நுவ­ரெ­லியாவில் வசந்த கால நிகழ்­வுகள் கோலா­கலமாக ஆரம்பம்

நுவ­ரெ­லி­யாவில் வரு­டந்­தோறும் நடை­பெறும் ஏப்ரல் வசந்த கால நிகழ்­வுகள் முதலாம் திகதி கோலா­க­ல­மாக ஆரம்­பித்து வைக்­கப்பட்டது.இவ்­வை­ப­வத்தில் மத்­திய மாகாண முத­ல­மைச்சர் சரத் ஏக்­க­நா­யக்­க, மத்­திய மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான ஆர். ராஜா­ராம், எஸ்.பி. ரத்­நா­யக்­க, நுவ­ரெ­லியா மாந­கர முன்னாள் முதல்­வர்­க­ளான மஹிந்­த­தொ­டம்­பே­க­ம­கே, சந்­த­னலால் கரு­ணா­ரட்ண  மற்றும் மாந­கர சபை உறுப்­பி­னர்­களும் கலந்துகொண்­டனர். இந்த வைப­வத்­துக்­கான ஏற்­பா­டு­களை நுவ­ரெ­லியா மாந­கர சபை  ஆணை­யாளர் ருவண் பண்­டார ரட்நாயக்க மேற்கொண்டிருந்தார்.   (நுவரெலியாநிருபர், நுவரெலியா கண்ணன்)  

மிஸ் நிக்கரகுவா 2017 அழகுராணி

நிக்­க­ர­குவா நாட்டின் புதிய அழ­கு­ரா­ணி­யாக ரமா ரெரேனிஸ் குவெ­ஸடா தெரி­வு­ செய்­யப்­பட்­டுள்ளார். அண்­மையில் நடை­பெற்ற மிஸ் நிக்­கர­குவா 2017 அழ­கு­ராணி போட்­டியில் வய­தான ரமா ரெரேனிஸ் குவெ­ஸடா மிஸ் யூனிவர்ஸ் நிக்­க­ர­குவா அழ­கு­ரா­ணி­யாக தெரி­வானார். ஹெலன் மார்ட்­டினஸ் இரண்­டா­மி­டத்­தையும் மார்தா மேஸா மூன்­றா­மி­டத்­தையும் பெற்­றனர். எதிர்­வரும் மிஸ் யூனிவர்ஸ் போட்­டியில் நிக்­க­ர­குவா சார்பில் ரமா ரெரேனிஸ் குவெஸடா பங்குபற்றவுள்ளார்.  

தென் ஆபிரிக்காவின் புதிய அழகுராணி

தென் ஆபி­ரிக்­காவின் புதிய அழ­கு­ரா­ணி­யாக டெமி லீ நெல் பீட்டர்ஸ் தெரி­வு ­செய்­யப்­பட்­டுள்ளார். தென் ஆபி­ரிக்­காவின் தேசிய அழ­கு­ராணிப் போட்­டி­யான மிஸ் சௌத் ஆபிரிக்கா 2017 போட்­டி­களின் இறுதிச் சுற்று நேற்­று ­முன்­தினம் தென் ஆபி­ரிக்­காவின் சன் சிட்டி நகரில் நடை­பெற்­றது. இதில் டெமி லீ நெல் பீட்டர்ஸ் முத­லிடம் பெற்றார். 21 வய­தான டெமி லீ வர்த்­தக முகா­மைத்­துவப் பட்­ட­தா­ரி­யாவார். எதிர்­வரும் உலக அழ­கு­ராணிப் போட்­டி­யிலும் பிர­பஞ்ச அழ­கு­ராணிப் போட்­டி­யிலும் தென்­ ஆ­பி­ரிக்­காவின் சார்பில் இவர் […]

பினிபினிங் பிலிப்பினாஸ் 2017 அழகுராணி போட்டிகள் ஆரம்பம்

பிலிப்பைன்ஸின் பினிபினிங் பிலிப்பினாஸ் 2017 (Binibining Pilipinas 2017) அழகுராணி போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. 1964 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் நடைபெறும் பினிபினிங் பிலிப்பினாஸ் போட்டிகள் மூலம் பிரபஞ்ச அழகுராணி, மிஸ் இன்டர் நெஷனல் உட்பட பல சர்வதேச போட்டிகளில் பிலிப்பைன்ஸ் சார்பாக பங்குபற்றவுள்ள யுவதிகள் தெரிவுசெய்யப்படுகின்றனர். இம் முறை 39 பிராந்திய அழகுராணிகள் இப் போட்டிகளில் பங்குபற்றுகின்றனர்.   கடந்த வாரம் ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட போட்டியாளர்கள் நீச்சலுடையில் தோன்றிய பிராந்திய அழகுராணிகள் சிலரைப் படங்களில் காணலாம். […]

29 வருடங்களின் பின் றியாத்தில் முதல் தடவையாக பிரபல கலைஞர்களின் இசை நிகழ்ச்சி

சவூதி அரே­பி­யாவைச் சேர்ந்த பிர­பல பாட­கர்கள் ரஷீத் அல் மஜீத் மற்றும் மொஹமத் அப்து ஆகி­யோரின் பிர­மாண்ட இசை நிகழ்ச்சி றியாத் நகரில் கடந்த வியாழக்கி­ழமை இரவு நடை­பெற்­றது. 29 வரு­டங்­களில் இவர்­களின் இசை நிகழ்ச்சி றியாத்தில் நடை­பெ­று­வது இதுவே முதல் தட­வை­யாகும். பஹ்­ரெய்னில் பிறந்த சவூதி அரே­பிய வம்­சா­வளி இசைக்­க­லை­ஞ­ரான ரஷீத் அல் மஜீத் (47), sச வூதி அரே­பி­யாவில் பிறந்த மொஹமத் அப்­துவும் (67) மத்­திய கிழக்கில் பெரும் புகழ்­பெற்ற இசைக் கலை­ஞர்­க­ளாவர். எனினும், […]