போலி பேஸ்புக் கணக்குகள் முடக்கம்

இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களிலும் 529 பேஸ்புக் கணக்குகளை முடக்குவதற்கு பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. ​போலி கணக்குகளை ஆரம்பித்தல், பேஸ்புக் கணக்குகள் மூலம் நிதி மோசடியில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றச் செயல்களை அடிப்படையாகக் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கனிணி அவசர பிரிவின் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார். கடந்த வருடம் பேஸ்புக் தொடர்பான முறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டு, 3600 பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டதாக, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உலக இணையசேவை வேகத்தரப்படுத்தலில் முன்னேறிய இலங்கை..!

உலக இணையசேவை வேகத்தரப்படுத்தலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது. இதன்படி கையடக்கப் பேசிகளுக்கான இணைய வேகத்தில், உலக அளவில் இலங்கை 15 இடங்களில் முன்னேறி, 82வது இடத்தில் உள்ளது. கையடக்கபேசியூடான இணைய சேவையின் தரவிறக்க வேகம் நொடிக்கு 16.08 மெகாபைட்டாக காணப்படுகிறது. நிலையான தொலைபேசி வழி இணைய சேவை வழங்குதலில் இலங்கை ஒரு இடம் முன்னேறி, 76வது இடத்தில் உள்ளது. இந்த தரப்படுத்தல் பட்டியலில் முதலாம் இடத்தில் நோர்வே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் உள்ளன.

பேஸ்புக் மீதான தடையை உடன் நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை உடன் அமுலுக்கு வரும் வரையில் நீக்குமாறு தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார். இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்படுவதை தடுக்கும் நோக்கில் சில தின்களாக பல சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்தன. கடந்த செவ்வர்யக்கிழமை 13 ஆம் திகதி வைபர் மீதான தடை நீக்கப்பட்டது. நேற்று நள்ளிரவு; வட்ஸ்அப் மீதான தடையும் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்

பிரிட்டனைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலை தனது 76 ஆவது வயதில் காலமானார்.   பௌதிகவியல் விஞ்ஞானியான ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங். அண்டவியல் (cosmology) மற்றும் குவாண்ட்டம் ஈர்ப்பு (quantum gravity) ஆகிய ஆய்வுத்துறையில், உலகின் மிகவும் முக்கியமான கோட்பாட்டு பௌதிகவியலாளர்களில் ஒருவராக விளங்கினார். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரிலுள்ள தனது வீட்டில் அவர் இறந்தார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.  

செவ்வாய்க் கிரகத்தை நோக்கி அனுப்பப்பட்ட கார் (வீடியோ இணைப்பு)

செவ்வாய்க் கிர­கத்தை நோக்கி ஆடம்­பரக் கார் ஒன்று இன்று புதன்கிழமை விண்­வெ­ளிக்கு அனுப்­பப்­பட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) தனியார் நிறு­வ­னத்­தினால் தயா­ரிக்­கப்­பட்ட ஃபால்கன் ஹெவி (Falcon Heavy) எனும் விண்­வெளி ரொக்கெட் இன்று முதல் தட­வை­யாக ஏவப்­ப­ட்டுள்­ளது. அமெ­ரிக்­காவின் புளோ­ரிடா மாநி­லத்­தி­லுள்ள கேப் கனே­வரெல் நக­ரி­லுள்ள கென்­னடி விண்­வெளி நிலை­யத்­தி­லி­ருந்து அமெ­ரிக்க நேரப்­படி செவ்வாய் பிற்­பகல் 3.45 மணிக்கு (இலங்கை நேரப்­படி இன்று புதன் அதி­காலை 2.15) இந்த ரொக்கெட் ஏவப்­பட்டுள்ளது. வழ­மை­யாக சோத­னை­யாக ஏவப்­படும் ரொக்­கெட்­டு­களில் […]