பாடசாலை முதலாம் தர மாணவ அனுமதிக்காக லஞ்சம் கோரிய அதிபருக்கு 5 வருட சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

பாடசாலையில் பிள்ளையொன்றை சேர்ப்பதற்காக லஞ்சம் கோரிய அதிபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 5 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. மாத்தளையைச் சேர்ந்த இந்த அதிபர் முதலாம் தரத்தில் பிள்ளையொன்றை சேர்ப்பதற்காக 150,000 ரூபா லஞ்சம் கோரியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் இறக்குமதி செய்த 67,165, 655 ரூபா பெறுமதியான மருந்துகள் கலாவதியானதாக கோப் அறிக்கையில் தகவல்

(ரெ.கிறிஷ்­ணகாந்) இலங்கை அரச மருந்­தாக்கல் கூட்­டுத்­தா­ப­னத்­தினால் விற்­ப­னைக்­காக இறக்­கு­மதி செய்­யப்­பட்ட சுமார் 6 கோடியே 71 இலட்­சத்து 65 ஆயி­ரத்து 655 ரூபா பெறு­ம­தி­யான மருந்­துகள் காலா­வ­தி­யா­கி­யுள்­ள­தாக நேற்­று­முன்­தினம் நாடா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்ட கோப் குழுவின் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. மருந்­தாக்கல் கூட்­டுத்­தா­ப­னத்­தினால் இறக்­கு­மதி செய்­யப்­பட்ட மருந்­து­களில் கடந்த 2016 ஆம் ஆண்டு காலா­வ­தி­யான மருந்­து­களின் பெறு­மதி 4 கோடியே 71 இலட்­சத்து 84 ஆயி­ரத்து 97 ரூபா எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. மேலும், கேள்­விப்­பத்­தி­ரங்­களில் உள்­ள­டங்­கி­யுள்ள நிபந்­த­னை­க­ளுக்­க­மைய, இரண்டு வரு­டங்கள் […]

கொழும்பு பாடசாலை மாணவன் கொத்மலை ஆற்றில் மூழ்கி பலி!

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர்) கொழும்­பி­லி­ருந்து நுவ­ரெ­லி­யா­வுக்கு சுற்­றுலா சென்ற மாணவர் ஒருவர் கொத்­மலை ஆற்றில் மூழ்கி உயி­ரி­ழந்­துள்­ள­தாக கொத்­மலை பொலிஸார் தெரி­வித்­தனர். கொழும்­பி­லுள்ள முஸ்லிம் பாட­சாலை ஒன்றில் கல்வி பயிலும் மாண­வரே உயி­ரி­ழந்­த­வ­ராவார். இந்தச் சம்­பவம் நேற்றுப் பகல் ஒரு மணி­ய­ளவில் இடம்­பெற்­றுள்­ளது. குறித்த பாட­சா­லையில் கல்வி பயிலும் 42 மாண­வர்­களும் இரண்டு ஆசி­ரி­யர்­களும் நுவ­ரெ­லியா பிர­தே­சத்­துக்கு வந்­துள்­ளனர். இந்த நிலையில் நேற்று மீண்டும் கொழும்பு நோக்கிப் பய­ணத்தை ஆரம்­பித்து சென்ற வழியில் கொத்­மலை ஆற்றில் நீரா­டிய […]

அமெரிக்காவுக்குச் செல்ல நாமலுக்கு அனுமதி மறுப்பு! மொஸ்கோவிலிருந்து விமானத்தில் ஏறவிட வேண்டாம் என அமெரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டதாக எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் தெரிவிப்பு என்கிறார் நாமல்

ரஷ்­யாவின் தலை­நகர் மொஸ்­கோ­வி­லி­ருந்து அமெ­ரிக்­காவின் ஹுஸ்டன் நகரை நோக்கிச் செல்­வ­தற்கு எமிரேட்ஸ் விமா­னத்தில் தனக்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டமை குறித்து நாடா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக் ஷ தனது டுவிட்டர் பக்­கத்தில் பதி­விட்­டுள்ளார். அண்­மையில் நடை­பெற்ற ரஷ்­யாவின் ஜனா­தி­பதி தேர்­தலின் சுயா­தீன மேற்­பார்­வை­யா­ள­ராக கலந்து கொள்­வ­தற்கு கடந்த 15 ஆம் திகதி மொஸ்கோ நோக்கிச் சென்று அமெ­ரிக்­காவின் ஹுஸ்டன் நக­ரி­லுள்ள தனது உற­வினர் ஒரு­வரின் மரணச்சடங்கில் கலந்து கொள்­வ­தற்கு செல்லத் தயா­ரான போது தான் இந்த இக்­கட்­டான சூழ்­நி­லைக்கு […]

400 டெஸ்ட் விக்கெட்களைப் பூர்த்தி செய்த இளம் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் ப்றோட்; 58 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது இங்கிலாந்து

சர்­வ­தேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 400 விக்­கெட்­களைக் கைப்­பற்­றிய இரண்­டா­வது இங்­கி­லாந்து பந்­து­வீச்­சாளர் என்ற பெரு­மை­யை ஸ்டுவர்ட் ப்றோட் தன­தாக்­கிக்­கொண்­டுள்ளார். நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ராக ஆக்­லண்டில் நேற்று ஆரம்­ப­மான முத­லா­வது டெஸ்ட் (பகல்,இரவு) கிரிக்கெட் போட்­டியில் டொம் லதமின் விக்­கெட்டைக் கைப்­பற்­றி­ய­தன்­மூலம் ஸ்டுவர்ட் ப்றோட் இந்த மைல் கல்லை எட்டிப் பிடித்தார். முதலாம் நாள் ஆட்­டத்தின் இரவு உண­வுக்குப் பின்னர் வீசப்­பட்ட முத­லா­வது ஓவரில் லதமின் பிடியை க்றிஸ் வோக்ஸ் எடுக்க அது ஸ்டுவர்ட் ப்றோடின் 400ஆவது டெஸ்ட் […]