கூகுள் க்ரோமில் புதிய அம்சங்கள் இணைப்பு; சத்தமின்றி வேலை பார்த்த கூகுள்.

கூகுள் தனது ஜிமெயில் பயன்பாட்டை இன்னும் எளிமையாக மற்றும் யூஸர் பிரெண்ட்லியாக மாற்றும் முனைப்பின் கீழ், அதன் வெப் வெர்ஷன் மற்றும் மொபைல் ஆப் வெர்ஷனில், க்விக் ரிப்ளை, ஆப்லைன் சப்போர்ட் போன்ற பல அம்சங்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலைபாட்டில், சத்தமின்றி கூகுள் க்ரோம் அப்டேட்டை நிகழ்த்தியுள்ளது. அதன் மேக், விண்டோஸ், லினக்ஸ் மற்றும் ஆண்ட்ராய்டு உள்ளிட்ட அனைத்து மேடைகளுக்கான க்ரோம் 66 அப்டேட்டை கூகுள் நிறுவனம் உருட்டியுள்ளது. இந்த சமீபத்திய வெப் ப்ரவுஸர் […]

வாட்ஸ் அப்பில் நீக்கப்பட்ட ஃபைல்களை திரும்பப் பெறலாம்

ஆன்ட்ராய்ட் போன்களில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலியில் புதிதாக ஒரு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சத்தின்படி பயனாளர்கள் நீக்கப்பட்ட மீடியா பைல்களை மீண்டும் பதிவிறக்கம் செய்ய முடியும். இதற்கு முன்னர் வாட்ஸ்அப்பில் இருந்து அழிக்கப்பட்ட தகவல்களை மீண்டும் பெற முடியாது. ஆனால் WABetainfo மூலம் நீக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் வாய்ஸ் மெசேஜ்கள் அனைத்தையும் திரும்பப் பெற முடியும். இந்த புதிய அம்சமானது 2.18.106 மற்றும் 2.18.110க்கு இடைப்பட்ட வாட்ஸ் அப் அப்டேட்டுகளில் சேர்க்கப்படும் என்று […]

தெற்கு பசிபிக் கடலில் விழுந்தது சீன விண்வெளி நிலையம்

சீனா 2011-ம் ஆண்டு ஏவிய ‘டியான்காங்-1’ என்ற விண்வெளி நிலையம் செயலற்றுப்போய்விட்டதாக சீனா கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ந்தேதி அறிவித்தது. அதன்பின்னர் விண்வெளியில் கட்டுப்பாடற்று சுற்றி வந்துகொண்டிருந்த இந்த விண்வெளி நிலையம் பூமியை நோக்கி வரத் தொடங்கியது. விண்வெளி நிலையத்தின் சில பாகங்கள் இன்று (திங்கட்கிழமை) பூமியில் வந்து விழும் என்று விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். மார்ச் 30-ம் திகதியில் இருந்து ஏப்ரல் 2-ம்   டியான்காங்-1 ஆராய்ச்சி நிலையம், பூமியில் விழும் என ஐரோப்பிய விண்வெளி […]

போலி பேஸ்புக் கணக்குகள் முடக்கம்

இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களிலும் 529 பேஸ்புக் கணக்குகளை முடக்குவதற்கு பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. ​போலி கணக்குகளை ஆரம்பித்தல், பேஸ்புக் கணக்குகள் மூலம் நிதி மோசடியில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றச் செயல்களை அடிப்படையாகக் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கனிணி அவசர பிரிவின் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார். கடந்த வருடம் பேஸ்புக் தொடர்பான முறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டு, 3600 பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டதாக, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உலக இணையசேவை வேகத்தரப்படுத்தலில் முன்னேறிய இலங்கை..!

உலக இணையசேவை வேகத்தரப்படுத்தலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது. இதன்படி கையடக்கப் பேசிகளுக்கான இணைய வேகத்தில், உலக அளவில் இலங்கை 15 இடங்களில் முன்னேறி, 82வது இடத்தில் உள்ளது. கையடக்கபேசியூடான இணைய சேவையின் தரவிறக்க வேகம் நொடிக்கு 16.08 மெகாபைட்டாக காணப்படுகிறது. நிலையான தொலைபேசி வழி இணைய சேவை வழங்குதலில் இலங்கை ஒரு இடம் முன்னேறி, 76வது இடத்தில் உள்ளது. இந்த தரப்படுத்தல் பட்டியலில் முதலாம் இடத்தில் நோர்வே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் உள்ளன.