நாவற்குழி – யாழ். ரயில் சேவை இடைநிறுத்தம்

வடக்கு ரயில் மார்க்கத்தின் நாவற்குழி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையிலான இந்த சேவை இடைநிறுத்தப்படவுள்ளது. இவ்விரு ரயில் நிலையங்களுக்கும் இடைப்பட்ட மார்க்கத்திலுள்ள பாலமொன்றின் புனரமைப்பு நடவடிக்கை கருதி இவ்வாறு இடைநிறுத்தப்படுவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய வடக்கு ரயில் சேவைகள் நாவற்குழி ரயில் நிலையத்துடன் மட்டுப்படுத்தப்படுவதுடன் அங்கிருந்து பயணிகள் பஸ் மூலம் யாழ்ப்பாணம் சென்றடைவதற்கு நடவடிக்கை […]

ஹட்டன் டன்பார் தோட்­டத்தில் மண்­ச­ரி­வினால் வீடு பாதிப்பு!

(நோர்டன் பிரிட்ஜ் நிருபர்) ஹட்டன் டன்பார் தோட்­டத்தில் மண்­ச­ரி­வினால் வீடு ஒன்று பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்­ளது. ஹட்டன் – பனமூர் தோட்­டத்­துக்குச் செல்லும் பிர­தான பாதையின் டன்பார் தோட்ட கோவி­லுக்கு அரு­கி­லுள்ள வீடே இந்த மண்­ச­ரி­வினால் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளது. வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற இந்தச் சம்­ப­வத்­தினால் வீட்டின் இரண்டு அறை­களும் உடை­மை­களும் சேத­ம­டைந்­துள்­ளன. இத­னை­ய­டுத்து மத்­திய மாகா­ண­சபை உறுப்­பினர் சோ.ஸ்ரீதரன் டன்பார் தோட்­டத்­துக்கு விஜயம் செய்து பாதிப்­புக்­களைப் பார்­வை­யிட்­ட­தோடு உரிய நிவா­ர­ணங்­களைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

இலங்கை கடற்­ப­ரப்­பினுள் அத்­து­மீறி நுழைந்து மீன்­பி­டியில் ஈடு­பட்ட நிலையில் வெள்­ளிக்­கி­ழமை இரவு தலை­மன்னார் கடற்­ப­ரப்பில் கடற்­ப­டை­யி­ன­ரினால் கைது செய்­யப்­பட்ட தங்­கச்சி­ மடம் பகு­தியை சேர்ந்த 4 மீன­வர்­க­ளையும் அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு மன்னார் பதில் நீதிவான் நேற்று உத்­த­ர­விட்டார்.

யாழில் துப்பாக்கிப் பிரயோகம்; 27 வயதான இளைஞர் காயம்!

(பாறுக் ஷிஹான்) யாழ்ப்­பாணம் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மணி­யம்­தோட்டம் பகு­தியில் இடம்­பெற்ற துப்­பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படு­கா­ய­ம­டைந்தார். நேற்றுப் பகல் இடம்­பெற்ற இத்துப்­பாக் கிச் சூட்டில் உத­ய­புரம் பகு­தியைச் சேர்ந்த 27 வயதான இளை­ஞரே படு­கா­ய­ம­டைந்­துள்ளார். இந்த சம்­ப­வத்தில் படு­கா­ய­ம­டைந்த இளைஞர் யாழ். போதனா வைத்­தி­ய­சா­லையின் அதி­தீ­விர சிகிச்சை பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். குறித்த இளை­ஞனின் மார்புப் பகு­தி­யினை துப்­பாக்கி குண்­டுகள் துளைத்­துள்­ள­தாக அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­துடன் சம்­பவம் தொடர்­பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பறக்கும் விமானத்திலிருந்து உயிருள்ள வான்கோழிகள் வீழ்த்தப்பட்டமை குறித்து விசாரணை

பறந்து கொண்­டி­ருந்த விமா­ன­மொன்­றி­லி­ருந்து உயி­ருள்ள வான்­கோ­ழி­களை வீழ்த்­தி­யமை தொடர்­பாக அமெ­ரிக்க விமானப் போக்­கு­வ­ரத்து அதி­கா­ரிகள் விசா­ரணை நடத்­த­வுள்­ளனர். ஆர்­கன்சாஸ் மாநி­லத்தின் எல்­விலே நகரில் கடந்த வார இறு­தியில் ஆர்­கன்சாஸ் விழா கொண்­டா­டப்­பட்­டது. இக்­கொண்­டாட்­டத்தின் ஒரு பகு­தி­யாக, தாழ்­வாகப் பறந்த விமானம் ஒன்றின் விமா­னியால் உயி­ருள்ள வான் ­கோ­ழிகள் வீழ்த்­தப்­பட்­டன. விழாவில் கலந்­து­கொண்ட மக்கள் அந்த வான்­கோ­ழி­களை துரத்திப் பிடித்­தனர். இந்­நி­லையில், உயி­ருள்ள வான் கோழிகள் விமா­னத்­தி­லி­ருந்து வீழ்த்­தப்­பட்­டதில் விதி­மு­றைகள் ஏதேனும் மீறப்­பட்­டுள்­ள­னவா என்­பது குறித்து தாம் விசா­ரணை […]