ரோஹிங்யா அக­திகள் மீதான அத்­து­மீறல்; அக்­மீ­மன தயா­ரத்ன தேர­ருக்குப் பிணை

மியன்­மா­ரி­லி­ருந்து வந்த ரோஹிங்யா முஸ்லிம் அக­தி­களை உட­ன­டி­யாக வெளி­யேற்றி நாடு கடத்­து­மாறு பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் செய்த அத்து மீறல்கள் மற்றும் தாக்­கு­தல்கள் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட சிங்­கள ராவய அமைப்பின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரரை பிணையில் செல்ல கல்­கிஸை நீதிவான் மொஹம்மட் மிஹால் அனு­மதி வழங்­கினார். 5 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான 3 சரீரப் பிணை­களில் செல்ல அவ­ருக்கு அனு­மதி வழங்­கப்பட்­டது.

‘மலையக மக்களின் உயிர் வாழும் உரிமைக்கான ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோம்’

(க.கிஷாந்தன்) மலையக மக்களின் உயிர் வாழும் உரிமைக்கான ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் ஹட்டன் நகரில் துண்டுப் பிரசுரம் மற்றும் தபாலட்டைகளில் கையெழுத்து பெறும் நடவடிக்கையை நேற்று முன்னெடுத்திருந்த போது பிடித்த படம்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் உட்பட அறுவர் கைது

ஹம்பாந்தோட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க சென்ற வேளையில் நாமல் ராஜபக்ஷ உட்பட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, டீ.வி. சானக்க, பிரசன்ன ரணவீர மற்றும்  மக்கள் பிரதிநிதிகளான உபாலி கொடிகார, சம்பத் அத்துகோரல, ‘தாயகத்துக்காக இராணுவத்தினர்’  அமைப்பின் அழைப்பாளர் அஜித் பிரசன்ன ஆகிய அறுவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரு மொழி நாயகி தன்ஷிகா

‘கபாலி’ படத்தில் ரஜி­னியின் மக­ளாக நடித்த தன்ஷிகா, அதன்­பி­றகு தனது பெய­ருக்கு முன்னாள் சாய் என்­பதை இணைத்து சாய் தன்­ஷிகா ஆனார். ‘கபாலி’ படத்தில் கிடைத்த புகழ் கார­ண­மாக தமிழ், மட்­டு­மின்றி மலை­யாளம், தெலுங்­கிலும் அவர் பிசி­யாகி வரு­கிறார். அந்த வகையில், தமிழ், மலை­யா­ளத்தில் தயா­ரா­கி­யுள்ள ‘சோலோ’ படத்தில் துல்கர் சல்­மா­னுடன் நடித்­துள்ளார். தெலுங்கில் ‘வாலு­ஜடா’ படத்தைத் தொடர்ந்து இப்­போது ‘மேலா’ என்­றொரு படத்தில் கமிட்­டா­கி­யி­ருக்­கிறார் சாய் தன்­ஷிகா. சூர்யா தேஜா நாய­க­னாக நடிக்கும் இந்த முழு­நீள […]

உலகில் காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் பட்­டி­யலில் இலங்கை இரண்டாம் இடம் – சட்­டத்­த­ரணி றுக்கி பெர்­ணான்டோ

(ரீ.கே.றஹ்­மத்­துல்லா) உலகில் காணாமல் ஆக்­கப்­பட்டோர் பட்­டி­யலில் இலங்கை இரண்டாம் இடத்தில் இருக்­கின்ற அதே­வேளை இலங்­கையில் கடந்த யுத்தம் மற்றும் அசா­தா­ரண காலங்­களில் 65, 000 பேர் காணாமல் ஆக்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்கம் தெரி­வித்­துள்­ள­தாக சட்­டத்­த­ரணி றுக்கி பெர்ணான்டோ தெரி­வித்தார். இளைஞர் அபி­வி­ருத்தி ‘அகம்’ நிறு­வ­னத்தின் ஏற்­பாட்டில் கிழக்கு மாகாண ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கான காணாமல் ஆக்­கப்­பட்டோர் அலு­வ­லகம் மற்றும் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்டோர் சார் ஐ.நா. பொறி­மு­றைகள் தொடர்­பாக மட்­டக்­க­ளப்பு சத்­தி­ர­கொண்டான் சர்­வோ­தய பயிற்சி நிலை­யத்தில் இடம்­பெற்ற செய­ல­மர்வில் கலந்து கொண்டு […]