தொடர் தோல்வி எதிரொலி – டெல்லி டேர்டெவில்ஸ் அணி தலைமை பதவியை இராஜினாமா செய்தார் கம்பீர்

ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி விளையாடியுள்ள ஆறு போட்டிகளில் ஐந்தில் தோல்வியடைந்துள்ள நிலையில் அந்த அணியின் கப்டன் கவுதம் காம்பிர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி விளையாடியுள்ள ஆறு போட்டிகளில் ஐந்தில் தோல்வியடைந்துள்ள நிலையில் அந்த அணியின்  கவுதம் காம்பிர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் தொடர் போட்டிகள் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. இதில் சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப், பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய எட்டு அணிகள் […]

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்…!

சிங்கப்பூரில் இந்திய-சீன வம்சாவளியை சேர்ந்த பெண் தலைவர் இந்திராணி ராஜா கேபினட் மந்திரியாக நியமிக்கப்பட்டார். சிங்கப்பூரில் பிரதமர் லீ சியன் லூங், தனது மந்திரிசபையை நேற்று மாற்றி அமைத்தார். இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்தார். இதில் இந்திய-சீன வம்சாவளியை சேர்ந்த பெண் தலைவர் இந்திராணி ராஜா (வயது 55) கேபினட் மந்திரியாக நியமிக்கப்பட்டார். இவர் 2006-11 காலகட்டத்தில் நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருந்து உள்ளார். இந்தியரான இவரது தந்தை ராஜா, மூத்த […]

கனடா சம்பவத்தில் இலங்கை பெண்ணும் பலி

கனடாவின் டொரன்டோவில் வானால் பொதுமக்கள் மோதப்பட்ட சம்பவத்தில் இலங்கை பெண்மணியொருவரும் கொல்லப்பட்டுள்ளார். கடந்த சில வருடங்களாக டெரான்டோவில் வசித்து வந்த இலங்கையின் ஹொரணையை சேர்ந்த ரேணுகா அமரசிங்க என்ற 48 வயது பெண்மணியே இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார். கனடாவில் உள்ள இலங்கையை சேர்ந்த பௌத்தமதகுரு ஒருவர் இதனை உறுதிசெய்துள்ளார். கனடாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்த சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் கொல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்களை உத்தியோகபூர்வமாக வெளியிடுவதற்கு இன்னமும் சில நாட்களாகலாம் என தெரிவித்துள்ள அதிகாரிகள் […]

என்னை சுட்டுக்கொல்லுங்கள் – பொலிஸாரிடம் மன்றாடிய கனடா கொலையாளி

கனடாவின் டொரன்டோவில் இன்று பொதுமக்கள் மீது வானை மோதி பலரை கொலை செய்த நபர் பொலிஸார் அவரை கைதுசெய்ய முயன்றவேளை என்னை சுட்டுக்கொன்றுவிடுங்கள் என மன்றாடியதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.         அலெக்ஸ் மினாசியன் என்ற அந்த நபர் பொலிஸாரிடம் துப்பாக்கிபோன்ற ஒரு பொருளை காண்பித்து என்னை கொன்று விடுங்கள் என மன்றாடுவதையும் எனினும் அதனை பொருட்படுத்தாமல் பொலிஸார் அவரை நிலத்தில் வீழ்த்தி இழுத்துச்செல்வதையும் குறிப்பிட்ட வீடியோவில் காணமுடிகின்றது. அலெக்ஸ் தனது கையில் […]

பிரிட்டன் அரச குடும்பத்தில் புதிதாக இணைந்த குட்டி இளவரசருக்கு குவியும் வாழ்த்துக்கள்

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் – கேத் தம்பதிக்கு நேற்று பிறந்த ஆண் குழந்தைக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதிக்கு ஏற்னவே ஜார்ஜ் என்ற மகனும், சார்லட் என்ற மகளும் உள்ளனர். மூன்றாவது முறையாக கர்பமாக இருந்த கேத் மிடில்டன் பிரசவத்திற்காக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உள்ளூர் நேரப்படி சுமார் 11 மணியளவில் அவருக்கு ஆண் குழந்தை […]