கட்டுநாயக்க விமான நிலையத்தில் 30 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் பெறுமதியான ஒரு தொகை தங்க ஆபரணங்களை இலங்கை கடத்தி வந்த சந்தேக ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக விமான நிலைய சுங்கத்தினர் தெரிவிக்கின்றனர். ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு  சொந்தமான விமானமொன்றின் மூலம் துபாயிலிருந்து வந்த இச்சந்தேக நபரை  சோதனையிட்டபோது அவரது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆபரணங்கள் சுங்கத்தினரால் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட தங்க ஆபரணங்களின் பெறுமதி சுமார் 3 இலட்சம் ரூபா என சுங்கப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க […]

லக்ஷபான நீர் தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு! மேலும் இரு நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு

மத்திய மழைநாட்டில்  நேற்றிரவு முதல் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக இன்று லக்ஷபான நீர்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால்  களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது இதன்காரணமாக களனி கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் மிகுந்து அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது. அத்துடன் கடும் மழை மற்றும் பனிமூட்டத்தினால் ஹட்டன் நுவரெலிய மற்றும் ஹட்டன் கொழும்பு வீதிகளில் பயணம் செய்யும் வேளைகளில் மிகுந்த […]

கடற்படையினால் கைப்பற்றப்பட்ட ஆறு இந்திய மீன்பிடி படகுகள் மீள கையளிப்பு

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக மீன் பிடியில் ஈடுபட்டதன் காரணமாக கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்த 6 இந்திய மீன்பிடி படகுகள் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளன. இந்திய கடற்பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சொந்தமான  கப்பலிடம் குறித்த 6 மீன்பிடி படகுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவிக்கின்றனர். இதேவேளை, கடந்த செப்டெம்பர் 30 ஆம் திகதியிலிருந்து இதுவரையில், தம்மால் கைப்பற்றப்பட்ட இந்திய படகுகளில் 26 படகுகளை இவ்வாறு இந்திய அரசிடம் கையளித்துள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர். படம்: இலங்கை கடற்படை

நுவரெலியா மாவட்டத்தின் இரண்டு பிரதேச சபைகள் ஐந்தாக பிரிக்கப்படும் – அமைச்சர் பைஸர் முஸ்தபா

நுவரெலியா மாவட்டத்திலுள்ள இரண்டு பிரதேச சபைகளை ஐந்தாக பகுதிகளாக பிரித்து ஐந்து பிரதேச சபைகளை உருவாக்கவுள்ளதாக உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். அதற்கமைய அம்பகமுவ மற்றும் நுவரெலியா பிரதேச சபைகள் இவ்வாறு பிரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இவ்விரு பிரதேச சபைகளிலும் சனத்தொகை இரண்டு இலட்சத்தை விடவும் அதிகம் என்பதால் சில வேலைத்திட்டங்களுக்கு தடை ஏற்பட்டுள்ளமையினால்  அதனை இலகுவாக்குவதற்கு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்றும் நாளையும்(15) மலையகத்தை […]

விரைவில் கொழும்பு நகருக்கு 100 இலவச வைபை வலயங்கள்

இலவச வைபை வழங்கும் நாடளாவிய வேலைத்திட்டத்தின் மற்றொரு அங்கமாக கொழும்பு நகரை மையமாகக்கொண்டு 100 வைபை வலயங்களை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் முதற்கட்டமாக கொழும்பு மாநகர சபையின் தலைமையில் 20 வைபை வலயங்களை ஸ்தாபிக்கும் வேலைத்திட்டம்  தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் செயலகத்தின் கொள்ளை அபிவிருத்தி காரியாலம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது 10 இலவச வைபை வலயங்கள் இயங்கி வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய தகவல் தொழில் நுட்ப உலகத்துடன் இலங்கையர்களை சமீபமாக்கும் […]