யாழ்ப்பாணத்தில் பகல் கொள்ளை…..!

யாழ்ப்பாணம், கரணவாய் பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவத்தில் 16 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் பட்டப்பகலில் நடந்தததென வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் கரணவாய் மத்தி, பாடசாலை வீதியில் உள்ள சதானந்தமூர்த்தி என்பவரின் வீட்டில் இடம்பெற்றுள்ளது. வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்குச் சென்றிருந்த சமயம் மூதாட்டி ஒருவரே அங்கு தங்கியிருந்தார். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய திருடர்கள் வீட்டுக்குள் புகுந்து அங்கு சங்கிலி, காப்புகள், நெக்லஸ், மோதிரம் உள்ளிட்ட 16 பவுண் […]

பேருந்தில் ஆபாசப்படம்

கண்டியிலிருந்து மகியங்கனை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் ஆபாசப்படம் காண்பிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியில் ஆபாச காட்சிகள் காண்பிக்கப்பட்டதை தொடர்ந்து பயணிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பஸ்ஸில் சிறுவர்கள் இருப்பதை சுட்டிக்காட்டி பயணிகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர் இதன் காரணமாக நடத்துனரிற்கும் பயணிகளிற்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்படும் நிலை உருவானதை தொடர்ந்து பயணிகள் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பூட்டான் பெண்களை ஈராக்கிற்கு கடத்த முயன்ற இலங்கையர் கைது

மூன்று பூட்டான் பெண்களை இலங்கை ஊடாக ஈராக்கிற்கு கடத்த முயன்ற இலங்கையர் ஒருவரை மும்பாய் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மும்பாய் சர்வதேச விமானநிலையத்தில் இலங்கையை சேர்ந்த மொகிடீன் பயாஸ் என்ற நபரின் நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த நபரை விசாரணை செய்து அவரின் ஆவணங்களை சோதனையிட்டவேளையே இந்த கடத்தல் விடயம் தெரியவந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈராக்கில் உள்ள ஸ்பா நிலையங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து தங்களை அந்த நபர் அழைத்துச்சென்றுகொண்டிருந்தார் என அவருடன் காணப்பட்ட […]

சனியனை தூக்கி பெனியனில் போட்ட கதை

வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதிகளை வாடகை வீட்டின் உரிமையாளர் அச்சுறுத்துவதாக கூறி, தம்பதியினர் தன்கொடுவ பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்வதற்காகச் சென்றுள்ளனர். வீட்டு உரிமையாளர் தங்களை துன்புறுத்துவதாகவும் தங்களின் சுதந்திரத்தை பாதிக்கும் படியாக நடந்துகொள்வதாகவும் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்வதற்காக 26 மற்றும் 20 வயதான இளம் தம்பதியினர் தன்கொடுவ பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளனர். இந்த முறைபாட்டைப் பதிவு செய்துகொண்டிருக்கும் போது, குறித்த ஆணின் கையடக்கத் தொலைபேசிக்கு அடிக்கடி பல அழைப்புகள் வந்துள்ளன. இதனை அவதானித்த பொலிஸ் உத்தியோகத்தர், […]

பாலித ரங்கே பண்டாரவின் மகனை பிணையில் விடுவித்த நீதிமன்றம்….!

யசோத ரங்கே பண்டார செலுத்திய கெப் வண்டி, புத்தளம் – ஆராச்சிக்கட்டு பகுதியில் விபத்துக்குள்ளானதில் அவர் உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்தனர். கடந்த 8 ஆம் திகதி ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டார். அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை, மது போதையில் வாகனம் செலுத்தியமை , விபத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே […]