உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெல்லப் போகும் அணியை தீர்மானிக்கும் பூனை

உலக கோப்பை போட்டியின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று முன்கூட்டியே வெளியாகும் கணிப்புகளை அறிவதில் அதிக ஆர்வம் இருப்பது உண்டு. இந்த ஆர்வத்துக்கு தீனி போடும் வகையில் 2010ஆம்ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை தொடரின் போது முடிவுகளை கணிப்பதில் ‘பால்’ என்ற ஆக்டோபஸ் கடல் வாழ் உயிரினம் கதாநாயகனாக விளங்கியது. ஜெர்மனியில் உள்ள கடல் வாழ் அருங்காட்சியத்தில் இருந்த அந்த ஆக்டோபஸ் போட்டியின் முடிவுகளை ஆட்டத்துக்கு முன்கூட்டியே துல்லியமாக கணித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. […]

ஸ்கொட்லாந்தை தாறுமாறாக வீழ்த்தி வெற்றி பெற்றது பாகிஸ்தான்…..!

  இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரிற்கு ஸ்கொட்லாந்து சென்ற பாகிஸ்தான் அணி  எடின்பர்க் மைதானத்தில் நேற்று போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி துடிப்பாட்டத்தை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், முதலிரண்டு விக்கட்டுகளும் 46 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டாலும், அணித் தலைவர் என்ற பொறுப்புடன் ஆடிய சப்ராஷ் ஓட்டங்களை வேகமாக குவித்தார். மூன்று சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் அடங்கலாக 89 ஓட்டங்களை சப்ராஷ் அஹமட் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுக்க, […]

ஐபிஎல் மூலம் தேசிய அணியில் களமிறங்கி பாகிஸ்தானை மிரட்டிய பாட்லர்……!

ஐபிஎல் தொடரில் இறுதி தகுதிச் சுற்றும் வரையும் ராஜஸ்தான் ரோயல்ஸ் தாக்குபிடித்தது, எல்லோருக்கும் தெரிந்ததே. அந்தவகையில் அவ்வணியின் ஜாஸ் பெட்லர் அருமையான இன்னிங்ஸை வெளிப்படுத்திருந்தார். ஐபிஎல் தொடரில் அசத்தியது தான் மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் தேர்வாக முக்கிய காரணம் என இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இந்தாண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் விளையாடினார். அதில் 13 போட்டியில் 548 ஓட்டங்களை அவர் […]

இந்திய கால்பந்தாட்ட அணி தலைவரின் சாதனை…..!

சர்வதேச அளவில் அதிக கோல் அடித்த தற்போதைய கால்பந்து வீரர்கள் பட்டியலில், ஸ்பெயினின் டேவிட் வில்லாவை 59 கோல்களால் பின்னுக்கு தள்ளிய இந்திய அணியின்  வீரரும் தலைவருமான சுனில் சேத்ரி (61 கோல்கள்) மூன்றாவது இடத்தை பிடித்தார். கென்யா அணிக்கு எதிரான இண்டர்காண்டினெண்டல் கோப்பை தொடரின் லீக் போட்டியில், இரண்டு கோல் அடித்த செஞ்சுரி நாயகன் சுனில் சேத்ரி, ஸ்பெயினின் டேவிட் வில்லாவின் சர்வதேச சாதனையை முறியடித்தார். ஐக்கிய அரபு எமிரேட்சில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஆசிய […]

வாயை பிளக்க வைத்த ஸ்டார் இந்தியாவின் வருமானம்…..!

நடந்து முடிந்த இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது எல்லோராலும் பிரம்மாண்டமாக வரவேற்கப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விசாலமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. மற்றும் இறுதி போட்டியில் வெற்றிக் கிண்ணத்தை சென்னை அணி தம் வசப்படுத்தியது. அந்த வகையில் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை பெற்றிருந்த ஸ்டார் இந்தியா நிறுவனம் விளம்பரத்தின் ஊடாக பெற்றுக்கொண்ட இலாப தொகை எவ்வளவு என்பதை எக்ஸ்சேஞ் 4 மீடியா என்ற வணிக இணையத்தளம் நேற்று வெளியிட்டுள்ளது. ஐ.பி.எல். இறுதிப்போட்டியை […]