சில்வஸ்டர் ஸ்டலோன் பலாத்காரம் செய்துவிட்டார்: பெண் பரபரப்பு புகார்

ஹொலிவூட்நடிகர் சில்வஸ்டர் ஸ்டலோன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். ஹொலிவூட்தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், சிலரை பலாத்காரமும் செய்துள்ளார். இதையடுத்து நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் #MeToo என்ற ஹேஷ்டேக்குடன் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் பற்றி தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பெண் ஒருவர்  நடிகர் ஸ்டலோன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.சில்வஸ்டர் ஸ்டலோன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் […]

நோ சொல்லி பழகுங்க.. ‘அட்ஜெஸ்ட்மெண்ட்’ பற்றி அர்த்தனாவின் வெளிப்படை பேச்சு

சினிமா மட்டுமல்ல எல்லாத் துறையிலும் அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது இருக்கிறது. ஆனால் பெண்கள் அதற்கு நோ சொன்னால் மட்டுமே, அதனை தவிர்க்க முடியும் எனத் தெரிவித்துள்ளார் நடிகை அர்த்தனா. சமுத்திரக்கனியின் தொண்டன் படம் மூலம் தமிழில் தங்கை கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை அர்த்தனா. அதன் தொடர்ச்சியாக வள்ளிகாந்த் இயக்கத்தில் வெளியான செம படம் மூலம் நாயகியானார். தற்போது வெண்ணிலா கபடிக் குழு -2 படத்தில் நடித்து வரும் அர்த்தனா, திரைத்துறையில் உள்ள பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாகப் பேசி […]

பிக்பாஸ் 2 போட்டியாளர்களே… இப்போ புரியாது… வீட்டுக்குள்ள போங்க, தெரியும்!” – ஹரிஷ் கல்யாண்

சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் `பிக் பாஸ்’ மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ஹரிஷ் கல்யாண், தற்போது `பியார் பிரேமா காதல்’ மூலம் சினிமாவில் கம்பேக் கொடுக்கவிருக்கிறார். பிக் பாஸ் சீஸன் 2 தொடங்கவிருக்கும் நிலையில், பிக் பாஸ் அனுபவம் குறித்தும், அடுத்தடுத்த திட்டங்கள் குறித்தும் அவர் தெரிவித்துள்ளது வருமாறு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அப்புறம்தான் வாழ்க்கையே நல்லா இருக்கு. வெளியே போகும்போது மக்களுக்கு நான் யார்னு தெரிஞ்சிருக்கு. படத்துல நடிக்கிறதுக்கான வாய்ப்பு கிடைச்சிருக்கு. இந்த அனுபவம் நிறைய பாடங்களைக் கத்துக்கொடுத்துருக்கு. […]

புதிய அவதாரம் எடுக்கும் தீபிகா படுகோனே

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே, புதிய அவதாரம் எடுக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி நடிகர்கள் பலர் படங்கள் தயாரிக்கிறார்கள். நடிகைகளுக்கும் இந்த ஆசை வந்து தயாரிப்பில் இறங்க கதை கேட்கிறார்கள். இந்நிலையில், நடிகை தீபிகா படுகோனே விரைவில் தயாரிப்பாளராக மாறப்போவதாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- “பட நிறுவனம் தொடங்கி தயாரிப்பாளராக முடிவு செய்துள்ளேன். படங்கள் தயாரிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாக […]

கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிப்பதில் தவறில்லை : ‘எக்ஸ் வீடியோஸ்’ அக்ரிதி சிங்

கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிப்பதில் தவறில்லை எனத் தெரிவித்துள்ளார் எக்ஸ் வீடியோஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ள நடிகை அக்ரிதி சிங். புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி, கடந்தவாரம் ரிலீசான படம் ‘எக்ஸ்- வீடியோஸ்’. சஜோ சுந்தர் என்பவர் இயக்கியுள்ள இப்படம், ஆபாச படங்கள் உருவாக்கப்படுவதற்கான பின்புலத்தில் நடக்கும் குற்றங்களின் பின்னணியைப் பற்றி பேசுகிறது. இப்படத்தின் நாயகி அக்ரிதி சிங், ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். முதல் படத்திலேயே இவ்வளவு துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்துள்ள அக்ரிதி  […]