ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகள் குழு பின்லாந்து பயணம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பின்லாந்துக்கான  உத்தியோகபூர்வ விஜயத்தில் இணைந்து கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின்  பிரதிநிதிகள் குழுவொன்று இன்றிரவு (07) பின்லாந்து பயணமாகின்றது. இக்குழுவில் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நிதியமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க, பிரதரின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சமன் அதாவுதஹெட்டி மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளடங்குகின்றன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க  கடந்த 5 ஆம் திகதி தனிப்பட்ட சுற்றுலா பயணமொன்றை மேற்கொண்டு ஜேர்மனி நோக்கி […]

ஹம்பாந்தோட்டை துறைமுகம் நாட்டுக்கு சுமை – சரத் பொன்சேகா

கடந்த ஆட்சிகாலத்தில் நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்த விதத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினருக்கு மறந்து போயுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டியுள்ளார். களனி தொகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோது  மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு கொடுப்பதற்கு எதிரான நேற்றைய ஆர்ப்பாட்டம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தை விற்பனை செய்யும் எண்ணம் அரசுக்கு இருக்கவில்லை.எனினும் ஹம்பாந்தோட்டை […]

கொழும்பில் நாளை 15 மணித்தியால நீர் வெட்டு

கட்டாய திருத்த நடவடிக்கைகளுக்காக நாளை (8) கொழும்பை சூழவுள்ள பிரதேசங்களில் 15 மணித்தியாலங்களுக்கு நீர்விநியோக தடை மேற்கொள்ளவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய நாளை பிற்பகல் 2 மணியிலிருந்து மறுநாள் (9) அதிகாலை 5 மணிவரை நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர மற்றம் பண்டாரநாயக்கபுர ஆகிய பிரதேசங்களுக்கு இக்காலப்பகுதியினுள் நீர்விநியோகத் தடை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ராஜகிரியவிலிருந்து நாவல பல்கலைக்கழகம் வரையான பிரதான […]

காணாமல் போன சுவீடன் ஊடகவியலாளரின் தலை,கால்கள் கடலில் இருந்து மீட்பு

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர், ஒரு நீர் மூழ்கிக் கப்பலில் ஆழ்கடலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது காணாமல் போயிருந்த சுவீடன் நாட்டைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளர் ஒருவரின் உடற்பாகங்கள் பையொன்றிலிருந்து கடலுக்கடியில் கிடைத்துள்ளதாக டென்மார்க் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர் தலை மற்றும் இரண்டு கால்களும் குறித்த பையில் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அத்துடன் அவரது ஆடைகளைக் கொண்டுள்ள இன்னொரு பையும் கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டதாக கோன்ஹேகன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பீட்டர் மேட்சன் என்பவரது கடல் சாகசங்களைப் பற்றிய நூல் ஒன்றை […]

குற்றத்தை ஒப்புக் கொண்டார் நடிகர் ஜெய்; 6 மாதங்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் ரத்து

 மதுபோதையில் வாகனம்.செலுத்தி விபத்து ஏற்படுத்தியமை தொடர்பான தன்மீதான குற்றச்சாட்டைஒப்புக் கொண்ட நடிகர் ஜெய்யின் சாரதி அனுமதிப்பத்திரத்தை ஆறு மாதங்களுக்கு ரத்து செய்ததுடன். 5200 ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நடிகர் ஜெய் கடந்த செப்டம்பர்  21 ஆம் திகதி மதுபோதையில் காரை செலுத்திச் சென்று வீதி தடுப்புச்சுவரில் மோதிவிபத்து ஏற்படுத்தியிருந்தார். இதனையடுத்து ஜெய் மீது மதுபோதையில் கார் செலுத்தியமை, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தமை, அதி வேகமாக வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட 3  குற்றச்சாட்டின் கீழ் […]