ரஷ்யாவில் கால்பந்து வீரரின் வாரிசை சுமந்தால் பரிசு…!

ரஷ்யாவில் உள்ள துரித உணவகம் ஒன்று அந்த நாட்டு பெண்களுக்கு விநோதமான பரிசு அறிவிப்பு ஒன்றை அதிரடியாக வெளியிட்டது. அதாவது, உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்றுள்ள அணிகளில் இடம் பிடித்துள்ள வீரர்கள் மூலம் கர்ப்பமடைந்து வாரிசை சுமக்கும் பெண்களுக்கு ரூ.30 லட்சம் ரொக்கப்பரிசும், அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ‘பர்கர்’ உணவு இலவசமாக வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. வருங்கால ரஷ்ய கால்பந்து அணிக்கு சிறந்த கால்பந்து வீரர்களை உருவாக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாக […]

இணையதளத்தில் எல்லை மீறலாமா?

கத்தி முனையை விட பேனா முனை சக்தி வாய்ந்தது. வில் முனையை விட சொல் முனை வலிமையானது. காரணம் புரட்சியாளர்களும், தலைவர்களும் தங்கள் கருத்துகளை பேனா முனையில் உருக்கி எழுதி மக்கள் மத்தியில் எழுச்சி உரையாற்றியதன் விளைவாக ஆட்சி மாற்றங்கள், நாட்டு விடுதலை, சமுதாய புரட்சி என்று பல சம்பவங்கள் நடந்துள்ளதை நாம் அறிவோம். தற்போது பேனா முனைக்கெல்லாம் வேலையில்லை. விஞ்ஞானத்தின் விஸ்வரூப கட்டமைப்புக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு விரல்களின் மீட்டலில் கணினிகளிலும், செல்போன்களிலும் கருத்துகளை விரைவாக […]

சில்வஸ்டர் ஸ்டலோன் பலாத்காரம் செய்துவிட்டார்: பெண் பரபரப்பு புகார்

ஹொலிவூட்நடிகர் சில்வஸ்டர் ஸ்டலோன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். ஹொலிவூட்தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், சிலரை பலாத்காரமும் செய்துள்ளார். இதையடுத்து நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் #MeToo என்ற ஹேஷ்டேக்குடன் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் பற்றி தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பெண் ஒருவர்  நடிகர் ஸ்டலோன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.சில்வஸ்டர் ஸ்டலோன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் […]

ஒரே காதலுனுக்காக 38 செல்போன்களை கொள்ளையடித்த இரண்டு கல்லூரி மாணவிகள்

மும்பையில்  மின்சார ரயில்களில் பெண் பயணிகளிடம் மொபைல் சாதனங்கள் காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இது தொடர்பாக பயணிகள் ரயில்வே அதிகாரிகளிடம் பல புகார்களை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  போரிவாலி – சாண்டாகுரூஸ் ரயில் நிலையங்களுக்கு இடையில் தான் இந்த திருட்டு சம்பவம் அதிகமாக நடைபெற்றுள்ளது என்பதை ரயில்வே குற்றப்புலணாய்வுப் பிரிவு அதிகாரிகள் கண்டறிந்தனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டது, மேலும் கடந்த 30-ம் தேதி காலை பெண் காவலர் […]

பேருந்தில் ஆபாசப்படம்

கண்டியிலிருந்து மகியங்கனை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் ஆபாசப்படம் காண்பிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியில் ஆபாச காட்சிகள் காண்பிக்கப்பட்டதை தொடர்ந்து பயணிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பஸ்ஸில் சிறுவர்கள் இருப்பதை சுட்டிக்காட்டி பயணிகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர் இதன் காரணமாக நடத்துனரிற்கும் பயணிகளிற்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்படும் நிலை உருவானதை தொடர்ந்து பயணிகள் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.