தனி ஒருவராக ஓடி தகுதிபெற்ற மக்வாலா

உலக மெய்­வல்­லுநர் போட்­டி­களில் பங்­கு­பற்றும் பொட்ஸ்­வா­னாவின் ஐசாக் மக்­வாலா தனி ஒரு­வ­ராக 200 மீற்றர் தகு­திகாண் ஓட்டப் போட்­டியில் பங்­கு­பற்றி அரை இறுதிப் போட்­டியில் பங்­கு­பற்ற தகு­தி­பெற்றார். உணவு நஞ்­சா­னதால் 48 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு போட்­டியில் பங்­கு­பற்ற முடி­யாது என அறி­விக்­கப்­பட்ட மக்­வாலா, திங்­க­ளன்று நடை­பெற்ற தகு­திகாண் ஓட்டப் போட்­டியில் பங்­கு­பற்­ற­வில்லை. இதனை அடுத்து அவ­ரது நாட்டின் மெய்­வல்­லுநர் சங்கம் விடுத்த வேண்­டு­ கோ­ளுக்கு அமைய அவ­ரது தகு­தியை நிரூ­பிக்கும் பொருட்டு அவ­ருக்கு தனி­யாக 200 மீற்றர் ஓட்டப் […]

மிஸ்கினின் துப்பறிவாளன்

அந்த காலத்­துல கூட சி.ஐ.டி கதை படங்கள் நிறைய வந்­தி­ருக்கு. ஆனா, முழுக்க முழுக்க துப்­ப­றியும் நிபு­ணரை வைத்து படம் வந்­த­தில்ல. சின்ன வய­சு­லே­ருந்து என் மன­சுக்­குள்ள இருந்த அந்த டிடக்டிவ் கெரக்­டர்தான் இப்போ கலியன் பூங்­குன்­றனா ‘துப்­ப­றி­வா­ளன்’ல வளர்ந்து நிக்­குறான் என பூரிக்­கிறார் மிஷ்கின். விஷால் படம்னா மாஸ், மிஷ்கின் படம்னா கிளாஸ்னு வரை­முறை இருக்கு. இதை எப்­படி ‘துப்­ப­றி­வாளன்’ உடைக்கும்? ஏன் உடைக்­கணும். மாஸும் கிளாஸும் கலந்த படம்தான் இது. மாஸ், கிளாஸுங்­கி­ற­தெல்லாம் சில […]

16 வய­தான சிறு­மியை விப­சா­ரத்தில் ஈடு­ப­டுத்­திய சந்­தே­கத்தில் ஆட்டோ சாரதி பயி­க­மவில் கைது

(எஸ்.கே) 16 வய­தான  சிறு­மியை வர்த்­த­கர்­க­ளுக்கும், அரச உயர் அதி­கா­ரி­க­ளுக்கும் விற்­பனை செய்து வரு­வதை தொழி­லாகக் கொண்­டி­ருந்த முச்­சக்­க­ர­வண்டி சாரதி ஒரு­வரை பாணந்­துறை வலான மோசடி ஒழிப்புப் பிரி­வினர் நேற்று முன்­தினம் 9 ஆம் திகதி கைது செய்­துள்­ளனர்.  வர்த்­த­க­ரைப்போல் மாறு­வே­ட­மிட்டுச் சென்ற பாணந்­துறை வலான மோசடி ஒழிப்பு பிரிவைச் சேர்ந்த அதி­காரி ஒரு­வ­ருக்கு பிய­கம பிர­தே­சத்தில் வைத்து 15,000 ரூபா­வுக்கு 16 வயது சிறு­மியை விற்­பனை செய்ய முயற்­சித்த போது சந்­தேக நப­ரான முச்­சக்­க­ர­வண்டி சாரதி […]

10 இலட்சம் ரூபா பெறுமதியான கடல் அட்டைகளை இலங்கைக்குப் படகில் கடத்தும் முயற்சி முறியடிப்பு!

(மது­ரங்­குளி நிருபர்) மன்னார் வளை­குடா கடல் வழி­யாக இலங்­கைக்கு கடத்­த­வி­ருந்த பல இலட்சம் ரூபா  மதிப்­பி­லான  உயிர் உள்ள கடல் அட்­டை­க­ளுடன்  கடத்­தல்­காரர் ஒரு­வ­ரையும் தமிழ்­நாடு  மண்­டபம் மெரைன் பொலிஸார் கைது செய்­தனர். மன்னார் வளை­குடா கடல் வழி­யாக இலங்­கைக்குச் செல்லத் தயா­ரா­க­வுள்ள படகு ஒன்றில் தடை­செய்­யப்­பட்ட கடல் அட்­டைகள் கடத்த இருப்­ப­தாக பொலி­ஸா­ருக்கு கிடைத்த ரக­சிய தக­வ­லை­ய­டுத்து  மண்­டபம் மெரைன் பொலிஸார்  நடு­க்க­டலில் தீவிர சோதனை நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டனர்.  அப்­போது மண்­டபம் வடக்­கு­க­டற்­க­ரையில் சந்­தே­கத்­திற்­கி­ட­மான முறை­யில்­த­ரித்து நின்ற படகு […]

பஸ் ஆசனத்தில் பற்குச்சிகள்; சிங்கப்பூர் பொலிஸார் தீவிர விசாரணை

சிங்­கப்பூர் பஸ் ஒன்றின் ஆச­னத்தில் பற்­குச்­சிகள் குத்­தப்­பட்­டி­ருந்­தமை தொடர்பில் அந்­ நாட்டுப் பொலிஸார் தீவிர விசா­ரணை நடத்தி வரு­கின்­றனர். உலகின் மிகச் சிறிய நாடு­களில் ஒன்­றான சிங்­கப்பூர், பெரும் செல்­வந்த நாடு­களில் ஒன்­றாகும். குற்­றங்­க­ளுக்கு கடு­மை­யான தண்­ட­னைகள் வழங்­கப்­ப­டு­வதால் குற்­றச்­செ­யல்­களின் எண்­ணிக்­கை­களும் குறை­வாக உள்­ளன. இந்­நி­லையில், பஸ் ஆச­னத்தில் பற்­குச்­சிகள் குத்­தப்­பட்­டி­ருந்­தமை தொடர்பில் சிங்­கப்பூர் பொலிஸார் தீவிர விசா­ரணை நடத்­து­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. பொதுப்­ போக்­கு­வ­ரத்து பஸ் ஆச­ன­மொன்றில் 3 பற்­குச்­சிகள் குத்­தப்­பட்­டி­ருந்­தன. அந்த ஆச­னத்தில் அம­ர­வி­ருந்த பெண் […]