‘சவூதி பெண்கள் அபாயா அணியத் தேவையில்லை’ – சிரேஷ்ட மதகுரு தெரிவிப்பு

பெண்கள் பொது இடங்­களில் தமது உடலை மறைக்கும் விதத்தில் அபாயா அணியத் தேவை­யில்லை என சவூதி அரே­பி­யாவின் சிரேஷ்ட மத­குரு ஒருவர் தெரி­வித்­துள்ளார். சவூதி அரே­பி­யாவின் அதி உயர் இஸ்­லா­மிய மதப் பேர­வையின் உறுப்­பி­ன­ரான ஷேக் அப்­துல்லா அல் முத்­தலாக் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். உள்­நாட்டு ஊட­க­மொன்­றுக்கு இது குறித்து அவர் கூறு­கையில், ‘‘உல­கி­லுள்ள 90 சத­வீ­தத்­துக்கும் அதி­க­மான முஸ்லிம் பெண்கள் அபாயா அணி­வ­தில்லை. எனவே, எமது பெண்­களை அபாயா அணி­யும்­படி கட்­டா­யப்­ப­டுத்­தக்­கூ­டாது’’ எனத் தெரி­வித்­துள்ளார். இந்தக் கருத்­துக்கு […]

தமது அனர்த்த நிவாரணப் பணியாளர்கள் ஹெயிட்டியில் விபசாரத்தில் ஈடுபட்டதை ஒக்ஸ்பாம் ஒப்புக்கொண்டது

ஹெயிட்­டியில் 2010 ஆம் ஆண்டு ஏற்­பட்ட நில­ந­டுக்­கத்­தை­ய­டுத்து, அங்கு நிவா­ரண நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருந்த தமது பணி­யா­ளர்கள் பெண்­க­ளுடன் விபசாரத்தில் ஈடு­பட்­டதை அந்த ஒக்ஸ்பாம் சர்வதேச தொண்டு நிறுவனம் ஒப்­புக்­கொண்­டி­ருக்­கி­றது. இது தொடர்­பாக பிரித்­தா­னி­யாவின் டைம்ஸ் பத்­தி­ரிகை அண்­மையில் செய்தி வெளி­யிட்­டது. இதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை மூடி­ம­றைக்கப்பட­வில்லை எனக் கூறி­யுள்ள ஒக்ஸ்பாம் அது பற்றி விசா­ரணை நடத்­தப்­பட்­ட­தா­கவும் தெரி­வித்­துள்­ளது. நிவா­ரணப் பணி­க­ளுக்குப் பொறுப்­பாக இருந்த ஒக்ஸ்பாம் சர்வதேச தொண்டு நிறுவனத்தின் பணிப்­பாளர் உட்­பட ஏனைய பணி­யா­ளர்கள் தமது […]

71 பேருடன் பயணித்த ரஷ்ய விமானம் விபத்து

ரஷ்யாவில் நேற்று 71 பேருடன் பயணித்த விமானமொன்று விபத்துக்குள்ளாகி வீழ்ந்துள்ளது. சராடோவ் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அன்டனோவ் என் 148 ரகத்தைச் சேர்ந்த இவ்விமானம் மொஸ்கோ நகரிலிருந்து ஓர்ஸ்க் நகரை நோக்கி புறப்பட்டு சில நிமிடங்களில் வீழ்ந்தது. இவ்விமானத்தில் 65 பயணிகள் இருந்தனர். இச்சம்பவத்தில் எவரும் உயிர்தப்பியிருக்க வாய்ப்பில்லை என ரஷ்யாவின் அவசர சேவைப் பிரிவைச் சேர்ந்த வட்டாரமொன்று தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

சசிகலாவை ஓரம் கட்டி தனிக்கட்சி ஆரம்பிப்பதற்கு டி.டி.வி.தினகரன் திட்டம்?

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிக்கப்பட்ட வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசி கலாவை ஓரங்கட்டி தனிக்கட்சி ஆரம்பிப்பதற்கு அவரது அக்கா மகனான டி.டி.வி.தினகரன் திட்ட மிட்டுள்ளதுடன், இது குறித்து, தனக்கு நெருக்கமானவர்களுடன் முக்கிய ஆலோசனையும் நடத்தி யுள்ளார் என டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து தெரி வித்துள்ளதாவது, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை மேல்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி வந்தாலும் ஆட்சிக்கு ஆபத்து […]

கணவனுக்காக 3 பேரை கொலை செய்த பெண்ணொருவர் 4ஆவது கொலைக்காக சதித்திட்டம் தீட்டியபோது கைது!

தனது கணவனுக்காக 3 பேரை கொலை செய்த இந்தியாவின் புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் 4ஆவது கொலைக்காக சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருந்தபோது 14 பேருடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காரைக்கால் வியாபாரியான ராமுவுக்கு இரண்டு மனைவிகள். ஒரே வீட்டில் தங்கியிருந்த அவர்களுக்குள் நீண்ட நாட்களாக குடும்ப பிரச்சினைகள் இருந்து வந்துள்ளன. ஒரு கட்டத்தில் இரண்டாவது மனையுடன் மட்டும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் முதல் மனைவி முவை பிரிந்துள்ளார். இதையடுத்து ராமு, இரண்டாவது மனைவி […]