சர்­வ­தேச ஒலிம்பிக் குழு, ஒழுக்­க­வியல் ஆணைக்­குழு தலைவர் பத­விக்கு பான் கீ மூனின் பெயர் பிரே­ரிப்பு

சர்­வ­தேச ஒலிம்பிக் குழுவின் ஒழுக்­க­வியல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் பத­விக்கு ஐக்­கிய நாடுகள் சபையின் முன்னாள் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் பிரே­ரிக்­கப்­பட்­டுள்ளார். சர்­வ­தேச ஒலிம்பிக் குழுவின் நிறை­வேற்­றுக்­குழு சபை­யினால் இந்தப் பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.  பேரு தேசத்தின் லீமா நகரில் செப்­டெம்பர் மாதம் நடை­பெ­ற­வுள்ள சர்­வ­தேச ஒலிம்பிக் குழுவின் பொதுக் கூட்­டத்தில் இந்தப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வுள்­ளது. ஒலிம்பிக் நிகழ்ச்­சி­நிரல் 2020 திருத்­தத்­திற்கு அமைய சர்­வ­தேச ஒலிம்பிக் குழுவின் ஒழுக்­க­வியல் ஆணைக்­குழுத் தலை­வரும் அதன் ஏனைய […]

சம்­பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்­டியில் பாகிஸ்தான்! சொந்த மண்ணில் மீண்டும் சரிந்­தது இங்­கி­லாந்து

பிர­தான சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஒன்றில் முதல் தட­வை­யாக சம்­பி­ய­னா­வ­தற்கு இங்­கி­லாந்து எடுத்­துக்­கொண்ட முயற்­சியை முறி­ய­டித்த பாகிஸ்தான், சம்­பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்­டியில் விளை­யாட தகு­தி­ பெற்­றது. இங்­கி­லாந்து தனது சொந்த மண்ணில் மூன்­றா­வது தட­வை­யாக ஐ. சி. சி. சம்­பியன்ஸ் கிண்ணப் போட்­டியில் சாதிக்கத் தவ­றி­யமை குறிப்­பி­டத்­தக்­கது. கார்டிவ் விளை­யாட்­ட­ரங்கில் புத­னன்று நடை­பெற்ற அரை இறுதிப் போட்­டியில் சகல துறை­க­ளிலும் பிர­கா­சித்த பாகிஸ்தான் கிட்­டத்­தட்ட 13 ஓவர்கள் மீத­மி­ருக்க இங்­கி­லாந்தை 8 விக்­கெட்­களால் […]

அமைச்சர் ஜோன் அம­ர­துங்­க­வுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கா­விட்டால் நாடு தழு­விய ரீதியில் போராட்டம் – ஊடக அமைப்­புகள் தெரி­விப்பு

(எம்.சி. நஜி­முதீன்) ஊட­க­வி­ய­லா­ளர்­களை அச்­சு­றுத்­தி­யமை தொடர்பில் அமைச்சர் ஜோன் அம­ர­துங்­க­விற்கு எதி­ராக அர­சாங்கம் உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அல்­லாது போனால் நாடு தழு­விய ரீதியில் எதிர்ப்பு நட­வ­டிக்­கையில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக அகில தெரி­வித்தார். வத்­த­ளையில் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் அமைச்சர் ஜோன் அம­ர­துங்க ஊட­க­வி­ய­லா­ளர்­களை தூஷித்­த­மைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து ஊடக அமைப்­பு­க­ளுடன் சிவில் அமைப்­பு­களும் இணைந்து ஏற்­பா­டு­செய்த ஆர்ப்­பாட்டம் நேற்று பகல் கொழும்பு கோட்டை ரயில் நிலை­யத்­துக்கு முன்­பாக நடை­பெற்­றது. அ தன் போது ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே […]

காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் உற­வி­னர்கள் தங்­க­ளது பிள்­ளை­களை மீட்டுத் தரக் கோரி திரு­மலை துறைமுகக் கடலில் இறங்கி போராட்டம்

காணாமல் ஆக்­கப்­பட்டோர் உற­வுகள் தமது பிள்­ளை­களை மீட்டுத் தரக் கோரி நேற்று கடலில் இறங்கி போராட்­டத்தில் ஈடு­பட்டனர். ஆளுநர் அலு­வ­லகம் முன்­பாக ஆரம்­ப­மான மேற்­படி போராட்டத்தின் இறு­தியில் துறை­முகக் கடலில் அனைத்து உற­வு­களும் இறங்கி தமது பிள்­ளை­களை மீட்டுத் தருமாறு வலியுறுத்தினர். (படப்பிடிப்பு : சேனையூர் நிருபர்)

பிளாஸ்டிக் அரிசி தொடர்பில் போலி­யான தக­வல்­களைப் பதிந்தால் சட்ட நட­வ­டிக்கை

 தொடர்பில் போலி­யான தக­வல்­களை சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் பதி­விடும் நபர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தாக நுகர்வோர் பாது­காப்பு அதி­கா­ர­சபை கூறி­யுள்­ளது.  இந்த அடிப்­ப­டையில்  சமூக வலைத்­த­ளங்­களில் பிளாஸ்டிக் அரிசி  தொடர்பில்  பொய்­யான தக­வல்­களை வெளி­யிட்டு வரும் குழுக்கள் தொடர்பில் குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்­துக்கு தக­வல்­களை வழங்­கு­வ­தற்கு அந்த அதி­கா­ர­சபை தீர்­மா­னித்­துள்­ள­தாக    நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர்  தெரிவித்துள்ளார்.