தொலைக்­காட்சி நிகழ்ச்சி தொகுப்­பா­ள­ருடன் நடிகர் ஷாருக்கான் கடும் மோதல்

அபு­தா­பியில் தொலைக்­காட்சி நிகழ்ச்சித் தொகுப்­பாளர் ஒரு­வ­ருடன் நடிகர் ஷாருக் கான் மோதிய சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றது. ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் உள்ள பிர­ப­ல­மான பொழு­து­போக்கு அரபு தொலைக்­காட்சி அலை­வ­ரிசை நிகழ்ச்சி தொகுப்­பா­ள­ராக எகிப்­திய நடிகர் ரமீஸ் கலால் உள்ளார்.   இவர் நடத்தும் ‘ரமீஸ் பி ஏலா அப் பித் நார்’ எனும் வேடிக்­கை­யாக அச்­சு­றுத்தும் நிகழ்ச்­சி­யா­னது பொது­மக்­க­ளி­டையே மிகவும் பிர­பலம். பொது இடத்தில் போலி­யாக பயங்­க­ர­வா­தி­களை உரு­வாக்கி தனி­ந­பர்­களை உண்­மையில் கடத்திச் செல்­வ­து­போல காட்­சிகள் அமைத்து […]

மிஷன் இம்பொஸிபிள் 6 ஆக்ரோஷமானதாக இருக்கும் – நடிகர் டொம் குரூஸ்

மிஷன் இம்­பொ­ஸிபிள் திரைப்­பட வரி­சையின் 6 ஆவது படம் மிக ஆக்­ரோ­ஷ­மா­ன­தாக அமைந்­தி­ருக்கும் என நடிகர் டொம் குரூஸ் கூறி­யுள்ளார். மிஷன் இம்­பொ­ஷிபிள் படத்தின் 6 ஆவது பாகத்தில் தற்­போது டொம் குரூஸ் நடித்து வரு­கிறார். கிறிஸ்­டோபர் மெக்­கோரி இப்­ப­டத்தை இயக்­கு­கிறார்.   2018 ஜூலை 27 ஆம் திகதி இப்­படம் வெளியாகும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில், ஹொலிவூட் நடி­கரல் நடை­பெற்ற வைபவம் ஒன்றில் கலந்­து­கொண்ட டொம் குரூஸ், மிஷன் இம்­பொ­ஸிபிள் 6 படம் குறித்து செய்­தி­யா­ளர்­க­ளிடம் […]

ஈய உருண்டைகளில் தங்க முலாம் பூசி 25 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்த இளைஞனையும் யுவதியையும் தேடி வேட்டை

(புத்­திக விஜ­ய­சூ­ரிய) ஈய உருண்­டை­களில் தங்க முலாம் பூசி தங்க உருண்­டைகள் எனக் கூறி அவற்றை இளைஞர் ஒரு­வ­ருக்கு 25 இலட்சம் ரூபா­வுக்கு விற்­பனை செய்­தார்கள் எனக் கூறப்­படும்  இளை­ஞ­ரையும் யுவ­தி­யையும் கைது செய்­வ­தற்கு அநு­ரா­த­புரம் பொலிஸ் தலை­மை­யக குற்ற விசா­ரணைப் பிரிவி­னர் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர். குறித்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய ஒருவர்  தங்க முலாம் பூசப்­பட்ட ஈய உருண்­டை­களை  இணை­யத்­தளம் ஒன்றில் வெளி­யிட்டு அவற்றை தங்க உருண்­டைகள் என தெரி­வித்­துள்ளார். இதனை கண்­ணுற்ற  பாதிக்­கப்­பட்ட இளைஞர் இது […]

ஜஸ்டின் பைபரின் ‘அழகிய’ உரைக்கு செலீனா கோமஸ் பாராட்டு

இங்­கி­லாந்தின் மன்­செஸ்டர் குண்டுத் தாக்­கு­த­லினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்­பங்­க­ளுக்­கான இசை நிகழ்ச்­சியில் பாடகர் ஜஸ்டின் பைபர் ஆற்­றிய உரை தொடர்­பாக அவரின் முன்னாள் காத­லி­யான பாடகி செலீனா கோமஸ் பாராட்டுத் தெரி­வித்­துள்ளார்.  மன்­செஸ்டர் நகரில் கடந்த மே 22 ஆம் திகதி நடை­பெற்ற அமெ­ரிக்கப் பாடகி அரி­யானா கிராண்­டேயின் இசை நிகழ்ச்­சி­யின்­போது குண்­டு­வெ­டித்­ததால் 22 பேர் கொல்­லப்­பட்­ட­துடன், நூற்­றுக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­தனர்.  இத்­தாக்­கு­தலில் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு  உத­வு­வ­தற்­கான இசை நிகழ்ச்சி ஜூன 4 ஆம் திகதி மன்­செஸ்டர் நகரில் […]

வொண்டர் வுமன் படத்தின் புதிய வசூல் சாதனை

வொண்டர் வுமன் திரைப்படம் புதிய வசூல் சாதனைகளைப் படைத்துள்ளது.  பெற்றி ஜேன்கின்ஸ் எனும் பெண் இயக்­குனர் இயக்­கிய இப்­படம் கடந்த 2 ஆம் திகதி வெளியா­கி­யது.   வட அமெ­ரிக்­காவில் முதல் வாரத்தில் இப்­படம் 13.03 கோடி டொலர்­களை வசூ­லித்­தது. பெண் இயக்­குநர் ஒருவர் இயக்­கிய ஹொலிவூட் திரைப்­ப­ட­மொன்று வட அமெ­ரிக்­காவில் (அமெ­ரிக்கா, கனடா) 10 கோடி டொலர்­க­ளுக்கும் அதி­க­மான தொகையை வசூ­லித்­தமை இதுவே முதல் தட­வை­யாகும்.  இஸ்­ரே­லிய முன்னாள் அழ­கு­ராணி கேல் கடோட் இப்­ப­டத்தில் வொண்டர் […]