3 ஆவது நாளாகவும் முடங்கிய சாய்ந்தமருது; நகரம் எங்கும் கறுப்புக் கொடி

(அஸ்லம் எஸ்.மௌலானா) சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்­துக்­காக தனி­யான உள்­ளூ­ராட்சி மன்­றத்தை உட­ன­டி­யாக வர்த்­த­மானி மூலம் பிர­க­டனம் செய்­யு­மாறு வலி­யு­றுத்தி இன்று மூன்­றா­வது நாளாகவும் அங்கு பூரண ஹர்த்தால் அனுஷ்­டிக்­கப்­பட்­டது. இதன் கார­ண­மாக இப்­பி­ர­தே­சங்­களில் வர்த்­தக நிலை­யங்கள், பொதுச் சந்­தைகள் திறக்­கப்­ப­ட­வில்லை. அரச நிறு­வ­னங்கள், பாட­சா­லைகள், அரச தனியார் வங்­கிகள் இயங்­க­வில்லை. இதனால் பொதுப் போக்­கு­வ­ரத்து சேவைகள் முற்­றாக ஸ்தம்­பித்­தி­ருந்­தன. சாய்ந்­த­ம­ருது நகரம் எங்கும் கறுப்புக் கொடிகள் கட்­டப்­பட்­டுள்­ள­துடன் பல்­வேறு கோஷங்கள் அடங்­கிய பதாகை­க ளும் தொங்கவிடப்பட்டுள்ளதுடன் போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருக்கின்றன.

ஹரீஷ் ஜோடியாகும் ரைஸா

விஜய் டிவியில் ஒளி­ப­ரப்­பான ‘பிக் ெபாஸ்’ நிகழ்ச்­சியில் பங்­கேற்ற போட்­டி­யா­ளர்கள் அனை­வ­ருக்­குமே மக்கள் மத்­தியில் நல்ல புகழ் கிடைத்­தது. மற்ற போட்­டி­யா­ளர்­களைக் காட்­டிலும் தன்­னு­டைய இயல்­பான நட­வ­டிக்­கையால் ஓவியா ‘பிக் ெபாஸ்’ போட்­டியில் பாதியில் வெளி­யே­றி­னாலும் ஒரு ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்­டி­ருக்­கிறார். பிக்ெபாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஓவியாவை அடுத்து ரைசாவுக்கு அதிக ரசிகர்களின் ஆதரவு இருந்தது. அதேபோல் இந்த நிகழ்ச்சியில் அனைத்து டாஸ்குகளையும் டீசண்டாக விளையாடியவர்களில் ஒருவர் ஹரிஷ். இருவரும் பிக்ெபாஸ் இல்லத்தில் இருந்தபோதே நல்ல […]

யாழில் சடலம் மீட்பு!

யாழ். கோப்பாய் கைதடி வீதிப் பகு­தியில்  சடலம் ஒன்று பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டுள்­ளது. அந்தப் பிர­தே­சத்­தி­லுள்ள பாலம் ஒன்றின் கீழி­ருந்தே இந்தச் சடலம் மீட்­கப்­பட்­டுள்­ளது. சங்­கத்­தானை, சாவ­கச்­சே­ரியை வசிப்­பி­ட­மாக கொண்ட 49 வய­தான நபரே சட­ல­மாக கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்ளார். யாழ். சாவ­கச்­சேரி பிர­தேச பாட­சாலை ஒன்றின் ஆசி­ரி­ய­ரான இவர், நேற்று இரவு தனது வீட்­டி­லி­ருந்து வெளியே சென்­ற­தாக அவ­ரது மனைவி தெரி­வித்­துள்ளார்.

கீதா குமாரசிங்கவின் மேன்முறையீட்டு மனு தொடர்பான தீர்ப்பு நாளை

கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்ற தகுதியற்றவரென மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள  மேன்முறையீட்டு மனு தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு நாளைய தினம் வழங்கப்படவுள்ளது. கீதா குமார சிங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேன்முறையீட்டு மனுவை பரிசீலனைக்கு உட்படுத்திய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாமின் உறுப்பினரான நீதிபதி சிசிர டி ஆப்ரூவினால் நாளை காலை இந்த தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

மாட்டிறைச்சிக் கடையை 32 இலட்சம் ரூபா குத்தகைக்குப் பெற்ற பௌத்த பிக்கு

ரெ. கிறிஷ்­ணகாந் மத்­து­கம நக­ரி­லுள்ள மாட்­டி­றைச்சி கடை ஒன்றை பௌத்த பிக்கு ஒருவர் சுமார் 32 இலட்சம் ரூபா குத்­தகை அடிப்­ப­டையில் பெற்­றுள்­ள­தாக மத்­து­கம பிர­தேச சபை செய­லாளர் அசோக ரண­சிங்க தெரி­வித்­துள்ளார். மத்­து­கம பிர­தேச சபைக்கு சொந்­த­மான மாட்­டி­றைச்சிக் கடையை விலை­ம­னுக்­கோரல் அடிப்­ப­டையில் 22, 60, 000 ரூபா­வுக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த நிலையில் 2018 ஆம் ஆண்­டுக்­கான ஆகக் குறைந்த கேள்வித் தொகை 24, 86, 165 ரூபா­வென நிய­மிக்­கப்­பட்டு பிர­தேச சபை­யினால் கேள்­வி­ம­னு­கோ­ரப்­பட்­டி­ருந்­தது. அதற்­க­மைய தற்­போது […]