பதக்கம் வென்ற பிரபலத்தின் வாரிசு

கோலிவுட் மற்றும் பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் மாதவன். இறுதியாக இவர் நடித்து தமிழில் வெளியான இறுதிச் சுற்று மற்றும் விக்ரம் வேதா படங்கள் ரசிகர்களை கவரும் விதமாக அமைந்திருந்தது. இவருக்கு ஒரு மகன் உள்ளார். அவர் பெயர் வேதாந்த் மாதவன். 12 வயதுமிக்க அவர் தாய்லந்தில் நடைபெற்ற சர்வதேச 1500 மீட்டர் ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் இந்தியாவுக்காக நேற்று ‍செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.   இதை சமூக வலைத்தளங்களில் […]

விஜய் ஆன்டனியின் காளி படத்தை வெளியிட இடைக்கால தடை

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள படம் காளி. இப்படத்தை கதைவசனம் எழுதி கிருத்திகா உதயநிதி இயக்கி உள்ளார். இப்படத்தை ரீலீஸ் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. விஜய் ஆண்டனி நடித்து வெளியான அண்ணாதுரை படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை பிக்சர் பாக்ஸ் கம்பெனியின் உரிமையாளர் அலெக்சாண்டர் வாங்கி ரீலீஸ் செய்தார். படம் நன்றாக வந்துள்ளது என விஜய் ஆண்டனி கூறியதை நம்பி அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளார். படம் ரீலீஸ் […]

திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி தற்போது, ‘ஜுங்கா,’ ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார். ‘ஜுங்கா’ படத்தின் படப்பிடிப்புக்காக அவர் போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்றார். ‘‘அங்கே படப்பிடிப்பு நடத்த ஏற்கனவே அனுமதி பெற்று விட்டதால், பட அதிபர்களின் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க முடியவில்லை. திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்த வேண்டிய சூழ் நிலையில் இருக்கிறேன்’’ என்று விஜய் சேதுபதி விளக்கம் சொன்னார். அவர் நடிக்கும் இன்னொரு படம், ‘சூப்பர் டீலக்ஸ்.’ இந்த படத்தில், அவர் திருநங்கையாக நடிக்கிறார். முற்றிலும் […]

சல்மான்கானுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் 1998-ம் ஆண்டு இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் தனது படப்பிடிப்பில் இருந்தார். அப்போது அவர் தடை செய்யப்பட்டுள்ள அபூர்வ இன கருப்பு மான் வேட்டையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருடன் படப்பிடிப்புக்கு சென்றிருந்த நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம், நடிகர் சயீப் அலிகான் உள்ளிட்டவர்களும் இந்த வழக்கில் சிக்கினர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இவ்வழக்கில் தீர்ப்பளித்த ராஜஸ்தான் ஐகோர்ட், சல்மான் கான் மான் வேட்டை ஆடியதற்கு போதிய ஆதாரங்கள் […]

சேற்றில் பிணமாக கிடந்த பிரபல ஹாலிவுட் நடிகை

பிரபல ஹாலிவுட் நடிகை அதியா ஷபானி. மாசிடோனியாவை சேர்ந்த இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வீடு எடுத்து தங்கி படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் அதியா ஷபானி கடந்த பிப்ரவரி மாதம் திடீரென்று மாயமானார். பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து பொலிஸில் புகார் அளித்தனர். பொலிஸார், அவரை தேடி வந்தார்கள். இந்த நிலையில் அதியா தங்கி இருந்த வீட்டில் இருந்து 645 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் அரைகுறையாக மூடப்பட்ட […]