தீபா­வளி முற்­பணம் வழங்­காத தோட்ட நிர்­வா­கங்­க­ளுக்கு எதி­ராக இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் நட­வ­டிக்கை! – மத்­திய மாகாண அமைச்சர் மரு­த­பாண்டி ரமேஷ்­வரன்

(க.கிஷாந்தன்) தீபா­வளி முற்­பணம் வழங்­காத தோட்­டங்­க­ளுக்கு எதி­ராக இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக மத்­திய மாகாண விவ­சா­யத்­துறை மற்றும் தமிழ்க் கல்வி அமைச்சர் மரு­த­பாண்டி ரமேஷ்­வரன் தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் தெரி­விக்­கையில், தீபா­வளி பண்­டி­கைக்காக ஒவ்­வொரு வரு­டமும் அர­சாங்கத்­து­டனும் கம்­ப­னி­க­ளு­டனும் பேசி தோட்­டத் ­தொ­ழி­லா­ளர்­க­ளுக்கு இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் கடந்த காலங்­களில் அவ­ர­வ­ருக்கு ஏற்­ற­வ­கையில் 7,500 ரூபா தொடக்கம் 10,000 ரூபா வரை முற்­ப­ணத்தைப் பெற்றுக் கொடுத்­தி­ருக்­கி­றது. ஆனால், இவ்­வ­ருடம் பல தோட்­டங்­களில் தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு […]

புதிய மலையாள வரவு

மலையா­ளத்திலிருந்­து தமி­ழுக்கு படை­யெ­டுத்து வரும் நடி­கை­யரின் எண்­ணிக்கை, நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கி­றது. இந்த வரி­சையில், லேட்டஸ்ட் வரவு, நமிதா பிரமோத். கேர­ளாவின் பிர­பல சுற்­றுலா தல­மான, கும­ரகோம் தான், மேடத்­துக்கு சொந்த ஊர். டிராபிக், விக்­ர­மா­தித்யன், சந்­தி­ரேட்டன் எவிடே போன்ற ‘ஹிட்’ படங்­களில் நடித்­தி­ருந்­தாலும், தமி­ழுக்கு சற்று தாம­த­மாகத் தான் அடி எடுத்து வைத்­துள்ளார். ப்ரியதர்ஷன்  இயக்­கத்தில் உத­ய­நி­திக்கு ஜோடி­யாக நிமிர் படத்தில் நடிக்­கிறார் நமிதா. இவர் விஷ­யத்தில் கோலி­வூட்டை விட டோலிவூட் முந்­தி­விட்­டது என்று […]

வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து எழுதி கொடுக்க வில்லை!- – ரவூப் ஹக்கீம்

(காங்­கே­ய­னோடை நிருபர்) வடக்கு கிழக்கு இணைப்­புக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஆத­ரவு தெரி­வித்து எழுதி கொடுக்­க­வில்லை. முஸ்­லிம்கள் மத்­தியில் தேவை­யில்­லாத பீதியை கிழப்பி விட வேண்டாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். காத்­தான்­கு­டி­யில் ­நேற்று நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் தொடர்­பான கலந்­து­ரை­யா­டலில் உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். காத்­தான்­குடி கடற்­க­ரை­யி­லுள்ள பிஸ்மி வர­வேற்பு மண்­ட­பத்தில் நடை­பெற்ற இந்த ஒன்று கூடலில் தொடர்ந்து கருத்து தெரி­வித்த அவர், வடக்கு, […]

வவுனியாவில் சிறுவர்களை பயன்படுத்தி வியாபாரம் செய்த ஐவர் பொலிஸாரால் கைது!

(கதீஸ்) வவு­னியா நகர்ப்­ப­கு­தியில் ஊது­பத்தி பொருட்கள் விற்­ப­னையில் பல மாதங்­க­ளாக சிறு­வர்­களை பயன்­ப­டுத்தி வியா­பார நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டு வந்த ஐவரை குடி­யி­ருப்பு பூங்கா வீதியில் வைத்து கைது செய்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். இது தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­கையில், கடந்த பல மாதங்­க­ளாக புத்­தளம் பகு­தி­யி­லி­ருந்து வவு­னியா நகர்ப்­ப­கு­தி­களில் ஊது­பத்­தி­களை வீதி­யோ­ரங்­களில் விற்­பனை செய்து வரு­வ­தாக வவு­னியா உத­விப்­பி­ர­தேச செய­லா­ள­ருக்கு தகவல் கிடைக்கப் பெற்­றது. இது தொடர்­பாக பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கப்­பட்டு கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். குறித்த நபர்கள் ஒரு […]

அனுமதிபத்திரமின்றி இரு பசு மாடுகளை லொறியில் கொண்டு சென்றவர்கள் கைது!

(க.கிஷாந்தன்) அனு­ம­தி­பத்­தி­ர­மின்றி பசு மாடு­களைக் கொண்டு சென்ற இருவர் நோர்வூட் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். டிக்­கோயா புளி­யா­வத்தை தோட்ட பகு­தி­யி­லி­ருந்து கம்­பளை பகு­திக்கு இறைச்­சிக்­காக கொண்டு சென்று கொண்­டி­ருந்த போதே குறித்த நபர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். மாடு­களை கொண்டு சென்ற லொறியை பொலிஸார் டிக்­கோயா பகு­தியில் வைத்து இடை­ம­றித்து விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் போதே இவ்­வாறு அனு­ம­தி­பத்­தி­ர­மின்றி மாடு­களை கொண்டு செல்­வது தெரி­ய­வந்­துள்­ளது. அதன்பின் பசு மாடு­க­ளையும் அதனை கொண்டு செல்ல பயன்­ ப­டுத்­திய லொறியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.