உள்ளூராட்சி மன்ற வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை!

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பான அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை டிசெம்பர் 4 ஆம் திகதிவரை அமுல்படுத்துவதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

பின்னோக்கி செலுத்தப்பட்ட கார் மற்றொரு காரின் மீது ஏறியது

சாரதி ஒருவர் தனது காரை பின்­னோக்கிச் செலுத்­தி­ய­போது, மற்­றொரு காரின் மீது அக்கார் ஏறிய சம்­பவம் பிரிட்­டனில் இடம்­பெற்­றுள்­ளது. பிளைமௌத் நகர குடி­யி­ருப்புப் பகு­தி­யொன்றில் கடந்த சனிக்­கி­ழமை இரவு 11 மணி­ய­ளவில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றது. காரை பின்­னோக்கிச் செலுத்­தி­யவர் ஒரு மாணவர் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அவர் செலுத்­திய கார் நிறுத்­தப்­பட்­டி­ருந்த காரொன்றின் மீதே ஏறி­யது. இச்­சம்­ப­வத்தில் எவரும் காய­ம­டை­ய­வில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

459 உறிஞ்சல்குழாய்களை வாயில் வைத்திருந்து சாதனை படைத்த இளைஞர்

இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஒரே தடவையில் 459 உறிஞ்சல் குழாய்களை (ஸ்ட்ரோ) தனது வாயில் வைத்திருந்து உலக சாதனை படைத்துள்ளார். ஓடிஷா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் மஹாராணா எனும் 23 வயதான இளைஞரே இச் சாதனையை படைத்துள்ளார். இந்தியாவின் மும்பை நகரில் இந் நிகழ்வு நடைபெற்றது. 8 வருடங்களுக்கு முன் பிரித்தானியரான சிமோன் எல்மோர் என்பவர், ஜேர்மனியில் நடைபெற்ற கண்காட்சி யொன்றின்போது 400 உறிஞ்சல் குழாய்களை வாயில் வைத்திருந்தமையே இதுவரை சாதனையாக இருந்தது. கின்னஸ் […]

சிறுமியைக் கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்தவருக்கு 45 வருட சிறை: பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குழந்தைக்கும் 6 இலட்சம் ரூபா நஷ்டஈடு – யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பு

(மயூரன்) சிறு­மியை கடத்திச் சென்று பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்திய நபர் ஒரு­வ­ருக்கு 45 ஆண்­டுகள் சிறைத் தண்­டனை விதித்து யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­சகர் இளஞ்­செ­ழியன் தீர்ப்­ப­ளித்தார். “எதிரி மீதான 3 குற்­றச்­சாட்­டு­களும் நிரூ­பிக்­கப்­பட்டு அவரைக் குற்­ற­வா­ளி­யாக மன்று உறு­தி­செய்­கி­றது. இதன்­படி மூன்று குற்­றச்­சாட்­டு­க­ளுக்கும் தலா 15 ஆண்­டுகள் வீதம் 45 ஆண்­டுகள் கடூ­ழியச் சிறைத் தண்­டனை வழங்­கப்­ப­டு­கி­றது. 3 வகை சிறைத் தண்­ட­னை­யையும் குற்­ற­வாளி ஏக காலத்தில் அனு­ப­விக்க முடியும். பாதிக்­கப்­பட்ட சிறு­மிக்கும் அவ­ரது […]

ஆஸி கிரிக்கெட் வீரர்களுக்கு யூசெய்ன் போல்ட் வேகப் பயிற்சி

அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணி வீரர்­க­ளுக்கு ஒலிம்பிக் மற்றும் உலக குறுந்­தூர ஓட்டச் சம்­பியன் யூசெய்ன் போல்ட் பயிற்சி அளிக்க முன்­வந்­துள்ளார். இங்­கி­லாந்­துக்கு எதி­ராக ஆஷஸ் தொடரில் விளை­யா­ட­வுள்ள அவுஸ்­தி­ரே­லிய வீரர்கள் விக்­கெட்­க­ளுக்கு இடையில் வேக­மாக ஓடு­வதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தி­யுள்ள யூசெய்ன் போல்ட் அதற்­கான பயிற்­சி­களை வழங்க முன்­வந்­துள்ளார்.   ஓட்டப் போட்­டி­யின்­போது எவ்­வாறு வீரர் ஒருவர் வேக­மாக ஆரம்­பிக்­கின்­றாரோ அதே­போன்று கிரிக்கெட் போட்­டியில் முத­லா­வது ஒட்­டத்தை துரி­த­மாக ஆரம்­பிக்­க­வேண்டும் என போல்ட் கூறினார். இவ்விட­யத்தில் அவுஸ்­தி­ரே­லி­யர்கள் மத்­தியில் […]