இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

டொலரொன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் இலங்கையுடன் மேற்கொள்கின்ற வெளிநாட்டு நாணய கொடுக்கல் வாங்கலினூடாக இலங்கையின் வெளிநாட்டு பரிமாற்றம் வலுவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நாட்டிலுள்ள வங்கிகளினூடாக மேற்கொள்ளப்படுகின்ற அமெரிக்க டொலர் கொடுக்கல் வாங்கலும் இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், அமெரிக்கா டொலரொன்றுக்கான இலங்கை நாணயப் பெறுமதி 155 ரூபாவாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.    

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் டீ.வி. சானக்கவுக்கு பொலிஸ் அழைப்பாணை

நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் டீ.வி. சானக்க ஆகியோரை எதிர்வரும் 10 ஆம் திகதி செவ்வாய் கிழமை ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்துக்கு வருகை தருமாறு அழைப்பாணை  விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வௌ்ளிக்கிழமை (06) ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக அவர்கள்  இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கம்­ப­ளையில் காணாமல் போன ரிப்பர் லொறி இலக்­கங்கள் மாற்­றப்­பட்ட நிலையில் மீட்பு!

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர்) கம்­பளை பகு­தியில் காணாமல் போன 45 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான ரிப்பர் லொறி நிட்­டம்­புவ பகு­தியில் மீட்­கப்­பட்­ட­தாக பூண்­டு­லோயா பொலிஸார் தெரி­வித்­தனர். நிட்­டம்­புவ உடாம்­பிட்­டிய பிர­தே­சத்தில் குடி­யி­ருப்பு பகு­தி­யொன்­றி­லேயே இந்த ரிப்பர் லொறி மீட்­கப்­பட்­டுள்­ளது. கடந்த மே மாதம் 2 ஆம் திகதி கம்­பளை பொலிஸ் நிலை­யத்தில் குறித்த லொறியின் உரி­மை­யா­ள­ரினால் தனது லொறி காணா­மல்­போ­ன­தாக முறைப்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே மீட்­கப்­பட்­டுள்­ளது.

திமுத் கருணாரட்ன டெஸ்டில் 3,000 ஓட்டங்கள்

பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக துபாய் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­று­வரும் இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் (பகல் இரவு) போட்­டியில் அபா­ர­மாகத் துடுப்­பெ­டுத்­தா­டிய திமுத் கரு­ணா­ரட்ன 4 ஓட்­டங்­களால் தனது கன்னி இரட்டைச் சதத்தைத் தவ­ற­விட்டார். எனினும் இலங்கை அணி முத­லா­வது இன்­னிங்ஸில் 400 ஓட்­டங்­களைக் கடக்க பெரிதும் உத­வினார். இந்தப் போட்­டியில் அவர் 3,000 டெஸ்ட் ஓட்­டங்கள் என்ற மைல் கல்லை எட்­டி­யமை விசேட அம்­ச­மாகும். அபு­தா­பியில் நடை­பெற்ற முத­லா­வது டெஸ்ட் போட்­டியில் இல்­லாத ஓட்­டத்­திற்கு ஆசைப்­பட்டு சதம் பெறும் வாய்ப்பைத் […]

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கெப் மோதி ஒருவர் மரணம்: சாரதி கைது

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர்) திம்­புள்ள – பத்­தனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ஹட்டன் – நுவ­ரெ­லியா பிர­தான வீதியில் கொட்­ட­கலை பகு­தியில் கெப் மோதி­யதில் ஒருவர் பலி­யா­ன­தாக திம்­புள்ள – பத்­தனை பொலிஸார் தெரி­வித்­தனர். கொட்­ட­கலை டிரேட்டன் தோட்­டத்தை சேந்த 70 வய­து­டைய நான்கு பிள்­ளை­களின் தந்­தையே உயி­ரி­ழந்­த­வ­ராவார். கொட்­ட­கலை நுவ­ரெ­லியா பிர­தேச சபைக்­க­ரு­கிலே வெள்­ளிக்­கி­ழமை மாலை பாதையைக் கடக்க முற்­பட்ட போது லிந்­து­லை­யி­லி­ருந்து கொட்­ட­கலை நோக்கிச் சென்ற கெப் வண்­டியில் மோதுண்டே இந்த விபத்து இடம்­பெற்­றுள்­ளது. […]