காத்­தான்­குடி பொலிஸ் புதிய பொறுப்­ப­தி­காரி கடமை ஏற்பு

(புதிய காத்­தான்­குடி நிருபர்) காத்­தான்­குடி பொலிஸ் நிலை­யத்தின் புதிய பொறுப்­ப­திகாரி­யாக என்.பி.கஸ்­தூரி ஆராய்ச்சி இன்று முதல் கட­மை­களைப் பொறுப்­பேற்­றுக்­கொண்டார். அநு­ரா­த­புரம் றிடோ­கம பொலிஸ் நிலை­யத்தின் பொறுப்­ப­தி­கா­ரி­யாக கடமை புரிந்த இவர் காத்­தான்­குடி பொறுப்­ப­தி­கா­ரி­யாக கட­மை­பு­ரி­ந்த ஏ.பீ.வெத­கெ­த­ரவின் இட­மாற்­றத்­தை­ய­டுத்து   பொறுப்­ப­தி­கா­ரி­யாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அனுஷ்காவுடன் காதல் இல்லை – பிரபாஸ்

‘நடிகை அனுஷ்­கா­வுடன் காதல் என்ற தகவல் வெறும் வதந்தி. அதில் உண்மை இல்லை. தற்போதைக்கு திரு­மணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை’ என்று நடிகர் பிரபாஸ் கூறி­யுள்ளார். பல்­வேறு தெலுங்கு படங்­களில் நடித்­துள்ள நடிகர் பிரபாஸ், ‘பாகு­பலி’ படத்­துக்குப் பிறகு, வெளி­நா­டு­க­ளிலும் பிர­ப­ல­மாகி விட்டார். தெலுங்கு, தமிழ், மலை­யாளம், இந்தி ஆகிய 4 மொழி­களில் தயா­ரா­கி­வரும் ‘சாஹோ’ என்ற திரைப்­ப­டத்தில் தற்­போது நடித்து வரு­கிறார். இதற்­கி­டையில், இவ­ரது திரு­மணம் குறித்து பல வதந்­திகள் வந்த வண்ணம் உள்­ளன. […]

போலி இரத்­தினக் கற்­களைக் கொடுத்து பெண்­களின் அசல் தங்க நகை­களை மோசடி செய்த நால்வர் கைது!

(எஸ்.கே) தம்­மிடம் பெறு­ம­தி­யான இரத்­தினக் கற்கள் இருப்­ப­தா­கவும் அவற்றை விற்­பனை செய்து தரும்­ப­டியும் அல்­லது அந்த இரத்­தினக் கற்­களை எடுத்துக் கொண்டு எமக்கு அதற்கு ஈடாக பெறு­ம­தி­யான ஏதா­வது பொருளை தரும்­படி கேட்டு பெல்­லன்­வில பிர­தே­சத்தில் பெண்கள் உட்­பட சிலரை ஏமாற்­றி­போலி இரத்­தினக் கற்­களைக் கொடுத்து அவர்­க­ளி­ட­மி­ருந்து தங்க  நகை­களை  பெற்றுக் கொண்டு தப்பிச் சென்­ற­தாக கூறப்­படும் நான்கு சந்­தேக நபர்­களை கடந்த 4 ஆம் திகதி மஹ­ர­கம பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.  ஓப­நா­யக,  அவி­சா­வளை, பட்­ட­கொட […]

டெங்கு காய்ச்­சலை கட்­டுப்­ப­டுத்த பச்சை நிற பழச்­சாறு வகை­களைப் பரு­கு­மாறு வைத்­தி­யர்கள் ஆலோ­சனை!

(மினு­வாங்­கொடை நிருபர்) டெங்குக் காய்ச்சல் தொற்­றி­யுள்­ள­வர்­களின்  எண்­ணிக்­கை­மேலும் மேலும்  அதி­க­ரித்துச் செல்லும்   நிலையில் இந்த நோய்க்கு சிறந்த நோய் நிவா­ரணி எனக் கரு­தப்­படும்  பச்சை நிறத்­தி­லான பழ வகை­களின் சாறு­களைப்  பரு­கு­மாறு வைத்­தி­யர்கள் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளனர்.  பச்சை நிற அப்பில் மற்றும் திராட்சை   (முந்­தி­ரிகை)ப் பழங்­களின் சாறு­க­ளில், டெங்கு நோயைக் கட்­டுப்­ப­டுத்தும் தன்மை அதிகம் இருப்­பதால்  இதனை டெங்கு நோயா­ளர்கள் எவ்­வித  அச்­ச­மு­மின்றி பாவிக்க முடியும்  என்றும் வைத்­தி­யர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.   உண­வ­கங்­களில் அல்­லது சுப்பர் […]

தேர­ரையும் காவ­லா­ளி­யையும் கட்டி வைத்து விகா­ரையின் புனித பொருட்­களை கொள்­ளை­ய­டித்­த­வர்­களால் புத்தர் சிலை ,சைத்­தி­ய­வுக்கும் சேதம் விளை­விப்பு!

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இரா­மச்­சந்­திரன்)  பூண்­டு­லோயா பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கல்­பிட்­டிய புசுல்­பிட்­டிய ரஜ­மகா  விகா­ரையின் புத்தர் சிலையை சேதப்­ப­டுத்­தி­ய­துடன்   அங்­கி­ருந்த புனித பொருட்­களும்   கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக பூண்­டு­லோயா பொலிஸார் தெரி­வித்­தனர்   1044 வருடம் பழமை வாய்ந்த துட்­ட­கை­முனு மன்­னனால் கட்­டப்­பட்ட புசுல்­பிட்­டிய இர­ஜ­மகா விகா­ரைக்குச் சென்ற இனம் தெரி­யாத நால்வர் தேரர் மற்றும்  விகா­ரையின் காவ­லா­ளி­யையும் கட்டி வைத்து விட்டு விகா­ரையின் சைத்­திய மற்றும் புத்­தரின் சிலை­யையும் சேதப்­ப­டுத்தி  வெள்ளி தங்கம் போன்ற பொருட்­க­ளையும் கொள்­ளை­ய­டித்து […]