12 மில்லியன் ரூபா பெறுமதியான வல்லப்பட்டைகளுடன் நால்வர் கைது

சுமார்  1 கோடியே 20 இலட்சம் ரூபா பெறுமதியான வல்லப்பட்டைகளை சட்டவிரோதமாக கடத்திச் செல்ல முயற்சித்த சந்தேக நபர்கள் நால்வர் கட்டுநாயக்க விமான  நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்தினர் தெரிவிக்கின்றனர். சந்தேகநபர்களின் பயணப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  நிலையில் 116 கிலோகிராம் வல்லப்பட்டையைக் கைப்பற்றியதாக விமான நிலைய சுங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கொழும்பைச் சேர்ந்த இச்சந்தேக நபர்கள்  நால்வரும் குறித்த வல்லப்பட்டைகளை இலங்கையிலிருந்து மும்பை வழியாக துபாய் நோக்கி கடத்திச் செல்ல முற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சந்தேகநபர்கள் […]

இதய சத்திர சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஸ்டென்டின் விலை குறைப்பு

இதய சத்திர சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் ஸ்டென்ட் உபகரணத்தின் விலையை குறைப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி  நேற்றிரவு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய இந்த விலை குறைப்பு அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி பரிமெற்றல் ஸ்டென்டின் விலையானது 75 ஆயிரம் ரூபாவில் இருந்து 24 ஆயிரம் ரூபாவுக்கும். டிரக் இலதின் ஸ்டென்டின் விலை  3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவில் இருந்து ஒரு இலட்சத்து 5 ஆயிரம் ரூபாவாக நேற்று நள்ளிரவு […]

மதுபோதையி்ல் வாகனம் செலுத்திய பெண் சாரதி பயிற்றுநர் கைது

பிலியந்தலை போகுந்தர சந்தியில் வைத்து நேற்றிரவு மதுபோதையில் வேனொன்றைச் செலுத்திய சாரதி பயிற்சி பாடசாலையின் சாரதி பயிற்றுனரான பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் வேனை தறித்து நிருத்தியிருந்தமையினால் அதன் சாரதியான பெண்ணை விசாரணைக்கு உட்படுத்தியபோது அவர் மதுபோதையில் உள்ளதாக சந்தேகம் கொண்ட பொலிஸார் அவரை பிலியந்தலை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்திய போது  அவர் மதுபோதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில். 34 வயதான இப்பெண் மற்றொரு நபரொருவருடன் விருந்துபசார நிகழ்வொன்றுக் […]

‘அஜித் சேர் இல்லனா இந்த படமே இல்ல’ – இயக்குநர் சிவா

ஹொலி­வூட்­டுலே தயா­ரான நிறைய ஸ்பை திரில்லர் படங்கள் பார்த்து ரசிச்­சி­ருக்கோம். அந்த மாதிரி த்ரில்லர் படங்கள் இந்­தி­யா­வுல ஏன் படம் வர­மாட்­டேங்­கு­துன்னு எழுந்த கேள்­விக்கு விடைதான் ‘விவேகம்’. ெஹாலிவூட் தரத்­துல எக்‌ஷன் சேஸிங் படமா இது உரு­வா­கி­யி­ருக்கு. ஸ்பை படத்­துக்கு ஸ்டைலி­ஷான ஹீரோ­யி­சம்தான் முதல் தேவை. அஜித் சார் படத்­துக்­குள்ள வந்­துட்ட பிறகு வேறென்ன சொல்ல? படத்­தோட குவா­லிட்டி பல மடங்கு கூடிப்­போ­யி­டுச்சி என சிலிர்க்­கிறார் ‘விவேகம்’ டைரக்டர் சிவா. தொடர்ந்து அஜித் கூட இது உங்க […]

நாளை மறு தினம் சந்திரக் கிரகணம்

எதிர்வரும் 7 ஆம் திகதி பகுதியளவில் சந்திர கிரகணத்தினை அவதானிக்க முடியுமென  கொழும்புப் பல்கலைக்கழகத்தின்  வானியல்  துறை பேராசிரியர்  சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.   இது இலங்கை உள்ளி்ட்ட ஆசிய நாடுகள். ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு தென்படக் கூடும் என அவர் மேலும் தெரிவித்தார். இச் சந்திர கிரகணத்தினை இலங்கை நேரப்படி  எதிர்வரும் 7 ஆம் திகதி இரவு 9.20 முதல்  8 ஆம் திகதி அதிகாலை 2.21 மணிவரை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]