தாய்வான் என நெற்றியில் பச்சை குத்திக்கொண்ட பிரித்தானியர்

பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது நெற்றியில் தாய்வான் எனும் பச்சைக் குத்திக் கொண்டுள்ளார். 32 வயதான போல் எனும் பிரித்தானியர், தாய்வானின் சுதந்திரப் போராட்ட இயக்கத்துக்கு ஆதரவளிக்கிறார். தாய்வானின் ககோசியுங் நகரில் அவர் வசிக்கிறார். இந்நிலையில், அவர் தனது நெற்றியில் சீன மொழியில் தாய்வான் எனும் சொல்லை டாட்டூ குத்திக்கொண்டுள்ளார். தாய்வான் சுதந்திரப் போராட்டத்துக்கு தான் தீவிர ஆதரவளிக்கின்ற போதிலும், நெற்றியில் பச்சைக் குத்திக் கொள்வதற்கு தான் அதிக மதுபோதையில் இருந்தமையே காரணம் என போல் […]

ஒரே அறையில் தங்கியிருந்த நண்பனைக் கொலை செய்து 80,000 ரூபாவை கொள்ளையிட்ட நபர் கேகாலையில் கைது

(எஸ்.கே.) நண்பனைக் கொலை செய்து அவரிடமிருந்த 80,000 ரூபாவை கொள்ளையிட்டுச் சென்ற நபரை கேகாலை பொலிஸார் கைது செய்துள்ளனர். கேகாலை புளத்கொஹுப்பிட்டிய வீதியில் கட்டிடப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் தொழில்புரியும் நிட்டம்புவவைச் சேர்ந்த 40 வயதான நபரே கைது செய்யப்பட்டவராவார். இந்த நபர் இந்த நிறுவனத்தில் தொழிலாளியாக கடமையாற்றிக் கொண்டு அந்த நிறுவனத்தில் பணியாற்றும் 35 வயதான நபருடன் ஒரே அறையில் தங்கியிருந்துள்ளார். சந்தேக நபர் கடந்த 19 ஆம் திகதி இரவு அந்த நிறுவனத்துக்குச் […]

அதிக சப்தத்துடன் மோட்டார் சைக்கிள் செலுத்தியவருக்கு 14,500 ரூபா அபராதம்

( மினுவாங்கொடை நிருபர்) பிர­தான வீதியில் மோட்டார் சைக்­கிளை அதிக சப்­தத்­துடன் கவ­ன­யீ­ன­மாக ஓட்டிச் சென்ற நபர் ஒரு­வரை பிய­கம பொலிஸார் கைது செய்து மஹர நீதி­மன்றில் ஒப்­ப­டைத்­துள்­ளனர். மோட்டார் சைக்கிள் சைலன்ஸர் ஊடாக அதிக­­மாக புகையை வெளி­யாக்­கிக்­கொண்டு சென்­றமை, சைலன்ஸர் மூலம் மக்­க­ளுக்கு தொந்­த­ரவு ஏற்­படும் வகையில் வீதியில் அதிக வேகத்­து­டனும் சப்­தத்­து­டனும் சென்­றமை மற்றும் வரு­மானச் சான்­றிதழ் வைத்­தி­ருக்­காமை ஆகிய குற்­றங்­களைப் புரிந்­த­மைக்­கா­கவே குறித்த நபர் கைது செய்­யப்­பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த வருடம் 11,636 சிறுவர், பாலியல் துஷ்பிரயோகங்கள்; 68 சத வீதமானோர் சுய விருப்பத்துடனேயே ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் – சட்டத்தரணி முகம்மட் உவைஸ்

(ரீ.கே.றஹ்­மத்­துல்லா, வி.சுகிர்­த­குமார்) இலங்­கையில் கடந்த வருடம் சிறுவர் துஷ்­பி­ர­யோகம் தொடர்­பாக 9600 சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ள­தாக சட்­டத்­த­ரணி எம்.ஏ.சி. முகம்மட் உவைஸ் தெரி­வித்தார். றூவிஷன் நிறு­வ­னத்தின் அனு­ச­ர­ணை­யுடன் இலங்கை கல்வி அபி­வி­ருத்தி கூட்­ட­மைப்பின் ஏற்­பாட்டில் கிழக்கு மாகாண ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு நேற்று அட்­டா­ளைச்­சேனை ஒஸ்றா மண்­ட­பத்தில் நடத்­தப்­பட்ட சிறுவர் தொடர்­பான விழிப்­பு­ணர்வு கருத்­த­ரங்கில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கையில் அவர் இத்­த­க­வலை வெளி­யிட்டார். அவர் மேலும் தெரி­விக்­கையில், அதி­க­மான சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்­களில் 70 வீதமா­னவை குடும்ப உற­வி­னர்­க­ளி­னா­லேயே மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. வறுமை மற்றும் […]

9 மாதங்களில் ரயில் பாதைகளில் செல்பி எடுத்த 24 பேர் ரயில்களால் மோதப்பட்டு உயிரிழப்பு!

(எஸ்.கே.) 2017 ஆம் ஆண்டு கடந்த 9 மாதங்­களில் ரயில் பாதையில் ரயி­லுடன் செல்பி எடுக்க முயற்­சித்த 24 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக வீதிப் பாது­காப்பு தொடர்­பான தேசிய சபை தெரி­விக்­கின்­றது. வருடா வருடம் ரயில் பாதையில் இடம்­பெறும் விபத்­துகள் அதி­க­ரித்துச் செல்­வ­தா­கவும் 2016 ஆம் ஆண்டு ரயில் பாதையில் ரயிலில் மோதி ஏற்­பட்ட விபத்­து­களில் 180 பேர் உயி­ரி­ழந்து, 256 பேர் காய­முற்­றுள்­ள­தா­கவும் சபை தெரி­விக்­கின்­றது. ரயில்வே குறுக்குப் பாதை­களில் ரயி­லுடன் மோதி 84 விபத்­துகள் இடம்­பெற்­றுள்­ளன. […]