முச்சக்கரவண்டி மீட்டர் தவணைக் கட்டண அடிப்படையில்?

முச்சக்கரவண்டிகளுக்காக பொருத்தப்படவுள்ள புதிய மீட்டர்களை தவணைக்கட்டண அடிப்படையில் சாரதிகளுக்கு மீட்டர்களை வழங்குவதற்கு உரிய நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருவதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய 9000 ரூபாவுக்கும் குறைவான விலையில் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு குறித்த மீட்டரை பெற்றுக்கொள்ள முடியும் என அச்சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். இவ்வாறான மீட்டர்களை  வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யாமல் இலங்கை தர நிறுவனத்தின் நியமத்துக்குக்கமைய அவற்றை உள்நாட்டு நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யவுள்ளதாக சிசிர கோதாகொட மேலும் தெரிவித்தார். […]

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தின் 65 உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் நீண்டகாலமாக கடமையாற்றிவந்த 65 பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு கண்டி மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பணியின் அவசியம் கருதியும் சிலர் ஒழுக்காற்று செயற்பாடுகளுக்காகவும் இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இவர்கள் அனைவரும் கண்டி பிராந்தியத்தின் வெவ்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும்  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 3 பொலிஸ் பரிசோகர்கள், 6 உப பொலிஸ் பரிசோதகர்கள், 17 பொலிஸ் சார்ஜண்ட்கள், […]

கிழக்கு மாகாண சபை இன்று நள்ளிரவுடன் கலைகிறது

கிழக்கு மாகாண சபை இன்று (30) நள்ளிரவுடன் கலைக்கப்படுகின்றது. கிழக்கு மாகாண சபை 37 ஆசனங்களைக் கொண்டு காணப்படுகின்றது. சபையின் இறுதி அமர்வு கடந்த 28 ஆம் திகதி திருகோணமலையில் அமைந்துள்ள மாகாணசபை கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது. இந்நிலையில் கிழக்கு மாகாண சபையின் அதிகாரம் நாளை முதல் ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. இதேவேளை, கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவுடன் சப்ரகமுவ மாகாண சபையின் ஆட்சிகாலம் நிறைவுற்ற நிலையில் அதன் அதிகாரம் மாகாண ஆளுநரிடம் ஒப்படைப்பட்டது. அத்துடன் வட மத்திய […]

பயணச் சீட்டின்றி பயணித்த 40 பேர் மருதானை ரயில் நிலையத்தில் கைது

பயணச்சீட்டின்றி பயணித்த 40 ரயி்ல் பயணிகள் மருதானை ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகல் சுமார் 2 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்ட ரயில் பாதுகாப்பு அத்தியட்சகர் அநுர பிரேமரத்ன தெரிவித்தார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 30 பேர் அவ்வேளையிலேயே  அபராதம் செலுத்தி சென்றிருந்த நிலையில் ஏனைய 10 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் மொத்தமாக 90 ஆயிரம் ரூபா அபராதம் அறவிடப்பட்டதாக ரயில்வே பாதுகாப்பு […]

ஒக்டோபர் முதல் ஐ.ஓ.சி. பெற்றோல், டீசல் விலை அதிகரிப்பு

ஒக்டோபர் முதல் டீசல் மற்றும் பெற்றோல் விலையில் அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி.(இந்தியன் ஒயில் கம்பனி) தெரிவித்துள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணையின் விலையை கருத்திற்கொண்டு இவ்வாறு விலை அதிகரிப்பு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், புதிய விலைகள் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐ.ஓ.சியின் தற்போதைய விலையினால் பெற்றோல் லீற்றரொன்றினால் 17 ரூபாவும் டீசல் லீற்றரொன்றினால் 14 ரூபாவும் நஷ்டம் ஏற்படுவதாக லங்கா ஐ. ஓ. சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் […]