கொலை செய்யப்பட்ட நிலையில் இரண்டு சடலங்கள் பற்றைக்குள் கிடப்பதாக வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் மனநோயாளி வழங்கிய பொய் தகவலால் பற்றைக்குள் இரவு முழுவதும் தேடுதலில் ஈடுபட்ட பதுளை பொலிஸார்

(எம். செல்­வ­ராஜா) பொலி­ஸா­ருக்கு பொய்த்­த­க­வல்­களை வழங்­கி­ய­தாக கூறப்­படும் நபர் மன நோயினால் பாதிக்­கப்­பட்­டு பதுளை அர­சினர் மருத்­து­வ­ம­னையில் சிகிச்சை பெற்று வரு­ப­வ­ரென்றும் தெரிய வந்­துள்­ளது. பதுளைப் பகு­தியின் புது­கே­கந்த என்ற இடத்தில் பற்றை ஒன்­றுக்குள் இரு மனித சட­லங்கள் காணப்­ப­டு­வ­தா­கவும், கொலை செய்­யப்­பட்டே இம் மர­ணங்கள் விளை­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் நப­ரொ­ருவர் தமது கைய­டக்­கத்­தொ­லை­பேசி மூலம் பதுளைப் பொலி­ஸா­ருக்கு கடந்த 2 ஆம் திகதி மாலை அறி­வித்­துள்ளார். இத் தக­வ­லை­ய­டுத்து பதுளை பொலிஸார் பலர், குறிப்­பிட்ட இடத்­துக்குச் சென்று தேடு­தல்­களை […]

சவூதி அரேபியாவில் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையாக கோடீஸ்வரர் அல்வலீத் பின் தலால் உட்பட 11 இளவரசர்கள் கைது

உலகின் மிகப் பெரிய கோடீஸ்­வர்­களில் ஒரு­வ­ரான சவூதி அரே­பிய இள­வ­ரசர் அல்­வலீத் பின் தலால் உட்­பட 11 இள­வ­ர­சர்கள், 4 அமைச்­சர்கள் மற்றும் முன்னாள் அமைச்­சர்கள் சவூதி அரே­பியா அதி­கா­ரி­களால் ஊழல் குற்­றச்­சாட்­டு­களின் பேரில் கைது நேற்­று­முன்­தினம் செய்­யப்­பட்­டுள்­ளனர். சவூதி அரே­பி­யாவின் முடிக்­கு­ரிய இள­வ­ரசர் முஹம்மத் பின் சல்மான் தலை­மையில் புதிய ஊழல் ஒழிப்புக் குழுவை மன்னர் மொஹம்மத் பின் சல்மான் நேற்­று­முன்­தினம் நிய­மித்தார். அதை­ய­டுத்து சிறிது நேரத்தில் மேற்­படி கைதுகள் இடம்­பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. ஊழ­லுக்கு எதி­ரான […]

மரத்திலிருந்து கீழே வீழ்ந்தவரின் தொண்டையை கிழித்த மூன்றரை அடி நீளமான தடி; வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூடத்தின் கதவின் ஊடாக கொண்டு செல்ல முடியாத நிலையில் தடியின் இரு பக்கங்களையும் வெட்டிய பின் கொண்டு சென்று சத்திர சிகிச்சை!

(மது­ரங்­குளி நிருபர்) தோட்டம் ஒன்றில் மரங்­களை வெட்டிக் கொண்­டி­ருந்த ஒருவர் மரத்­தி­லி­ருந்து தவறி கீழே வீழ்ந்­ததில் அவ­ரது தொண்­டையின் ஊடாக குத்­தப்­பட்டு கண்­க­ளுக்கு அரு­கா­மை­யினால் வெளியே வந்த மரத்தின் கிளை ஒன்று சிலாபம் வைத்­தி­ய­சா­லையில் மேற்­கொள்­ளப்­பட்ட ஒன்­றரை மணி நேர சத்­திர சிகிச்­சையின் பின்னர் வெற்­றி­க­ர­மாக அகற்­றப்­பட்­டுள்­ளது. கடந்த வியா­ழக்­கி­ழமை தம்­ப­கல்ல பிர­தேச தோட்டம் ஒன்றில் வைத்து இடம்­பெற்­றுள்ள இச்­சம்­ப­வத்தில் காக்­கப்­பள்ளி தம்­ப­கல்ல பிர­தே­சத்தைச் சேர்ந்த 50 வய­தான இரு பிள்­ளை­களின் தந்­தையே இந்த அனர்த்­தத்தை எதிர்­கொண்­டி­ருந்தார். […]

ஊழல் மோசடிகளுக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்த ட்ரயல் அட்பார் முறையில் மூன்று நீதிபதிகள் கொண்ட குழாம்

ஊழல் மோச­டி­க­ளுக்கு எதி­ரான விசா­ர­ணை­களை துரித கதியில் மேற்­கொள்­வ­தற்­காக ‘ட்ரயல் அட்பார்’ முறையில் மூன்று நீதி­ப­தி­க­ள­டங்­கிய அமர்­வொன்றைக் கொண்ட ஊழ­லுக்கு எதி­ரான மேல் நீதி­மன்­றத்தை ஸ்தாபிப்­ப­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தாக தெரி­வித்த பிரதி அமைச்சர் அஜித்.பி.பெரேரா, இதற்­காக விசேட சட்ட ஏற்­பா­டு­களை உள்­ள­டக்­கிய திருத்­தத்­தினை விரைவில் மேற்­கொள்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார். பிரதி அமைச்சர் அஜித் பி.பெரே­ராவின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை மின்­வலு மற்றும் மீள்­புத்­தாக்க சக்தி அமைச்சில் நடை­பெற்­றது. இதில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு […]

14 மாவட்டங்களில் சுனாமி எச்சரிக்கை சமிக்ஞையுடன் ஒத்திகை வேலைத்திட்டம்!

சுனாமி அனர்த்­தத்­தின்­போது பாது­காப்பை பெற்றுக் கொள்­வது தொடர்­பான சுனாமி ஒத்­திகை குறித்த தேசிய வேலைத்­திட்டம் நாடளா­விய ரீதியில், 14 கரை­யோர மாவட்­டங்­களையும் மையப்­ப­டுத்­தி­ய­தாக நேற்று முன்­னெ­டுக்­கப்­பட்­டது. அனர்த்த முகா­மைத்­துவ அமைச்­சினால் சுனாமி ஒத்­திகை தேசிய வேலைத்­திட்டம் திட்­ட­மிட்ட வகையில், நாடளா­விய ரீதியில் உள்ள 14 கரை­யோர மாவட்­டங்­களில் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. யாழ்ப்­பாணம்,மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை, மன்னார், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, அம்­பாறை, புத்­தளம்,கம்­பஹா கொழும்பு, களுத்­துறை, காலி, மாத்­தறை, அம்­பாந்­தோட்டை 14மாவட்­டங்­களில் நிறு­வப்­பட்­டுள்ள 77 சுனாமி எச்­ச­ரிக்கை கோபு­ரங்­க­ளி­லி­ருந்து சுனாமி எச்­ச­ரிக்கை […]