லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக நிஸ்ஸங்க நாணயக்கார நியமனம்

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி நிஸ்ஸங்க நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார். அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் உத்தரவுக்கமைய இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹேமக அமரசூரியவினால் இன்று(13) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அவ்வமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, பணச்சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷலீல முணசிங்க கடந்த 11 ஆம்  திகதி அந்நிறுவனத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டு பணி […]

அத்தனகல்ல தொகுதி ஸ்ரீலசுக அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நியமனம்

அத்தகனல்ல தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் வீடொன்றிலிருந்து மர்மமான முறையில் உயரிழந்த தம்பதியின் சடலங்கள் மீட்பு

அநுராதபுரம் ஹல்மில்லேவகுளம பிரதேசத்திலுள்ள வீ‍டொன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த இருவரும் கணவன், மனைவி என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த இரு சடலங்களும் இன்றுக்காலை(13) மீட்கப்பட்டதாகவும், இவ்விருவரின் மரணத்துக்கு காரணம் கொலையா தற்கொலையா என தெரியவராத நிலையில் அநுராதபும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

33ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா: இரண்டாம் நாள் மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகளில் வட மாகாணத்திற்கு 4 தங்கம் உட்பட 7 பதக்கங்கள்

(நெவில் அன்­தனி) திய­கம மஹிந்த ராஜ­பக் ஷ விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­று­வரும் 33ஆவது அகில இலங்கை பாட­சா­லைகள் விளை­யாட்டு விழா மெய்­வல்­லுநர் போட்­டி­களின் இரண்டாம் நாளான நேற்­றைய தினம் வட மாகாண பாட­சா­லை­க­ளுக்கு 4 தங்கப் பதக்­கங்கள், இரண்டு வெள்ளிப் பதக்­கங்கள், ஒரு வெண்­கலம் உட்­பட 7 பதக்­கங்கள் கிடைத்­தன. 18 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான உயரம் பாய்­தலில் தெல்­லிப்­பழை மகா­ஜனா கல்­லூ­ரியின் சந்­தி­ர­கு­மாரன் ஹெரீனா 1.58 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்­கத்தை வென்றார். இதே வயதுப் பிரிவில் […]

கொழும்பு நீதிமன்ற வளாகத்திலிருந்து யுக்ரைனிய கைதி தப்பிச் செல்ல முயற்சி! சிறைக்காவலர்கள்ஆ காயத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மடக்கிப்பிடித்தனர்

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற கட்டடத் தொகுதியிலிருந்து இன்று காலை யுக்ரைனிய கைதி ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார். அதையடுத்து சிறைக் காவலர்கள் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்த பின்னர் அவர் மீண்டும் மடக்கிப்பிடித்துள்ளனர்.