விஜயின் சக்சஸ் சீக்ரட் சொல்லும் ‘மெர்சல்’ தயாரிப்பாளர்

கிராமம், நகரம் என எக்‌ஷன் அள்ளும் விஜய், காஜல், சமந்தா, நித்­யா­மேனன் என கலர்ஃபுல் ஹீரோ­யின்கள். ஸ்ரீதே­னாண்டாள் ஃபிலிம்ஸின் 100 ஆவது படம்; ஏ.ஆர்.ரஹ்­மா­னுக்கும் விஜய்க்கும் சினி­மாவில் இது சில்வர் ஜூப்ளி ஆண்டு என செம கெத்து காட்­டு­கி­றது ‘மெர்சல்’. ‘‘எங்க நிறு­வ­னத்தின் தயா­ரிப்பில் விஜய் சாரை வச்சு ஒரு படம் பண்­ணி­ட­ணும்னு ரொம்ப நாளா­கவே ஆசைப்­பட்டோம். அந்த கனவு ‘மெர்­சல்’ல நன­வாகி இருக்கு. என் கணவர் முரளி ஒருநாள் விஜய் சாரை பார்க்கப் போனார். முர­ளி­கிட்ட […]

டோஸ்ட்­மாஸ்டர்ஸ் வேடிக்கை மோட்டார் வாகன போட்டி

டோஸ்ட்­மாஸ்டர்ஸ் கழ­கத்தின் மாவட்டம் 82 மற்றும் மோட்டார் வாகன சார­திகள், மோட்டார் சைக்­கி­ளோட்­டிகள் இலங்கை சங்கம் (ஸ்லாடார்) ஆகி­யன இணைந்து ‘இலக்கை அடை­யுங்கள்’ (கெட் டூ த பொய்ன்ட்) என்ற கருப்­பொ­ருளில் நடத்தும் டோஸ்ட்­மாஸ்டர்ஸ் வேடிக்கை மோட்டார் வாகனப் போட்டி எதிர்­வரும் 22ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது. டோஸ்ட்­மாஸ்டர்ஸ் வேடிக்கை மோட்டார் வாகனப் போட்­டிக்­கான உத்­தி­யோ­கப்­பூர்வ கொடியை 2017/2018 டோஸ்ட்மாஸ்டர்ஸ் சர்வதேச அமைப்பின் மாவட்ட டோஸ்ட்மாஸ்டர்ஸ் தலைவர் பால்ராஜ் அருணாசலத்திடமிருந்து (இடமிருந்து மூன்றாவது), ஸ்லாடார் உதவித் தலைவர் […]

காதல் முறிவினால் காதலனின் ஆடம்பர காரை நீச்சல் தடாகத்துக்குள் மூழ்கடித்த காதலி

காதல் உறவு முறிந்ததால் ஆத்திரமடைந்த யுவதியொருவர், தனது முன்னாள் காதலனின் காரை நீச்சல் தடாகத்துக்குள் மூழ்கடித்த சம்பவம் பஹாமஸில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த 41 வயதான கை ஜென்டில் என்பவர் ரஷ்யாவில் பிறந்த மொடலா கிறிஸ்டினா குச்மா எனும் 24 வயதான யுவதியை ஒன்றரை வருடங்களாக காதலித்தார். அண்மையில் இவர்கள் விடுமுறைக்காக பஹாமஸுக்கு சென்றிருந்த வேளையில் இரு வருக்கும் முரண்பாடு ஏற்பட்டது. அதையடுத்து உணவு விடுதியொன்றில் வைத்து கை ஜென்டிலின் முகத்தில் தேநீரை வீசியெறிந்த கிறிஸ்டினா அங்கிருந்து […]

மியன்மார் ரோஹிங்யா அகதிகள் மீதான அச்சுறுத்தல்: அரம்பேபொல ரத்னசார தேரர் கைது

மியன்மார் ரோஹிங்யா அகதிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக தேடப்பட்ட வண. அரம்பேபொல ரத்னசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். நிட்டம்புவையில் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கேகாலை வர்த்தக நிலையம் ஒன்றினுள் இருந்து சடலம் மீட்பு

கேகாலை பரகம்மான பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையமொன்றிலிருந்து கொலையுண்ட சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த நபர் பரகம்மான பிரதேசத்திலுள்ள கட்டட கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையமொன்றின் ஊழியரான 35 வயதான ஒருவரெனவும், அவர் நேற்றிரவு அவ்வர்த்தக நிலையத்திலேயே தங்கியிருந்துள்ளார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இன்றுக்காலை வர்த்தக நிலைய உரிமையாளர் வழமைப்போல வியாபார நடவடிக்கைகளுக்காக வர்த்தக நிலையத்தை திறந்த வேளையில் குறித்த ஊழியர் கொலையுண்ட நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். அதனையடுத்து, வர்த்தக நிலைய […]