விஜய் – எடப்பாடி சந்திப்பு

நடிகர் விஜய் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வர் வாசஸ்தலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் திரைப்படம் எதிர்வரும் புதன்கிழமை தீபாவளி வெளியீடாக திரைக்கு வர உள்ளது. இப்படத்திலுள்ள சில காட்சிகளுக்கு விலங்குகள் நல வாரியம் சான்றிதழ் வழங்காததால் இன்னும் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளியாக இன்னும் மூன்று தினங்கள் உள்ள நிலையில் படம் குறிப்பிட்ட நாளில் வெளியாகுமா? என்ற  கேள்வி அவரது […]

இலத்திரனியல் வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்தத் திட்டம்

இலத்திரனியல் வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்துவதற்கு அவசியமான திட்டங்களை தற்போது மேற்கொண்டு வருவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதன்மூலம் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பின்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய முடியமென அவர் தெரிவித்தார். சர்வதேச வெள்ளை பிரம்பு தினத்தை முன்னிட்டு இரத்மலானை தொழிலாளர் சங்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உ.ரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அம்பாறை பகுதியில் 3 கைக்குண்டுகள் மீட்பு

அம்பாறை, வீரகொட பிரதேசத்திலிருந்து மூன்று கைக்குண்டுகளை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெண்ணொருவர் வழங்கிய தகவலுக்கமைய இவ்வாறு 3 கைக்குண்டுகளையும் மேலும் சில ரவைகளையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

7,500 கிலோ கழிவுத் தேயிலையுடன் பயணித்த ரிப்பர் டிக்கோயாவில் சிக்கியது: இருவர் கைது

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர்) அனு­ம­திப்­பத்­தி­ர­மின்றி ஒரு தொகை கழிவுத் தேயி­லையை ரிப்பர் லொறியில் ஏற்றிச் சென்ற இரு­வரை ஹட்டன் பொலிஸார் ஹட்டன் சிறுவர்களை பொக­வந்­தலாவை பிர­தான வீதியின் டிக்­கோயா தேயிலை தொழிற்­சா­லைக்கு அருகில் வைத்து கைது செய்­துள்­ளனர். அனு­ம­தி­பத்­தி­ர­மின்றி சட்ட விரோ­த­மாக அக்­க­ரப்­பத்­தனை பகு­தி­யி­லி­ருந்து கழி­வுத்­தே­யி­லை­யுடன் லொறி ஒன்று செல்­வ­தாக கிடைத்த ரக­சிய தவ­லை­ய­டுத்தே 7,500 கிலோ கழிவு தேயி­லை­யுடன் ரிப்பர் லொறி சுற்றி வளைக்­கப்­பட்­டது.கைப்­ப­ற்றப்­பட்ட லொறி­யுடன் கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர் இரு­வ­ரையும் ஹட்டன் மாவட்ட […]

பெண்ணின் பாலியல் துஷ்பிரயோகத்தி னால் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறும் ஆண்

பெண்­ணொ­ருவர் தன்னை பாலியல் துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­தி­யதால் தான் பெரும் உடல், உள வேத­னையை எதிர்­கொண்­ட­தாக திரைப்­பட இயக்­கு­ந­ரான ஆண் ஒருவர் தெரி­வித்­துள்ளார். பிரிட்­டனைச் சேர்ந்த பிராங் மெக்­கோவன் எனும் இந்த இயக்­குநர், பிரித்­தா­னிய திரைப்­பட மற்றும் தொலைக்­காட்சி விருது வழங்கும் அமைப்­பான பவ்­டாவின் விரு­துக்கு பரிந்­து­ரைக்­கப்­பட்­டி­ருந்­தவர். இவர் ஓர் ஓரின சேர்க்­கை­யாளர் ஆவார். இந்­நி­லையில் செரில் கோட்ரெல் என்ற பெண் ஒரு­வரிர் தன்னை பல­வந்­த­மாக பாலியல் துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­தி­ய­தாக பிராங் மெக்­கோவன் தெரி­வித்­துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஸ்கொட்­லாந்தின் கிளாஸ்கோ […]