பிரிட்டன் தேர்தலில் பெரும்பான்மையை இழந்தது கன்சர்வேட்டிவ் கட்சி

பிரித்தானியாவில் நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சியுக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அங்கு கூட்டரசாங்கம் அமையும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது. மொத்தமான 650 ஆசனங்களில் நேற்று மாலை வரை வெளியான முடிவுகளின் பிரகாரம் கன்சர்வேட்டிவ் கட்சி 318 ஆசனங்களையும் தொழிற்கட்சி 261 ஆசனங்களையும் வென்றிருந்தன. மக்கள் சபையின் 365 ஆசனங்களுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கென நடத்தப்பட்ட இந்தத் தேர்தலில் கன்சவேட்டிவ் கட்சி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் பெரும்பான்மையை அது பெறத் தவறிவிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா […]

ஐ.சி.சி. புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் முரளி

சர்வதேச கிரிக்கெட் பெரவையின் புகழ்பூத்த வீரர்களுக்கான பட்டியலில் முத்தையா முரளிதரன் உள்வாங்கப்பட்டதற்கான உத்தியோகபூர்வ ஆவணம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரியினால் லண்டன், கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் வைத்து வழங்கப்பட்டது. இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது இந்த நிகழ்வு நடைபெற்றது. புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் இடம்பெறும் முதலாவது இலங்கையர் முரளிதரன் ஆவார்.

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணம் குழு பி: கடினமான 322 ஓட்டங்களை விரட்டிப் பிடித்து இந்தியாவை அதிரவைத்த இலங்கை

வெற்றிவாய்ப்பு குன்றிய அணி என தன்னைத்தானே சொல்லிக்கொண்ட இலங்கை அணி, கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் வியாழனன்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான சம்பியன்ஸ் கிண்ண குழு பி போட்டியில் ஆக்ரோஷத்துடன் விளையாடி 7 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது. இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 322 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு இளமைத் துடிப்புடனும் உத்வேகத்துடனும் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.4 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 322 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது. ஆரம்பத் துடுப்பாட்டக்காரர் நிரோஷன் திக்வெல்ல […]

வெள்­ளி­விழா மைலோ ஜனா­தி­பதி கிண்ண றக்பி; புனித ஜோசப், வெஸ்லி இன்று சந்­திக்­கின்­றன

(நெவில் அன்­தனி) இலங்கை பாட­சா­லைகள் றக்­பி­ கால்­பந்­தாட்ட சங்கம் 33ஆவது வரு­ட­மாக நடத்தும் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான நொக் அவுட் றக்பி போட்­டிகள், இன்று நடை­பெ­ற­வுள்ள புனித ஜோசப் அணிக்கும், வெஸ்லி அணிக்கும் இடை­யி­லான கால் இறுதிப் போட்­டி­யுடன் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இப் போட்டி கொழும்பு சுக­த­தாச விளை­யாட்­ட­ரங்கில் இன்று பிற்­பகல் 4.00 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. 1985இல் பிரே­ம­தாச கிண்­ணத்­திற்­காக ஆரம்­பிக்­கப்­பட்ட இப் போட்டி 1993இல் நெஸ்ட்லே லங்கா லிமிட்­டெட்டின் அனு­ச­ர­ணை­யுடன் மைலோ ஜனா­தி­பதி கிண்ணப் போட்­டி­யாக பெயர் மாற்றம் […]

பெண்­க­ளின் முதல் காதலைப் பற்றி இந்தப் படம் பேசும்… – ‘ஜெமினி கணே­சனும் சுரு­ளி­ரா­ஜனும்’ குறித்து இயக்­கு­நர் ஓடம் இள­வ­ரசு

அதர்­வா­கிட்ட கதை சொல்லப் போனேன். பத்து நிமிஷம் கடந்­தி­ருக்கும். அவர் முகம் மலர்ந்­தி­டுச்சு. அதே ஸ்பீடுல கிளைமேக்ஸ் வரை சொல்லி முடிச்சேன். ஆனந்­த­மா­கிட்டார். ‘கண்­டிப்பா பண்றேன் சார்’னு உடனே ரெடி­யானார்.  கூடவே இன்­னொண்ணும் சொன்னார். ‘நீங்க கதை சொல்­றப்ப எங்­கப்பா (முரளி) சொன்ன ஒரு விஷயம் ஞாப­கத்­துக்கு வந்­தது. ஒரு படத்­தோட கதையை கேட்க ஆரம்­பிச்ச பத்­தா­வது நிமி­ஷமே ‘இது நமக்கு செட் ஆகுமா ஆகா­தா’னு மன­சுல தோணி­டணும். கிளை­மேக்ஸை கேட்­டதும்… ‘கண்­டிப்பா இதை மிஸ் பண்­ணி­டக்­கூ­டா­து’னு […]