தீராத மலச்சிக்கலில் அவதி படுகிறீர்களா?: இதோ உங்களுக்கான சூப்பர் தீர்வு…!

மலங்கழிப்பது தொடர்பான பிரச்சனைகள் பற்றி நாம் பேசத் தயங்குவோம். நமக்கு தலைவலியோ வயிற்று வலியோ இருந்திருந்தால், அதைப் பற்றி பிறரிடம் பேசுவதில் நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, இதுவே இரண்டு நாளாக மலம் கழிக்கவில்லை, வயிறு பலூன் போல் ஊதிக்கொண்டு இருக்கிறது என்று வைத்துக்க்கொள்ளுங்கள், அதைப் பற்றி நாம் மற்றவர்களிடம் பேச முடியுமா என்ன! அதற்காக மலச்சிக்கலை அப்படியே விட்டுவிடக் கூடாது, இதைப் பற்றிப் பேசுவது சங்கடமாக இருக்கலாம், ஆனால் இது சிரிக்க வேண்டிய விஷயமல்ல என்பதைப் […]

மீண்டும் வட மாகாண ஆளுனரானார் ரெஜினோல்ட் குரே…!

வட மாகாண ஆளுனராக மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்ட ரெஜினோல்ட் குரே, இன்று வடமாகாண ஆளுனர் அலுவலகத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அண்மையில் ஆளுனர்களுக்கான இடமாற்றம் வழங்கப்பட்ட போது, வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே மத்திய மாகாணத்துக்கு மாற்றப்பட்டிருந்தார். எனினும் மறுதினமே அவர் மீண்டும் வட மாகாணத்துக்கான ஆளுனராக சந்திப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளமையும் குறிப்பித்தக்கது.

யாழில் நள்ளிரவில் நடந்தேறிவரும் விபரீதம்…!

யாழ். அளவெட்டி பகுதியில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று முன்தினம்(15.04.2018) நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். அளவெட்டி, மகாத்மா வீதியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த 3 கொள்ளையர்கள் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து 15 பவுண் நகையை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். குறித்த மூன்று கொள்ளையர்களும் தலைக்கவசம் அணிந்து முகத்திற்கு கறுப்புத் […]

கைதானார் மகிந்தானந்த…!

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவற்காக இன்று காலை காவல்துறை நிதிமோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2014 ஆம் ஆண்டு 39 மில்லியன் ரூபாய் அரசாங்க நிதியை முறைக்கேடாக பயன்படுத்தி கெரம் மட்டும் சதுரங்க விளையாட்டு பலகைகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர் நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போராடிதோற்றது CSK : மயிரிழையில் வெற்றது KXIP..!

ஐபிஎல் தொடரின் நேற்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நான்கு ஓட்டங்களினால் மயிரிழையில் வெற்றியை நழுவவிட்டது. நேற்று(15.04.2018) நடைபெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 197 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பஞ்சாப் அணிசார்பில் களமிறக்கப்பட்ட கிரிஸ் கெயில் 33 பந்துகளுக்கு 66 ஓட்டங்களையும், கே.எல். ராஹுல் 37 ஓட்டங்களையும் […]