பின்னோக்கி செலுத்தப்பட்ட கார் மற்றொரு காரின் மீது ஏறியது

சாரதி ஒருவர் தனது காரை பின்­னோக்கிச் செலுத்­தி­ய­போது, மற்­றொரு காரின் மீது அக்கார் ஏறிய சம்­பவம் பிரிட்­டனில் இடம்­பெற்­றுள்­ளது. பிளைமௌத் நகர குடி­யி­ருப்புப் பகு­தி­யொன்றில் கடந்த சனிக்­கி­ழமை இரவு 11 மணி­ய­ளவில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றது. காரை பின்­னோக்கிச் செலுத்­தி­யவர் ஒரு மாணவர் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அவர் செலுத்­திய கார் நிறுத்­தப்­பட்­டி­ருந்த காரொன்றின் மீதே ஏறி­யது. இச்­சம்­ப­வத்தில் எவரும் காய­ம­டை­ய­வில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

459 உறிஞ்சல்குழாய்களை வாயில் வைத்திருந்து சாதனை படைத்த இளைஞர்

இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஒரே தடவையில் 459 உறிஞ்சல் குழாய்களை (ஸ்ட்ரோ) தனது வாயில் வைத்திருந்து உலக சாதனை படைத்துள்ளார். ஓடிஷா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் மஹாராணா எனும் 23 வயதான இளைஞரே இச் சாதனையை படைத்துள்ளார். இந்தியாவின் மும்பை நகரில் இந் நிகழ்வு நடைபெற்றது. 8 வருடங்களுக்கு முன் பிரித்தானியரான சிமோன் எல்மோர் என்பவர், ஜேர்மனியில் நடைபெற்ற கண்காட்சி யொன்றின்போது 400 உறிஞ்சல் குழாய்களை வாயில் வைத்திருந்தமையே இதுவரை சாதனையாக இருந்தது. கின்னஸ் […]

பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெறுவதற்காக தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபடுமாறு மாணவர்களை நிர்ப்பந்தித்த ஆசிரியை கைது!

பரீட்­சையில் அதிக புள்­ளி­களைப் பெற வேண்­டு­மானால் தன்­னுடன் பாலியல் உறவில் ஈடு­பட வேண்­டு­மென பாட­சாலை மாண­வர்­களை நிர்ப்­பந்­தித்த ஆசி­ரியை ஒருவர் கொலம்­பியா அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். 40 வய­தான யோகஸ்ட்டா எனும் இப்பெண், கொலம்­பியா நாட்டின் தலை­நகர் மெட­லி­னி­லுள்ள பாட­சா­லை­யொன்றில் ஆசி­ரி­யை­யாக பணி­யாற்­றி­யவர். அப்­பா­ட­சா­லையில் தன்­னிடம் கல்வி கற்ற 16, 17 வய­தான மாண­வர்கள் பரீட்­சையில் அதிக புள்­ளி­களைப் பெற வேண்­டு­மானால் தன்­னுடன் பாலியல் உறவில் ஈடு­பட வேண்­டு­மென கோஸ்ட்டா நிர்ப்­பந்­தி­த்தார் என குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ளார். இவர், […]

பொலிஸ் மா அதிபரின் பெயரை கூறி முச்சக்கரவண்டிகளுக்கு போலி ஸ்டிக்கர் ஒட்டி பணம் வசூலித்த நபர்கள்

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இரா­மச்­சந்­திரன்) பொலிஸ் மா அதி­பரின் பெயரை கூறி ஹட்டன் நக­ரி­லுள்ள முச்­சக்­க­ர­வண்­டி­க­ளுக்கு ஸ்டிக்கர் ஒட்டி பணம் வசூ­லித்த சம்­ப­வ­மொன்று இடம் பெற்­றுள்­ளது. கடந்த சனிக்­கி­ழமை, ஹட்டன் டன்பார் பகு­தி­களில் தரித்து நின்ற முச்­சக்­க­ர­வண்­டி­க­ளிலே இனம் தெரி­யாத இருவர் இவ்­வாறு ஸ்டிக்­கர்­களை ஒட்டி தலா ரூபா 150 பணம் வசூ­லித்­துள்­ளனர். பொலிஸ் மா அதி­பரின் ஆலோ­ச­னைக்­க­மைய ஹட்டன் பொலிஸ் பிர­தே­சத்­துக்­குட்­பட்ட பகு­தி­களில் சேவையில் ஈடு­படும் முச்­சக்க­ர­வண்­டி­க­ளுக்கு இந்த ஸ்டிக்­கர்கள் ஒட்­டப்­ப­டு­வ­தாக மேற்­படி நபர்கள் தெரி­வித்­தி­ருந்­தனர். […]

சலவை இயந்திரத்துக்குள் பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்த பெண்

பிரேஸிலைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது வீட்டிலுள்ள சலவை இயந்திரத்துக்குள்; 7 அடி நீளமான பாம்பொன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பிரேஸிலில் சல்வேடார் நகரில் வசிக்கும் ஷேர்லி ஒலிவேரா எனும் 46 வயதான பெண்ணுக்கே இந்த அதிர்ச்சி அனுபவம் ஏற்பட்டுள்ளது. ஒரு சிறுமியின் தாயான இப்பெண், சலவை இயந்திரத்தின் உள்ளேயிருந்து விசித்திரமான சத்தம் வருவதை உணர்ந்து சலவை இயந்திரத்தை திறந்தபோது மேற்படி பாம்பைக் கண்டார். “சலவை இயந்திரத்தின் ட்ரம் பகுதிக்குள் மேற்படி பாம்பு சுருண்டு கிடந்தது. தனது தலையை […]