ஹட்டனில் காணாமல் போன ஆட்டோ பாகங்கள் அகற்றப்பட்ட நிலையில் மீட்பு

(க.கிஷாந்தன்) ஹட்டன், குடா­கம பகு­தியில் காணாமல் போன முச்­சக்­க­ர­வண்டி அக்க­ரப்­பத்­தனை பகு­தி­யி­லி­ருந்து மீட்­கப்­பட்­டுள்­ள­தாக ஹட்டன் பொலிஸார் தெரி­வித்­தனர். ஹட்டன் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட குடா­கம பகு­தியில் தனது வீட்­டுக்கு அருகில் நிறுத்தி வைக்­கப்­ப­டி­ருந்த முச்­சக்­க­ர­வண்டி காணாமல் போன­தாக முச்­சக்­க­ர­வண்டி உரி­மை­யா­ள­ரினால் ஹட்டன் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. முறைப்­பாட்­டை­ய­டுத்து பொலிஸார் விசா­ர­ணையை ஆரம்­பித்த நிலையில் குறித்த முச்­சக்­க­ர­வண்டி அக்க­ரப்­பத்­தனை போடைஸ் எல்­பியன் தோட்­டப்­ப­கு­தியில் அக்க­ரப்­பத்­தனை பொலி­ஸா­ரினால் மீட்­கப்­பட்­டுள்­ளது. முச்­சக்­க­ர­வண்­டியின் டயர்கள், எஞ்சின் மற்றும் கண்­ணா­டிகள் அகற்­றப்­பட்ட நிலை­யி­லேயே […]

இரண்டு கிரிக்கெட் கழ­கங்­களின் வீரர்கள் மீதான தடைகள் தற்­கா­லி­க­மாக நீக்கம்

பாணந்­துறை கிரிக்கெட் கழகம், களுத்­துறை உடற்­கலை கலா­சார கழகம் ஆகி­ய­வற்றின் வீரர்­க­ளுக்கும் பயிற்­று­நர்­க­ளுக்கும் விதிக்­கப்­பட்­டி­ருந்த தடையை உள்ளூர் கிரிக்கெட் செயற்­பா­டு­களில் பங்­கு­பற்றும் வகையில் தற்­கா­லி­க­மாக நீக்­கு­வ­தாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் அறி­வித்­தது. இரண்டு கழ­கங்­க­ளி­னதும் வீரர்கள் தங்­க­ளுக்கு விதிக்­கப்­பட்ட தடையை எதிர்த்து செய்த மேன்­மு­றை­யீ­டு­களை அடுத்து மேன்­மு­றை­யீட்டுக் குழுவின் சிபா­ரி­சுக்கு அமைய விசா­ரணை முடி­யும்­வரை தடையை தற்­கா­லி­க­மாக நீக்­கி­யுள்­ள­தாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் விடுத்­துள்ள அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந்த இரண்டு கழ­கங்­க­ளுக்கும் இடையில் இவ் வருட முற்­ப­கு­தியில் […]

தேசி­ய­ளவில் ஒப்­பி­டு­கையில் பெருந்­தோட்டப் பகு­தி­களில் சிறு­வர்­களின் மந்­த­போ­சனை நிலைமை அதி­க­ரித்­துள்­ளது – அமைச்சர் பழனி திகாம்­பரம்

பெருந்­தோட்ட பகு­தி­களில் வாழும் சிறு­வர்­களின் மந்­த­போ­சனை நிலையை கட்­டுப்­ப­டுத்தும் நோக்கில் போசனை கொண்ட பிஸ்கட் அறி­முகஞ் செய்­யப்­பட்­டுள்­ள­தாக மலை­நாட்டு புதிய கிரா­மங்கள் உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமு­தாய அபி­வி­ருத்தி அமைச்சர் பழனி திகாம்­பரம் தெரி­வித்­துள்ளார். சர்­வ­தேச சிறுவர் தினத்தை முன்­னிட்டு நுவ­ரெ­லியா சினி­சிட்டா அரங்கில் இடம்­பெற்ற சிறுவர் தின கொண்­டாட்ட நிகழ்வில் அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார். தேசி­ய­ளவில் ஒப்­பி­டு­கையில் பெருந்­தோட்டப் பகு­தி­களில் சிறு­வர்­களின் மந்­த­போ­சனை நிலை அதி­க­ரித்துக் காணப்­ப­டு­வ­தா­கவும் இது சிறு­வர்­களின் சுகா­தார நிலைக்கு ஆரோக்­கிய தன்மை […]

இலங்கையில் 5 இலட்சம் பேருக்கு கண்வில்லைகள் தேவை! சில வைத்தியர்களின் நடவடிக்கையினாலேயே இந்த நிலை – பிரதி சுகாதார அமைச்சர் பைசால் காசீம்

(காங்­கே­ய­னோடை நிருபர்) இலங்­கையில் கண் வில்லை மாற்று (கற்ரிக்) சத்­திர சிகிச்சை செய்ய வேண்­டி­ய­வர்கள் சுமார் ஐந்து இலட்சம் பேர் உள்­ளனர் என சுகா­தார பிர­தி­ய­மைச்சர் பைசால் காசீம் தெரி­வித்தார்.காத்­தான்­குடி ஆதார வைத்­தி­ய­சா­லையில் நடை­பெற்ற கண் சித்­திர சிகிச்சை முகாம் ஆரம்ப வைப­வத்தில் உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். சுகா­தார அமைச்சின் அனு­ம­தி­யுடன் பாகிஸ்தான் அல் பசர் நிறு­வ­னத்தின் நிதி அனு­ச­ர­ணை­யுடன் இலங்கை ஜம் இய்­யத்துஸ் ஸபாப் நிறு­வ­னத்­தினால் காத்­தான்­குடி ஆதார வைத்­தி­ய­சா­லையில் நடை­பெற்ற கண்­சத்­திர […]

அறம் படத்துக்கு உயிரூட்டிய நயன்தாரா

‘மகளிர் மட்டும்’ படத்தைத் தொடர்ந்து ஜிப்ரான் இசை­ய­மைப்­பா­ள­ராக பணி­பு­ரிந்­துள்ள ‘அறம்’ படம் வெளி­யாகவிருக்­கி­றது. இந்தப் படத்தை அடுத்து, தாமிரா இயக்­கத்தில் சமுத்­தி­ரக்­கனி நடித்­துள்ள ‘ஆண் தேவதை’ படமும், ஜிப்ரான் தயா­ரித்­துள்ள ‘சென்னை டு சிங்­கப்பூர்’ படமும் வெளி­யாக உள்­ளன. தற்­போது ‘அறம்’ படத்தின் இறு­திக்­கட்டப் பணிகள் தீவி­ர­மாக நடை­பெற்று வரு­கின்­றன. ‘அறம்’ தீபா­வ­ளிக்கு வெளி­யா­வதை அடுத்து அப்­ப­டத்தின் பின்­னணி இசை தற்­போது முடி­வ­டைந்­துள்­ளது. ‘அறம்’படம் பற்றி, தனது பேஸ்புக் பக்­கத்தில் சில தக­வல்­களை தெரி­வித்­துள்ளார் ஜிப்ரான். ‘அறம்’ […]