaOy) March 25, 2018

நான் இறந்துவிட வேண்டும் என ஹார்வீ வைன்ஸ்டீன் விரும்பியிருப்பார்-நடிகை ரோஸ் மெக்கோவன்

தான் இறந்­து­விட வேண்டும் என திரைப்­பட தயா­ரிப்­பாளர் ஹார்வீ வைன்ஸ்டீன் விரும்­பி­யி­ருப்பார் என ஹொலிவூட் நடிகை ரோஸ் மெக்­கோவன் கூறி­யுள்ளார். ஹொலிவூடின் பிர­பல திரைப்­பட தயா­ரிப்­பா­ள­ரான ஹார்வீ வைன்ஸ்டீன் (65) மீது நூற்­றுக்கும் அதி­க­மான பெண்கள் பாலியல் குற்­றச்­சாட்­டு­களை சுமத்­தி­யுள்­ளனர். ஹார்வீ வைன்ஸ்டீன் தன்னை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தாக நடிகை ரோஸ் மெக்­கோவன் குற்றம் கூறி­யுள்ளார். 1997 ஆம் ஆண்டு அமெ­ரிக்­காவில் நடை­பெற்ற சூடா­னிய திரைப்­பட விழா­வின்­போது இச்­சம்­பவம் இடம்­பெற்­ற­தாக சில மாதங்­க­ளுக்கு முன் ரோஸ் மெக்­கோவன் தெரி­வித்­தி­ருந்தார். […]

‘இன்டியானா ஜோன்ஸ் 5 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த வருடம் ஆரம்பிக்கிறார் ஸ்பில்பேர்க்

புகழ்பெற்ற இயக்குநர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க், ‘இன்டியானா ஜோன்ஸ் திரைப்பட வரிசையின் 5 ஆவது படத்துக்கான படப்பிடிப்பை அடுத்த வருடம் ஆரம்பிக்கவுள்ளார். இப்படத்திலும் சிரேஷ்ட நடிகர் ஹரிசன் போர்ட் நடிக்கிறார். ‘இன்டியானா ஜோன்ஸ்’ திரைப்படம் முதன் முதலில் 1981 ஆம் ஆண்டு ‘ரைடர்ஸ் ஒவ் தி லொஸ்ட் ஆர்க்’ எனும் பெயரில் வெளியாகியது. இறுதியாக 4 ஆவது திரைப்படமான ‘இன்டியானா ஜோன்ஸ் அன்ட் தி கிங்டம் ஒவ் தி கிறிஸ்டல் இஸ்குல் ‘2008ஆம் ஆண்டு வெளியாகியது. இந்நிலையில் 5 […]

தந்தையை பராமரிப்பதற்காக 3 வருடங்கள் நடிப்பிலிருந்து விலகியிருந்த நடிகை

ஹொலிவூட் நடிகை ஹிலாரி ஸ்வான்க். சுமார் 3 வருட கால இடை­வெ­ளியின் பின்னர் மீண்டும் நடிக்­க­வந்­துள்ளார். சுக­வீ­ன­ம­டைந்­தி­ருந்த தனது தந்­தையை பரா­ம­ரிப்­ப­தற்­கா­கவே தான் 3 வரு­ட­காலம் ஹொலி­வூட்­டி­லி­ருந்து ஒதுங்­கி­யி­ருந்­த­தாக அவர் தெரி­வித்­துள்ளார். 1992 ஆம் ஆண்­டி­லி­ருந்து திரைப்­ப­டங்­க­ளிலும் தொலைக்­காட்சித் தொடர்­க­ளிலும் நடித்து வந்­தவர் ஹிலாரி ஸ்வான்க். இரு தடவை ஒஸ்கார் விரு­து­க­ளையும் அவர் வென்­றுள்­ளார். எனினும் கடந்த 3 வரு­டங்­க­ளாக அவர் எந்தப் படத்­திலும் நடிக்­க­வில்லை. இவ்­வாறு ஹொலி­வூட்­டி­லி­ருந்து தான் வில­கி­யி­ருந்­த­மைக்­கான காரணம் குறித்து அவர் கூறு­கையில், […]

மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 இளைஞர்கள் பலி

குருணாகல் மாவட்டத்தின் தும்மலசூரிய பிரதேசத்தில் மோட்டார் இன்று காலை இடம்பெற்ற சைக்கிள் விபத்தொன்றில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். ஒரு மோட்டார் சைக்கிளை மற்றொரு மோட்டார் சைக்கிள் முந்திச்செல்ல முற்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.