மரணத்தில் சந்தேகம்- சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.

கடந்த வருடம் தற்கொலை செய்துகொண்ட ஆண் ஒருவரின் சடலத்தை நீதிமன்ற உத்தரவையடுத்து அனுராதபுரம் பொலிஸார் தோண்டி எடுத்துள்ளனர். இறந்தவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது தாயார் தெரிவித்துள்ளதை தொடர்ந்தே நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பொலிஸார் சடலத்தை தோண்டி எடுத்துள்ளனர். அனுராதபுரத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் தாயார் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி குறிப்பிட்ட நபர் தற்கொலை செய்துகொண்டார் என அவரது பிள்ளைகளும் மனைவியும் தெரிவித்துள்ள போதிலும் […]

என்னை தெரிவு செய்ததால் ஐபிஎல்லை சேவாக் காப்பாற்றிவிட்டார்- கெய்ல் கருத்து

பஞ்சாப் அணிக்காக என்னை தெரிவு செய்ததன் மூலம் விரேந்திர சேவாக் ஐபிஎல்லை காப்பாற்றிவிட்டார் என நேற்றைய போட்டியில் சதமடித்த கிறிஸ்கெய்ல் தெரிவித்துள்ளார். ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கிறிஸ்கெயில் 63 பந்துகளில் 11 சிக்சர்களுடன் 104 ஓட்ட்ங்களை பெற்றார். இந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றிபெற்ற பின்னர் ஆட்டநாயகனாக தெரிவு செய்யபபட்டுள்ள கிறிஸ்கெயில் கருத்து வெளியிட்டுள்ளார். நான் எப்போதும் இலக்கை எட்டவேண்டும் என்ற உறுதியுடன் இருப்பேன் எந்த அணி;க்காக விளையாடினாலும் நான் எனது 100 வீதத்தை […]

சிறுமிக்கு நீதிவேண்டி பா.ஜ.க இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்ஸ்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பதற்கு நீதி வேண்டும் என அம்மாநில பா.ஜ.க இணையதளத்தை ஹேக்கர்ஸ் முடக்கியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. சிறுமி கொலையில் குற்றவாளிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் பா.ஜ.க மந்திரிகள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றது, குற்றவாளிகளுக்கு எதிராக போலீஸ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த போது […]

கூகுள் க்ரோமில் புதிய அம்சங்கள் இணைப்பு; சத்தமின்றி வேலை பார்த்த கூகுள்.

கூகுள் தனது ஜிமெயில் பயன்பாட்டை இன்னும் எளிமையாக மற்றும் யூஸர் பிரெண்ட்லியாக மாற்றும் முனைப்பின் கீழ், அதன் வெப் வெர்ஷன் மற்றும் மொபைல் ஆப் வெர்ஷனில், க்விக் ரிப்ளை, ஆப்லைன் சப்போர்ட் போன்ற பல அம்சங்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலைபாட்டில், சத்தமின்றி கூகுள் க்ரோம் அப்டேட்டை நிகழ்த்தியுள்ளது. அதன் மேக், விண்டோஸ், லினக்ஸ் மற்றும் ஆண்ட்ராய்டு உள்ளிட்ட அனைத்து மேடைகளுக்கான க்ரோம் 66 அப்டேட்டை கூகுள் நிறுவனம் உருட்டியுள்ளது. இந்த சமீபத்திய வெப் ப்ரவுஸர் […]

ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனும் தெரிஞ்சுக்க வேண்டிய இந்திய அணியின் டிரஸிங் ரூம் இரகசிய கதைகள்

இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதம் என்பது யாவரும் அறிந்ததே. உலகின் எந்த நாட்டில் போட்டி நடந்தாலும், அங்கே அரங்கம் நிறைய கூட்டம் வேண்டும் என்றால் எதிரணியாக இந்தியா இருக்க வேண்டும். இந்தியாவையும் கிரிக்கெட்டையும் பிரிக்கவே முடியாது. அதானால் தான் அதுவொரு லாபகரமான போட்டியாக இந்தியாவில் காணப்பட்டு வருகிறது. மேலும், இந்தியாவில் கிரிக்கெட்டில் ஒருவர் சாதித்தால் அவர் உடனே பெரும் புள்ளியாகவும், கோடீஸ்வரராகவும் உருவெடுத்து விடுகிறார். நாம் கிரிக்கெட்டையும், கிரிக்கெட் வீரர்களையும் மைதானத்திலும், விளம்பரத்திலும் மட்டும் தான் […]