டாக்­டர்­களை நிய­மிக்­கு­மாறு கோரி சம்­பூரில் ஆர்ப்­பாட்டம்

(மூதூர், தோப்பூர் நிருபர்கள்) திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் உள்ள சம்­பூரில் அண்­மையில் திறந்து வைக்­கப்­பட்ட மாவட்ட வைத்­தி­ய­சா­லைக்கு வைத்­தி­யர்­களை நிய­மிக்குமாறு­கோரி சம்­பூர்­மக்கள் இன்று சம்­பூரில் ஆர்ப்­பாட்­டத்தை நடத்­தினர். கடந்த மே மாதம் 20 ஆம் திகதியன்று ஜனா­தி­பதியால் திறந்­து­வைக்­கப்­பட்ட இவ்­வைத்­தி­ய­சாலையில் இரு வைத்­தி­யர்கள் தேவை­யா­ன­போதும் அதற்­கான நிய­ம­னங்கள் செய்­யப்­ப­டாத நிலையில்  நோயா­ளிகள் அவ­தி­யு­று­வ­தாக ஆர்ப்­பாட்­டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.    

உயி­ரி­ழந்த நிலையில் மீட்­கப்­பட்ட சிறுத்தை

(க.கிஷாந்தன்) திம்­புள்ள பத்­தனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பத்­தனை மவுண்ட்­வேர்ணன் வீ.பி 3 இலக்க தேயிலை மலையில் சிறுத்தைக் குட்டி  ஒன்று உயி­ரி­ழந்த நிலையில் நேற்று மீட்­கப்­பட்­டுள்­ள­தாக திம்­புள்ள பத்­தனை பொலிஸார் தெரி­வித்­தனர். இறந்த நிலையில் சிறுத்தை கிடப்­பதை தொழி­லா­ளர்கள் கண்டு பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கி­யதைத் தொடர்ந்து மேற்­படி சிறுத்தை மீட்­கப்­பட்­டுள்­ளது.

50 அடி பள்ளத்தில் வீழ்ந்த ரிப்பர்; இருவருக்கு காயம்

(தலவாக்கலை நிருபர்) தல­வாக்­கலை – நாவ­லப்­பிட்­டி பிர­தான வீதியில் நாவ­லப்­பிட்­டி கடு­கஞ்­சேனை பகு­தியில் நேற்று ரிப்பர் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி 50 அடி பள்­ளத்தில் வீழ்ந்து விபத்­துக்­குள்­ளா­னது. நாவ­லப்­பிட்­டி வெஸ்டோல் பகு­திக்கு சென்­று­கொண்­டி­ருந்த  டிப்­பரே   இவ்­வாறு வீதியை விட்டு விலகி விபத்­துக்­குள்­ளா­னது. இவ்­வி­பத்தில் இருவர் காய­ம­டைந்த நிலையில் நாவ­லப்­பிட்­டி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.                             […]

40 வயதில் பிகினி போஸ் கொடுக்கும் நடிகை

கமல்ஹாசன் இயக்கி நடித்த ‘விஸ்வரூபம்’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் பூஜா குமார். இவரின் வயது 40- ஐ தாண்டுகிறது. ஆனால், இவரின் இளமை தோற்றம் இன்றும் மாறாமல் உள்ளது, அதற்கு சான்றாக சமீபத்தில் இவர் வெளியிட்ட பிகினி போஸ் ஒன்று பெரும் வைரலாகி வருகின்றது. இவர் நடிப்பில் விரைவில் ‘விஸ்வரூபம்- 2’ மற்றும் தெலுங்கில் ஒரு படம் என முறையே வரவிருக்கின்றது.

முதல்வர் கேட்­டாலும் அமைச்சுப் பொறுப்பை இரா­ஜி­னாமா செய்­ய­மாட்டேன் முடிந்தால் என்னை பதவி நீக்­கட்டும்! – வட­மா­காண அமைச்சர் டெனிஸ்­வரன்

(எஸ்.றொசே­ரியன் லெம்பேட்) 'எறும்பு என்­பது ஒரு சிறி­யது.வேண்டும் என்றால் அதனை நிலத்தில் போட்டு காலினால் மிதித்து விட்டுச் செல்­லலாம். ஆனால், அதே எறும்பு தப்­பித்­த­வறி யானையின் காதுக்குள் போகு­மாக இருந்தால் யானை­யா­னது தானா­கவே மரத்தில் அடி­பட்டு செத்து விடும்.என வட­மா­காண மீன் பிடிப் போக்­கு­வ­ரத்து அமைச்சர் பா.டெனிஸ்­வரன் தெரி­வித்தார். மன்­னாரில் உள்ள அமைச்­சரின் உப அலு­வ­ல­கத்தில்   இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் அவ்­வாறு தெரி­வித்தார். அவர் ஊட­கங்­க­ளுக்கு மேலும் கருத்து தெரி­விக்­கையில், வட­மா­காண […]