மனைவியின் வாயில் பலவந்தமாக விஷத்தை ஊற்றிய கொடூரக் கணவன்..!

இளம் மனைவிக்கு விஷம் கொடுத்ததாக கூறப்படும் கணவர் ஒருவர் கண்டி, ஹுன்னஸ்கிரிய பிரதேசத்திலே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் குமார என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பலவந்தமாக விஷம் கொடுத்த மனைவி பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் மனைவியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. வேறொரு சிகிச்சைக்கு உடதும்பர வைத்தியசாலையில் இதற்கு முன்னர் மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலைக்கு சென்ற கணவர், மனைவியின் வாயை பலவந்தமாக திறந்து விஷயத்தை ஊற்றியுள்ளார் என ஆரம்பக்கட்ட […]

இலங்கை ரூபாய் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

டொலருக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று(11.04.2018) வீழ்ச்சிப் போக்கை காட்டியதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதற்கமைய, நேற்றைய நாள் முடிவின்போது டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதற்கமை டொலர் ஒன்றின் பெறுமதி 155 ரூபா 55 சதமாக பதிவாகியுள்ளது. எனினும், நேற்று முன்தினம் டொலருக்கான பெறுமதி 10சதம் குறைவாக காணப்பட்டுள்ளது. புத்தாண்டு காலத்தில் வர்த்தகத்தில் உணரப்பட்ட வீழ்ச்சித் தன்மையே இதற்கான காரணமாகும் என்று கூறப்படுகின்றது. எவ்வாறிருப்பினும், சில வங்கிகளில் டொலருக்கான […]

பொதுமக்களின் நலன் கருதி விசேட தொடரூந்துச் சேவைகள்..!

புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விசேட தொடரூந்துச் சேவைகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபரங்கள் வருமாறு, இன்று இரவு 7.20க்கு கொழும்பில் இருந்து பண்டாரவளை வரையிலும் குளிரூட்டப்பட்ட பொட்டிகளைக் தொடரூந்து சேவையில் ஈடுபடுத்தப்படும் என தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது. அதனைத் தவிர, இன்று இரவு 10 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலும், மாலை 6.50க்கு கொழும்பு கோட்டையில் இருந்து காலி வரையிலும் தொடரூந்துகள் இரண்டு சேவையில் ஈடுபடுத்தப்படும். அதுபோல், பிற்பகல் 1.55க்கு கொழும்பு […]

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சின் மகிழ்ச்சிகரச் செய்தி..! 

பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள 354 பாடசாலைகளுக்கு 02 ஏக்கர் வீதம் காணி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. மலையக பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக 843 பாடசாலைகள் நிறுவப்பட்டுள்ள போதும், அவற்றுக்கு நிலையான காணிகள் இல்லாத நிலையை கருத்திற்கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நேற்று (10.04.2018) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், அரச சுயதொழில் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்  நவீன் திஸாநாயக்க ஆகியோர் முன்வைக்கப்பட்ட கூட்டு முன்மொழிவுக்கு அமைச்சரவை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை […]

அல்ஜீரியாவில் விழுந்து நொறுங்கிய விமானம்: 200 பேரும் மரணித்திருக்கலாமென அச்சம்…!

அல்ஜீரிய தலைநகர் அருகே 200 பேருடன் பயணித்த ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் ராணுவ வீரர்கள் ஆவர். இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர்  என்று தகவல் வெளியாகியுள்ளது. அல்ஜிரிய  தலைநகரிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள ப்லிடா மாகாணத்தின் பௌபாரிக் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.