ஹ­புத்­தளை கல்­கந்த பஸ் விபத்தில் ஒருவர் பலி; 22 பேருக்கு காயம்

(ஹ­புத்தளை நிருபர் லெ. மகாராஜன்) இலங்கை போக்­கு­வ­ரத்துச் சபைக்குச் சொந்­த­மான பஸ் ஒன்று ஹ­புத்­த­ளையிரிருந்து கொஸ்­கம பிர­தே­சத்­துக்கு சென்று கொண்­டி­ருந்த போது விபத்­துக்­குள்­ளா­னதில் ஒருவர் உயி­ரி­ழந்­த­துடன், 22 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். இந்தச் சம்­பவம் இன்று மாலை ஹபுத்­தளை கல்­கந்த பகு­தியில் இடம்­பெற்­றுள்­ளது. காய­ம­டைந்­த­வர்கள் தியத்­த­லாவை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

வவுனியா இ.போ.ச மத்திய பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

(கதீஸ்) வவு­னியா இ.போ.ச மத்­திய நிலை­யத்தில் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரை கஞ்­சா­வுடன் கைது செய்­துள்­ள­தாக மது போதை ஒழிப்பு பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். குரு­ணாகல் பிர­தேச பொலிஸ் நிலை­யத்தில் பணி­யாற்றும் பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரான சந்­தேக நபர் கிளி­நொச்­சி­யி­லி­ருந்து அநு­ரா­த­புரம் பகு­திக்கு பஸ்ஸில் எடுத்துச் செல்­வ­தற்கு தயா­ர­ாகி­யி­ருந்த போதே 2 கிலோ நிறை­யு­டைய கேரளா கஞ்­சா­வுடன் வவு­னியா பஸ் நிலை­யத்தில் வைத்து வன்­னிப்­பி­ரதிப் பொலிஸ் மா அதி­பரின் கீழ் செயற்­படும் போதை ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.  

தேசிய சமாதானத்தை வலியுறுத்தி மட்டக்களப்பில் அமைதிப் பேரணி

(எஸ்.சதீஸ்) உலக சமா­தான தினத்தை அனுஷ்­டிக்கும் முக­மாக தேசிய சமா­தானப் பேர­வையின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட சர்­வ­மதப் பேர­வையால் ஒழுங்கு செய்­யப்­பட்ட சமா­தான அமைதிப் பேரணி மட்­டக்­க­ளப்பில் நேற்று நடை­பெற்­றது. மாவட்ட சர்­வ­மதப் பேர­வைக்­கான மட்­டக்­க­ளப்பு மாவட்ட இணைப்­பாளர் இரா­சையா மனோ­கரன் தலை­மையில் நடை­பெற்ற இப் பேரணி தாண்­ட­வன்­வெளி புனித காணிக்கை மாதா ஆல­யத்­தி­லி­ருந்து ஆரம்­ப­மாகி மட்­டக்­க­ளப்பு – திரு­மலை வீதி­யூ­டாகமட்­டக்­க­ளப்பு நகர், காந்திப் பூங்காவை சென்றடைந்தது.  

177,000 சதுர மீற்றர் பரப்பளவில் துபாயில் செவ்வாய் நகரம்; செவ்வாய் குடியேற்ற திட்டத்திற்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிர்மாணிக்கிறது

செவ்வாய் கிரகம் தொடர்­பான ஆராய்ச்­சி­க­ளுக்­காக செவ்வாய் கிரகச் சூழல் கொண்ட நக­ர­மொன்றை ஐக்­கிய அரபு எமிரேட்ஸ் நிர்­மா­ணிக்­க­வுள்­ளது. இந்­ந­கர நிர்­மாணத் திட்டம் குறித்து ஐக்­கிய அரபு எமிரேட்ஸ் அர­சாங்கம் இவ்­வாரம் அறி­வித்­துள்­ளது.   துபாய் பாலை­வ­னத்தில் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்ள இந்­ந­கரின் பரப்­ப­ளவு 177,000 சதுர மீற்­றர்கள் (19 லட்சம் சதுர அடி) ஆகும். இந்­ந­கர நிர்­மா­ணத்­துக்­காக 50 கோடி திர்­ஹாம்­கள் (சுமார் 2304 கோடி இலங்கை ரூபா) செல­வி­டப்­ப­ட­வுள்­ளது. ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் மொஹமத் பின் ரஷீத் விண்வெளிமத்­திய […]

அதிக ஊதியம் பெற்ற தொலைக்காட்சி நடிகைகளின் பட்டியலில் பிரியங்கா சோப்ரா

உலகில் அதிக ஊதியம் பெற்ற தொலைக்­காட்சி நடி­கை­களின் முதல் 10 பேர் பட்­டி­யலில் பிரி­யங்கா சோப்ரா இடம்­பெற்­றுள்ளார். இந்­திய நடி­கை­யான பிரி­யங்கா சோப்ரா, அமெ­ரிக்கத் தொலைக்­காட்சித் தொட­ரான குவான்­டி­கோவில் பொலிஸ் அதி­காரி வேடத்தில் நடித்தார். அதன்பின் ஹொலிவூட் திரைப்­ப­ட­மான பே வோட்­சிலும் அவர் நடித்தார். குவான்­டி­கோவில் நடித்­ததன் மூலம் அதிக ஊதியம் பெற்ற தொலைக்­காட்­சி­ நடி­கை­களின் பட்­டி­ய­லிலும் பிரி­யங்கா சோப்ரா இடம்பெற்றுள்ளார்.