பிகினியில் உலாவரும் ராய் லட்சுமி: படம் உள்ளே…!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. இவர் பாலிவுட்டிலும் தற்போது என்ட்ரி கொடுத்துள்ளார். ராய் லட்சுமி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பக்கா ட்ரெடிஷனல் லுக்கில் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றி இருந்தார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் பழைய படி கடற்கரையில் படுகவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

நயன்தாராவுக்கு திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா?

  தென்னிந்திய மொழிகளில் மலையாள பட உலகம்தான் மூத்த நடிகைகளுக்கு சொர்க்கம். திருமணத்துக்கு பின் 40 வயதுகளில் கூட கதாநாயகிகள் வேடங்கள் கிடைக்கின்றன. கதைகளையும் வலுவாக உருவாக்குகிறார்கள். மற்ற மொழிகளில் திருமணமான நடிகைகளை அக்கா, அண்ணி வேடங்களுக்கு முத்திரை குத்திவிடுவார்கள். தமிழ், தெலுங்கு அளவுக்கு மலையாளத்தில் சம்பளம் கிடைக்காது. ஆனாலும் கதாநாயகிகள் தனித்து திறமையை வெளிப்படுத்த முடியும். தமிழில் ஆறு படங்கள் கைவசம் வைத்து நம்பர்-1 நடிகையாக திகழும் நயன்தாரா அடுத்தடுத்து மலையாளத்தில் படங்கள் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். […]

அமெரிக்க பாடசாலைகளில் நிற பாகுபாட்டை ஒழிக்க காரணமான பெண் மரணம்

அமெரிக்க பாடசாலைகயில் நிறப்பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவரும் வரலாற்று முக்கியம் வாய்ந்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு காரணமாக இருந்த லின்டா பிரவுன் தனது 75 ஆவது வயதில் காலமானார். ஆபிரிக்க அமெரிக்க சிறுமியான பிரவுனுக்கு 1951இல் வெள்ளையின ஆரம்ப பாடாசலையில் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அவரது தந்தை தொடுத்த வழக்கு அமெரிக்க பாடசாலைகளில் நிறப்பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவந்தது. கென்சாசில் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆரம்ப பாடசாலையில் அனுமதி மறுக்கப்பட்ட லின்டா பிரவுன் இரண்டு மைல்களுக்கு அப்பால் இருக்கும் […]

உலகின் மிகச் சிறந்த ஆசிரியருக்கான விருதுடன் 15 கோடி ரூபா பரிசை வென்ற பிரித்தானிய ஆசிரியை அன்ட்ரியா ஸஃபீராகோ: தமிழ் உட்பட 35 மொழிகளைப் பேசுகிறார்

உலகின் மிகச் சிறந்த ஆசி­ரி­ய­ராக பிரிட்­டனைச் சேர்ந்த ஆசி­ரியை அன்ட்­ரியா ஸஃபீ­ராகோ தெரிவு செய்­யப்­பட்டு 10 இலட்சம் அமெ­ரிக்க டொலர் (சுமார் 15 கோடி ரூபா) பரிசை வென்­றுள்ளார். துபாயில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற வைப­வ­மொன்றில் அன்ட்­ரியா ஸஃபீ­ராகோ­வுக்கு மிகச் சிறந்த ஆசி­ரியர் விருது வழங்­கப்­பட்­டது. இந்­தியத் தொழி­ல­தி­ப­ரான சன்னி வர்­கி­யினால் ஸ்தாபிக்­கப்­பட்ட வர்கி மன்­ற­மா­னது, குளோபல் எடி­யூ­கேஷன் அன்ட் ஸ்கில்ஸ் ஃபோரம் எனும் விழாவை வரு­டாந்தம் நடத்தி, உலகின் சிறந்த ஆசி­ரி­ய­ருக்­கான விருதை வழங்­கு­கி­றது. இம்­முறை 4 […]

புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்

பிரிட்டனைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலை தனது 76 ஆவது வயதில் காலமானார்.   பௌதிகவியல் விஞ்ஞானியான ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங். அண்டவியல் (cosmology) மற்றும் குவாண்ட்டம் ஈர்ப்பு (quantum gravity) ஆகிய ஆய்வுத்துறையில், உலகின் மிகவும் முக்கியமான கோட்பாட்டு பௌதிகவியலாளர்களில் ஒருவராக விளங்கினார். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரிலுள்ள தனது வீட்டில் அவர் இறந்தார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.