ஷாய் ஹோப், ப்ரெத்வெய்ட் ஆகி­யோரின் ஆற்­றலால் மேற்­கிந்­தியத் தீவுகள் 5 விக்­கெட்­களால் அபார வெற்றி

லீட்ஸ், ஹெடிங்லே விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற இங்­கி­லாந்­துக்கும் மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கும் இடை­யி­லான இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் ஷாய் ஹோப் இரண்டு இன்­னிங்ஸ்­க­ளிலும் சதங்­களைக் குவிக்க மேற்­கிந்­தியத் தீவுகள் 5 விக்­கெட்­களால் வெற்­றி­யீட்­டி­யது. இந்த வெற்­றி­யுடன் நான்கு போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 – 1 என மேற்­கிந்­தியத் தீவுகள் சமப்­ப­டுத்­தி­யது. ஹெடிங்லே விளை­யாட்­ட­ரங்கில் இது­வரை நடை­பெற்ற போட்­டி­களில் அதி சிறந்த போட்­டி­யாக, மிகவும் விறு­வி­றுப்பை ஏற்­ப­டுத்­திய போட்­டி­யாக அமைந்த இந்த டெஸ்ட் போட்­டியில் 322 ஓட்­டங்­களை […]

வவு­னியா ஏ 9 வீதியில் வாகன விபத்து! ஒருவர் உயி­ரி­ழப்பு, மூவர் படு­காயம்

வவு­னியா கல்­குண்­ணா­ம­டுவ பகு­தியில் நேற்று அதி­காலை  இடம்­பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயி­ரி­ழந்­த­துடன் மூவர் படு­கா­ய­ம­டைந்த நிலையில் வவு­னியா மாவட்ட பொது வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். இவ் விபத்து தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­கையில், அநு­ரா­த­பு­ரத்­தி­லி­ருந்து வவு­னியா நோக்கி பய­ணித்த ஓடு­களை ஏற்றிச் சென்ற  வாகனம் கல்­குண்­ணா­ம­டுவ பகு­தியில்  தரித்து நின்ற போது, அதே பாதையில் வவு­னியா நோக்கி பய­ணித்த  வாகனம் ஒன்று  மோதி விபத்­துக்­குள்­ளா­னது.   இவ்­வி­பத்தில் தரித்து நின்ற வாக­னத்தில் பய­ணித்த  48 வய­தான நபர் உயி­ரி­ழந்­த­துடன் […]

அஜித் சேர் சொன்னது நடந்திடுச்சி – இயக்குநர் சிவா

‘விவேகம்’ படம் வெளியான அன்று அந்தப் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகமாக வந்தன. இந்தப் படத்தை யூ-ட்யூப் விமர்சகர் ஒருவர் தரக்குறைவாக விமர்சித்ததற்கு சினிமாத் துறையில் உள்ள பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், படத்திற்கு வரும் விமர்சனங்களைப் பற்றி இயக்குநர் சிவா பேசியிருக்கிறார். அதுபற்றி சிவா கூறியதாவது, 'சிகரெட் பிடிப்பது, மது குடிப்பது மாதிரியான காட்சிகள் எதுவும் இல்லைனு பல பேர் பாராட்டியிருந்தாங்க.   படத்தின் ப்ளஸ், மைனஸ் பற்றி விமர்சிச்ச பல விமர்சனங்களை நான் பார்த்தேன். […]

போதைப் பொருள் விநி­யோ­கித்­தமை தொடர்பில் கைதான சகோ­த­ர­னும் சகோ­த­ரியும் விளக்­க­ம­றி­யலில்

(நீர்­கொ­ழும்பு நிருபர்) போதைப் பொருள் விற்­பனை செய்­வோ­ருக்கு  ஹெரோயின் போதைப் பொருள் விநி­யோ­கிக்கும் சட்ட விரோத நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டு வந்த ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த இரு­வரை  நீர்­கொ­ழும்பு பிர­தான நீதவான் எதிர்­வரும் முதலாம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்டார். ஜா – எல பிர­தே­சத்தைச் சேர்ந்த அக்கா மற்றும் தம்பி ஆகி­யோரே விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­ட­வர்­க­ளாவர்.  கட்­டு­நா­யக்க  பொலி­ஸா­ருக்குக் கிடைத்த தகவல் ஒன்­றினை அடுத்து சந்­தேக நபர்­களை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.  சந்­தேக நபர்கள் கொழும்­பி­லி­ருந்து […]

நீதி மறுக்கப்பட்டவர்களாக காணாமல்போனவர்களின் உறவுகள் படையினரிடத்தில் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது?; சர்வதேசத்தின் தலையீட்டை உடன் கோருகின்றார் சம்பந்தன்

தமது அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை அறி­யா­துள்ள அவர்­களின் உற­வினர்­க­ளுக்­கான நீதி மறுக்­கப்­பட்­டுள்­ளது. அவர்­களின் உரி­மை­களை பெற்­றுக்­கொ­டுக்­கவும், அர­சாங்கம் வழங்­கிய உறுதி மொழி­களை நிறை­வேற்­றவும் சர்­வ­தேசம் உடன் கவ­னத்தில் கொண்டு தலை­யீட்டைச் செய்­ய­வேண்­டு­மென எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் கோரிக்கை விடுத்­துள்ளார். பல­வந்­த­மாக காணா­ம­லாக்கப்படச் செய்­த­தனால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளது சர்­வ­தேச தினத்­தினை முன்­னிட்டு வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.   அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,  மனக் கவ­லை­க­ளோடும் துய­ரத்­தோடும் பல­வந்­த­மாகக் காணாமல் போகச் செய்­த­தனால் […]