Trump

அரசியல் யாப்பை மாற்ற முனைந்தால் பொருளாதார நடவடிக்கை – வெனிசூலாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வெனி­சூ­லாவின் அர­சியல் யாப்பை மாற்றும் முயற்­சி­களில் தொடர்ந்தும் ஈடு­பட்டால் அந்நாட்­டுக்கு எதி­ராக உட­ன­டி­யாக பொரு­ளா­தார நட­வ­டிக்கை எடுக்­கப்­போ­வ­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் எச்­ச­ரித்­துள்ளார்.  இருப்­பினும் வெனி­சூலா அர­சுக்கு எதி­ராக எவ்வி­த­மான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என ட்ரம்ப் தெளி­வாகக் கூற­வில்லை. மதுரோ கெட்­டவர். சர்­வா­தி­கா­ரி­யாக அவர் கனவு காண்­கிறார். வெனி­சூலா உடைந்து நொறுங்­கு­வதை நாம் பார்த்­துக்­கொண்­டி­ருக்க மாட்டோம் என ட்ரம்ப் மேலும் கூறி­யுள்ளார்.  மது­ரோவை பத­வி­யி­லி­ருந்து அகற்ற எதிர்க்­கட்­சிகள் நாளை 24 மணி­நேர வேலை­நி­றுத்தம் ஒன்­றிற்கு அழைப்பு […]

NAWAZ

பனாமா பேப்பர்ஸ் விவகாரம்; பாக். பிரதமருக்கு எதிரான 15 வழக்குகள்

பாகிஸ்தான் பிர­தமர் நவாஸ் ஷெரீப்பின் குடும்­பத்­தி­ன­ரு­டைய சொத்­துக்­களை விச­ராணை செய்யும் கூட்டு விசா­ரணைக் குழு அவ­ருக்கு எதி­ரான 15 வழக்­கு­களை மீண்டும் விசா­ரணை செய்ய வேண்டும் என பரிந்­துரை செய்­தி­ருக்­கி­றது.   லண்டன் பார்க் லேனி­லுள்ள பெறு­மதி மிக்க நான்கு அடுக்­கு­மாடி வீடுகள் அடங்­க­லாக நவாஸ் ஷெரீப்பின் சொத்து அறிக்­கையில் குறிப்­பி­டப்­ப­டாத இன்னும் பல சொத்­துக்கள் அவ­ரு­டைய பிள்­ளை­க­ளுக்கு இருப்­ப­தாக கடந்த வருடம் பனாமா ஆவ­ணங்­களை ஆய்­வு­செய்த கூட்டு விசா­ர­ணைக்­குழு கண்­டு­பி­டித்­தது.  இந்த 15 வழக்­கு­களில் மூன்று, […]

Malala-Yousafzai-Photo-(3)

மலாலா – சகோதரர் உரையாடல்; ட்விட்டரில் வைரல்

மிகச்சிறிய வயதில் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரும், பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடி வருபவருமான மலாலா யூசுப்சாய், சமீபத்தில் ட்விட்டரில் இணைந்தார். இவரைத் தற்போது சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் ட்விட்டரில் பின்தொடர்கின்றனர். கடந்த ஜூலை 12 ஆம் திகதி பிறந்தநாள் கொண்டாடிய மலாலாவுக்கு அவருடைய சகோதரர் குஷால் எழுதிய கடிதம் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. "டியர் மலாலா, நீ ஓர் அற்புதமான நபர் மட்டுமல்ல. ஓர் அற்புதமான சகோதரியும்கூட! ஆனால் என்னைப்போல சிறப்பானவனாக மாறவேண்டுமென்றால், எனது வழிகளை நீ […]

olanda

பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்ய உத்தரவு

பெருநாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒலன்டா ஹுமாலா மற்றும் அவரது மனைவி ஆகியோரை கைது செய்யுமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  பணச்சலவை மற்றும் இலஞ்ச பெற்றுக்கொண்டமை போன்ற குற்றச்சாட்டு தொடர்பில் அவர்களை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக முன்னாள் ஜனாதிபதியினால் பணம் செலவிடப்பட்ட விதம் தொடர்பில் சிக்கல் நிலவுவதாக வெளிநாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை இடம்பெற்றுவரும் நிலையிலேயே இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

201707131540340057_Dileep-now-linked-to-Kalabhavan-Manis-death-after-fresh_SECVPF

நடிகை பாவனாவை தாக்கி நிர்வாண புகைப்படங்களை எடுக்க விரும்பினார் திலீப் – பொலிஸ் விசாரணையில் தெரிவிப்பு; கலா­பவன் மணி மர­ணத்தில் நடிகர் திலீப்­புக்கு தொடர்பிருப்பதாக கூறும் இயக்­குநர் பைஜூ

நடிகர் திலீப்­பிடம் இரண்­டா­வது நாளாக பொலிஸார் விசா­ரணை நடத்தி வரு­கின்ற நிலையில், நடிகர் திலீப் நடிகை பாவ­னாவை தாக்கி நிர்­வாண  புகைப்­ப­டங்­களை பெற விரும்­பி­ய­தாக கேரள பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். நடிகை பாவனா கடந்த பெப்­ர­வரி மாதம் மர்ம நபர்­களால் காரில் கடத்­தப்­பட்டு பாலியல் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளாக்­கப்­பட்டார். சுமார் 2 மணி நேர துன்­பு­றுத்­த­லுக்குப் பிறகு அவர் விடு­விக்­கப்­பட்டார்.  இது­தொ­டர்­பாக தனிப்­ப­டைகள் அமைக்­கப்­பட்டு  பொலிஸார் தீவிர விசா­ரணை மேற்­கொண்­டனர். இதன் விளை­வாக அண்­மையில் முக்­கிய குற்­ற­வா­ளி­யான பல்சர் சுனில் […]