சமுர்த்தி உதவு தொகை வழங்கப்படாமையை கண்டித்து ஹட்டன் – நுவரெலிய வீதியில் பயனாளிகள் ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன், தலவாக்கலை நிருபர்) நுவ­ரெ­லியா பிர­தேச செய­ல­கத்­துக்கு உட்­பட்ட பகு­தி­களில் அர­சாங்­கத்தால் வழங்­கப்­படும் சமுர்த்தி உதவு தொகை  முறை­யாக வழங்­கப்­ப­ட­வில்லை  என தெரி­வித்து  வெள்­ளிக்­கி­ழமை லிந்­துலை – தல­வாக்­கலை நக­ர­ச­பைக்கு அரு­கா­மையில் ஹட்டன் -– நுவ­ரெ­லியா பிர­தான வீதியில் பய­னா­ளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு­பட்­டனர்.     தங்­களின் பாதிப்பு தொடர்­பான விப­ரங்கள் உள்­ள­டக்­கப்­பட்ட பதா­தை­களை ஏந்­தி­ய­வாறு கோஷங்­களை எழுப்பி ஆர்ப்­பாட்­டத்தை முன்­னெ­டுத்­தனர்.   கடந்த அர­சாங்­கத்தில் வழங்­கப்­பட்ட கொடுப்ப­னவை நல்­லாட்சி அர­சாங்கம் நிறுத்­தி­யது ஏன் ? என்ற […]

திருமலை ஆனந்தபுரியில் கிணற்றில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழப்பு!

(தோப்பூர் நிருபர்) திரு­கோ­ண­மலை ஆனந்­த­புரி பகு­தியில் உள்ள  கிணறு ஒன்றில் மூழ்கி 15,16 வய­து­டைய சிறு­வர்கள் இருவர் பலி­யா­கி­யுள்­ள­தாக  உப்­பு­வெளி பொலிஸார் தெரி­வித்­தனர். திரு­கோ­ண­மலை  தீர்­வை­ந­கரைச் சேர்ந்த  இரு­வரே   கிணற்றில் மூழ்கி உயி­ரி­ழந்­துள்­ளனர். நண்­பர்­க­ளான மேற்­படி இரு­வரும் வெள்­ளிக்­கி­ழமை ஆனந்­த­பு­ரி­யி­லுள்ள பொதுக் கிணற்றில் குளிப்­ப­தற்­காகச் சென்­ற­போதே  நீரில் மூழ்கி உயி­ரி­ழந்­துள்­ள­தாக  ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.  இச்­சம்­பவம் தொடர்பில்  உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயிலில் நாயை தாக்கி கடித்த பெண்

கனே­டிய ரயில் ஒன்றில் பயணம் செய்த யுவதி ஒருவர் தனது வளர்ப்பு நாயை ஆத்­தி­ரத்தில் கடிக்கும் காட்­சி­களை சக பய­ணிகள் படம்­பி­டித்­துள்­ளனர். மேற்­படி யுவதி நாயை பல தடவை அடித்­த­துடன் அதை கடிக்­கவும் செய்தார். அந்த நாய் அச்­ச­ம­டைந்து காணப்­பட்­டது. நாயை தாக்­கு­வதை நிறுத்­து­மாறு சக பய­ணிகள் அறி­வு­றுத்­தி­ய­போது அவர்­களை மேற்­படி பெண் மோச­மாகத் திட்­டினார். இதன்­போது பதி­வு­செய்­யப்­பட்ட வீடி­யோ­வொன்றை ஒருவர் இணை­யத்தில் வெளியிட்­டுள்ளார்.   ரயில நிலை­ய­மொன்றில் ரயில் நிறுத்­தப்­பட்­ட­வுடன் ரயில்வே அதி­கா­ரிகள் சிலர் அப்­பெண்ணின் அருகில் […]

சண்டைக் காட்சிகளில் நானே நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர் – ஜாக்கி சான்

சண்டைக் காட்­சி­களில் டூப் இல்­லாமல் தானே நடிப்­பதை பார்க்­கவே ரசி­கர்கள் விரும்­பு­கி­றார்கள் என நடிகர் ஜாக்கி சான் கூறி­யுள்ளார். 63 வய­தான ஜாக்கி சான் தனது ஆக் ஷன் காட்­சி­களைப் பற்றி செவ்­வி­யொன்றில் பேசு­கையில், "எனது சண்டைக் காட்­சி­களை பெரும்­பாலும் நான் தான் செய்­கிறேன். அதைத்தான் ரசி­கர்கள் என்­னி­ட­மி­ருந்து எதிர்­பார்க்­கின்­றனர்.   ஒரு சில காட்­சி­களில் டூப் பயன்­ப­டுத்­து­கிறேன். ஆனால் 90 சத­வீ­தத்­துக்கும் அதி­க­மான சண்­டை­களில் நான்தான் இருக்­கிறேன். சண்டைக் காட்­சியில் நடிப்­பது எனக்கு எளி­தாக உள்­ளது. அதில் […]

80 கோடி டொலர் வசூலை கடந்தது ‘வொண்டர் வுமன்’

வொண்டர் வுமன் திரைப்­ப­டத்தின் வசூல் தொகை 80 கோடி டொலர்­களை (சுமார் 12,250  கோடி இலங்கை ரூபா) கடந்­துள்­ளது. பெண் சுப்­பர்­ஹீரோ கொமிக்ஸ் பாத்­தி­ர­மான வொண்டர் வுமனை அடிப்­ப­டை­யாகக் கொண்ட ’வொண்டர் வுமன்’ திரைப்­படம் கடந்த மே 15 ஆம் திகதி வெளியா­கி­யது. பெற்றி ஜென்கின்ஸ் இயக்­கிய இத்­தி­ரைப்­ப­டத்தில் இஸ்­ரே­லிய முன்னாள் அழ­கு­ராணி கேல் கடோட் நடித்­தி­ருந்தார்.   கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யுடன் உல­க­ளா­விய ரீதியில் 80 கோடி டொலர்­களை இப்­படம் வசூ­லித்த­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதில் 40 கோடி டொலர்கள் […]