அர்ஜூனா மகேந்திரன் சிங்கப்பூரில் காணப்படும் படம் சமூக ஊடகங்களில் வைரல்

பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பாக தேடப்படும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூனா மகேந்திரன் சிங்கப்பூரீன் லிட்டில் இந்தியா பகுதியில் காணப்படும் புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. குறிப்பிட்ட புகைப்படத்தை பார்த்தாக தெரிவித்துள்ள பொலிஸ்பேச்சாளர் எனினும் அந்த படம் எப்போது எடுக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த முடியாமலுள்ளது என தெரிவித்துள்ளார். எனினும் குறிப்பிட்ட விடயம் குறித்து கவனம் செலுத்தப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பாக தேடப்பட்டுவரும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை […]

சிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை – அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது இந்திய அமைச்சரவை

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை வழங்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சமீபத்தில் காஷ்மீரில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், உன்னாவ் பகுதியில் இளம்பெண் கற்பழிப்பு, அவரது தந்தை போலீஸ் நிலையத்தில் மரணம் மற்றும் பல்வேறு பகுதிகளில் சிறுமிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எனவே, சிறுமிகள் மற்றும் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண […]

கடல் அலை சீற்றம் அதிகரித்துள்ளது – மக்கள் எச்சரிக்கை!

புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், அப்பகுதி மீனவர்களை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. இதேவேளை, மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், […]

பெண் பத்திரிகையாளரை அவதூறாக பேசிய விவகாரம்: எஸ்வி சேகர் எந்த நேரத்திலும் கைது

பெண் பத்திரிகையாளரை அவதூறாக பேசிய விவகாரத்தில் எஸ்வி சேகர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தமிழக பாஜக நிர்வாகியான எஸ்வி சேகர் தனது சமூக வலைதள பக்கத்தில் தரக்குறைவாக கருத்து பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இதுகுறித்து எஸ்வி சேகர் மீது போலீஸில் புகார் அளித்த பத்திரிகையாளர்கள் அவரது வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். பத்திரிகையாளர்கள் குறித்து தவறான கருத்துகளை பகிர்ந்த எஸ்.வி.சேகரின் வீட்டை முற்றுகையிட்டு […]

அணு ஆயுதங்கள், ஏவுகணை சோதனைகள் இனி வடகொரியாவில் நடைபெறாது – அதிபர் கிம் ஜாங் உன் அறிவிப்பு

உலகை மிரட்டிவரும் வடகொரியாவில் இனி அணு ஆயுதங்கள், ஏவுகணை சோதனைகள் நடைபெறாது என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார் ஐக்கிய நாடுகள் சபையின் தடையை தகர்த்து, அடுத்தடுத்து ஏவுகணை சோதனை, அணுகுண்டு பரிசோதனை என உலக நாடுகளை அதிர வைத்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தற்போது சில மாதங்களாக மனம்மாறி வெள்ளைக்கொடி காட்டி வருகிறார். சமீபத்தில் தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தனதுநாட்டு அணியை அனுப்பியது, தென்கொரியா […]