ஓடும் ரயிலை திசை திருப்பி அபாயத்தை ஏற்படுத்த முயற்சித்த மாணவன் கைது!

(தலை­மன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) தலை­மன்­னா­ரி­லி­ருந்து கொழும்பு நோக்கி பய­ணித்த தபால் சேவை ரயிலை திசை திருப்பி அபா­யத்தை ஏற்­ப­டுத்த முயற்­சித்தார் என்ற சந்­தே­கத்தில் பிர­பல பாட­சாலை ஒன்றின் மாணவன் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்றின் உத்­த­ர­வுக்கு அமைய விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார். இச்­சம்­பவம் பேசாலை பகு­தியில் செவ்­வாய்க்­கி­ழமை இரவு இடம்­பெற்­றுள்­ளது. இந்தச் சம்­ப­வம்­பற்றி மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, தலை­மன்னார் பிய­ரி­லி­ருந்து இரவு கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் இரவு 9.45 க்கு பேசாலை ரயில்வே நிலை­யத்தை வந்­த­டைந்­தது. ரயில் […]

1958 : பாகிஸ்தானில் ஜெனரல் அயூப் கான் ஆட்சியைக் கைப்பற்றினார்

வரலாற்றில் இன்று… ஒக்டோபர் – 27   939 : இங்­கி­லாந்தின் மன்­ன­ராக முதலாம் எட்மண்ட் முடி சூடினார். 1275 : நெதர்­லாந்தின் ஆம்ஸ்­டர்டாம் நகரம் ஸ்தாபிக்­கப்­பட்­டது. 1795 : ஸ்பானியக் குடி­யேற்­ற­நா­டு­க­ளுக்கும் ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கும் இடை­யே­யான எல்­லை­களை வரை­ய­றுக்கும் உடன்­ப­டிக்கை ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கும் ஸ்பெயி­னுக்கும் இடையில் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது. 1806 : பிரெஞ்சுப் படை­யினர் ஜேர்­ம­னியின் பேர்லின் நக­ரினுள் நுழைந்­தனர். 1807 : பிரெஞ்சு ஸ்பானியப் படைகள் போர்த்­துக்­கலைக் கைப்­பற்­றின. 1810 : முன்னாள் ஸ்பானியக் குடி­யேற்ற […]

எதிரியை பழிவாங்குவதற்காக விஷப்பாம்பை போத்தலில் அடைத்து வீட்டின் மீது வீசிய நபர்

(எஸ்.கே.) விஷப் பாம்பு ஒன்றை போத்­த­லுக்குள் அடைத்து அதை தனது எதி­ரி­யான நபர் ஒரு­வரின் வீட்­டுக்குள் எறிந்து விட்டுச் சென்ற சம்­பவம் ஒன்று நேற்று முன்­தினம் இடம்­பெற்­றுள்­ள­தாக அளவ்வ பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். அளவ்வ பிர­தே­சத்தைச் சேர்ந்த இரு கிரா­மத்­த­வர்கள் மத்­தியில் நீண்ட கால­மாக மோதல்கள் இடம்­பெற்று வந்­துள்­ளன. இதன் கார­ண­மாக பல்­வேறு மோதல்கள் நிலவி வந்­த­போதும் இம்­மோ­தல்­க­ளுக்கு தீர்வு காணப்­ப­ட­வில்லை. இரு கிரா­மத்­த­வர்­களும் பழி­வாங்கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வந்­துள்­ளனர். பிரச்­சி­னைக்­குள்­ளான இரு குடும்­பங்­களில் ஒரு குடும்பத் தலைவர் […]

ஒவ்வொரு வகை சர்வதேச தொடருக்குமென உரிய வீரர்கள் இனங்காணப்படவுள்ளனர்

(நெவில் அன்­தனி) டெஸ்ட் தொடர், சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடர், சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொடர் ஆகிய ஒவ்­வொரு வகை கிரிக்கெட் தொட­ருக்­கு­மென உரிய வீரர்கள் இனங்­கா­ணப்­பட்டு குழாம்­களில் இணைக்­கப்­ப­டு­வார்கள் என இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுத் தலைவர் க்றேம் லெப்ரோய் தெரி­வித்தார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலை­மை­ய­கத்தின் கேட்­போர்­கூ­டத்தில் நேற்­று­முன்­தினம் மாலை நடை­பெற்ற ஊடக சந்­திப்பில் பேசிய அவர் இலங்கை கிரிக்கெட் அணிகள் எதிர்­கா­லத்தில் எவ்­வாறு தெரிவு செய்­யப்­படும் என்­பது குறித்து அவர் விளக்­கினார். அங்கு […]

கள்ளக் காதலியுடன் விகாரையில் வழிபட்ட பின்னர் காட்டில் இரவைக்கழித்த நபர் அதிகாலையில் கள்ளக் காதலியின் மகளை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி – தாயும் மகளும் தடுக்க முயன்ற போது ஆயுத்தினால் தாக்கி விட்டு தப்பினார்

(ரெ.கிறிஷ்­ணகாந்) களுத்­துறை கெலிடோ கடற்­க­ரையில் நேற்று அதி­காலை நப­ரொ­ருவர் தனது கள்­ளக்­கா­தலி மற்றும் அவ­ரது மக­ளையும் கூரிய ஆயு­தத்­தினால் தாக்கி படு­காயம் ஏற்­ப­டுத்­தி­விட்டு தப்பிச் சென்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். ஹொரணை ரைகம பிர­தே­சத்தைச் சேர்ந்த 47 வய­தான தாயும் 18 வய­தான அவ­ரது மக­ளுமே இவ்­வாறு காய­ம­டைந்­துள்­ளனர். காய­ம­டைந்த பெண்ணின் சட்­ட­பூர்வ கணவர் தொடர்பில் எவ்­வித தக­வல்­களும் தெரி­ய­வ­ர­வில்லை என பொலிஸார் கூறு­கின்­றனர். புளத்­சிங்­ஹள மஹ­கம பிர­தே­சத்தில் இப்பெண் தனது சட்­ட­ரீ­தி­யற்ற கணவன் மற்றும் முதல் திரு­ம­ணத்தின் […]