இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழு இராஜினாமா

சனத் ஜய­சூ­ரிய தலை­மை­யி­லான இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழு­ தமது இரா­ஜி­னாமா கடி­தத்தை விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­க­ர­விடம் இன்று கைய­ளித்­துள்­ளனர். இதன் பிர­காரம் இந்­திய கிரிக்கெட் அணி­யு­ட­னான கிரிக்கெட் தொடர் முடிவில் இந்த இரா­ஜி­னாமா அமு­லுக்கு வர­வுள்­ளது. இந்­தி­யா­வுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான மூவகை கிரிக்கெட் தொடர் செப்­டெம்பர் 6ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­யுடன் நிறை­வுக்கு வரு­கின்­றது. கிரிக்கெட் சபையைக் கலைத்து இடைக்­கால நிரு­வாக சபையை நிறு­வுமாறும் புதிய தெரி­வுக்­கு­ழுவை நிய­மிக்­கு­மாறும் […]

தன்சிகாவின் ‘குழலி’

 தன்­ஷி­கா நடிக்கும்  ‘வாலு­ஜடா’ என்ற கன்­னட படம் தமி­ழில் ‘குழலி’ என்ற பெய­ரில் தயா­ராகி வரு­கின்­ற­து. ‘பேராண்மை’, ‘அரவான்’, ‘பர­தேசி’, ‘கபாலி’ படங்­களில் நடித்த தன்­ஷிகா ‘வாலு­ஜடா’ என்ற கன்­ன­டப்­ப­டத்தில் நடித்து வரு­கிறார். அவர் நடிக்கும் முதல் கன்­னடப் படம் இது. இந்தப் படத்தை தமி­ழிலும் தயா­ரிக்­கி­றார்கள். அதற்கு ‘குழலி’ என்று பெயர் வைத்­தி­ருக்­கி­றார்கள். ரமணாவ் மல்லம் என்­பவர் இயக்­கு­கிறார். மலை­யாள நடிகர் நிவின் பாலி ஹீரோ. அவர் நடிக்கும் முதல் கன்­னடப் படமும் இதுதான். ராதன் […]

ஆட்டோ மீது பாரிய மரம் முறிந்து வீழ்ந்­ததால் தல­வாக்­கலை பாட­சாலை ஆசி­ரியை பலி

(க.கிஷாந்தன், சுரேன் தல­வாக்­கலை, நோர்டன் பிரிட்ஜ் நிருபர், டி.சந்துரு) தல­வாக்­கலை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட டெவோன் பகு­தியில் ஹட்டன் – தல­வாக்­கலை பிர­தான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்­சக்­கர வண்­டியின் மீது பாரிய மர­மொன்று முறிந்து வீழ்ந்­ததில் அதில் பயணம் செய்­த ஆசி­ரியை ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக தல­வாக்­கலை பொலிஸார் தெரி­வித்­தனர்.  கொட்­ட­கலை பகு­தி­யி­லி­ருந்து தல­வாக்­க­லைக்குச் சென்று கொண்­டி­ருந்த முச்­சக்­க­ர­வண்­டியே விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது.  இச்­சம்­ப­வத்தில் முச்­சக்­கர வண்­டியின் சாரதி பலத்த காயங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்ளார். இவர்கள் குறித்த வீதியால் ஆட்­டோவில் பய­ணித்துக் கொண்­டி­ருந்த போது   டெவோன் பகு­தியில் […]

நாங்கள் அதிகாரத்துக்கு வந்ததன் பின்னரே நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகள், செயலகங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தோம் – அமைச்சர் பழனி திகாம்பரம்

(க.கிஷாந்தன்) மலை­ய­கத்தில் இருந்த தலை­வர்கள் எவரும் பிர­தேச செய­ல­கங்­க­ளையோ பிர­தேச சபை­க­ளையோ அதி­க­ரிக்க நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. நாங்கள்  அதி­கா­ரத்­துக்கு வந்த பின்னரே   நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் பிர­தேச சபை­க­ளையும்  பிர­தேச செய­ல­கங்­க­ளையும் அதி­க­ரிக்க நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம் என   மலை நாட்டு புதிய கிரா­மங்கள் உட்­கட்­ட­மைப்பு மற்றும் சமு­தாய அபி­வி­ருத்தி அமைச்சர் பழனி திகாம்­பரம் தெரி­வித்தார். அக்­க­ர­பத்­தனை,  தலை­வாக்­கலை, டயகம பிர­தான வீதி­களில் சுமார் 30 கோடி ரூபா செலவில் புன­ர­மைக்­க­ப­பட­வுள்ள அக்­க­ர­பத்­தனை ஆக்­ரோவா பாலத்தின் வேலை­களை […]

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் அஸ்வர் காலமானார்

முன்னாள் அமைச்சர் ஏச்.எம். அஸ்வர் இன்று (29) மாலை காலமானார். கடந்த சில காலமாக சுகயீனமுற்றிருந்த அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தனது 80 ஆவது வயதில் காலமானார் 1937 பெப்ரவரி 8 ஆம் திகதி பிறந்த முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர்  இறுதியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார். 1950 ஆம் லங்கா சமசமாஜ கட்சியின் மூலம் தனது அரசியல் பிரவேசத்தை மேற்கொண்ட அன்னார், முதல் முறையாக 1989 ஆம் ஆண்டு […]