கொழும்பில் 50 ரூபாவுக்கு பயணிக்கும் தூரத்துக்கு யாழில் 300 ரூபாவை கட்டணமாக அறிவிடும் ஆட்டோ சாரதிகள் – வட மாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்

(மயூரன்) வடக்­கி­லுள்ள முச்­சக்­கர வண்டி சார­திகள் கட்­டுப்­பாடு இல்­லாமல் கட்­ட­ணங்­களை அற­வி­டு­வதைக் கட்­டுப்­ப­டுத்த வட­மா­காண முத­ல­மைச்சர் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என தெரி­வித்து வட­மா­காண எதிர்க்­கட்சித் தலைவர் சி.தவ­ராசா விசேட கவ­ன­யீர்ப்பு பிரே­ர­ணையை முன் மொழிந்தார். வட­மா­காண சபையின் 109ஆவது அமர்வு நேற்று கைத­டியில் உள்ள பேரவைக் கட்­ட­டத்தில் நடை­பெற்­றது. அதன் போதே அவ்­வாறு தெரி­வித்தார். மேலும் தெரி­விக்­கையில், யாழ்ப்­பாணத்தில் முச்­சக்­கர வண்டி சார­திகள் கட்­டுப்­பா­டின்றி கட்­ட­ணங்­களை அற­விட்டு வரு­கின்­றனர். இதனால் பெரிதும் மக்கள் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். […]

போலி நாணயத் தாள்­களை அச்­சிட்­டமை தொடர்பில் யாழ். அரி­யா­லையில் இளம் தம்­ப­தி­யினர் கைது!

(பாறுக் ஷிஹான், மயூரன்) போலி நாணயத் தாள்­களை அச்­சிட்­டமை தொடர்பில் சந்­தே­கத்தின் பேரில் இளம் தம்­ப­தி­யரை யாழ்ப்­பாணம் பொலிஸார் கைது செய்­துள்­ளனர். இவர்­க­ளி­ட­மி­ருந்து 21 இலட்­சத்­து 48 ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யான போலி நாண­யத்­தாள்கள் கைப்­பற்­றப்­பட்­ட­தாகப் பொலிஸார் தெரி­வித்­தனர். யாழ்ப்­பாணம் அரி­யாலை – மணி­யந்­தோட்டம் பகு­தி­யி­லுள்ள அவர்­க­ளு­டைய வீட்டில் வைத்தே நேற்று முன்­தி­ன­மி­ரவு இவர்கள் கைது செய்­யப்­பட்­டனர். யாழ்ப்­பாணம், கல்­வி­யங்­காடு பகு­தியில் ஒருவர் போலி நாண­யத்­தாள்­களை அச்­சிட்­டமை தொடர்பில் ஒருவர் பொலி­ஸா­ருக்குத் தகவல் வழங்­கி­யி­ருந்தார். அத­ன­டிப்­ப­டையில் அவரைக் […]

மாவனல்லை வடிகானில் சடலம் மீட்பு

(எஸ்.கே) கொழும்பு–கண்டி வீதி­யி­லுள்ள மாவ­னல்லை பஸ் டிப்போ அரு­கி­லுள்ள வடி­கா­னி­லி­ருந்து நேற்­றுக்­காலை ஆணின் சடலம் ஒன்று கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக மாவ­னல்லை பொலிஸார் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். இச்­ச­டலம் வடி­கானின் மேலாக இரண்டு கால்­களும் வெளியே காணப்­பட்ட நிலையில் கிடந்­துள்­ளது. இந்த நபர் தவ­று­த­லாக வீழ்ந்து உய­ரி­ழந்­துள்­ளாரா அல்­லது கொலை செய்­யப்­பட்டு சடலம் இந்த வடி­கானில் கொண்டு வந்து போடப்­பட்­டதா என்­பது குறித்து மாவ­னல்லை பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். இது­வரை மேற்­கொண்ட விசா­ர­ணை­களில் இந்த நபர் மாவ­னல்லை பிர­தே­சதைச் சேர்ந்­தவர் என […]

எரி பொருள் தட்டுப்பாடு தொடர்பில் சந்தேகம்; அதிகாரிகளிடம் அறிக்கை கோரும் பிரதமர் ரணில் ‘சதி இடம்பெற்றுள்ளதாக மக்களும் அரசும் சந்தேகம்’

(எம்.எம்.மின்ஹாஜ்) நாட்டில் ஏற்­பட்­டுள்ள எரிப்­பொருள் தட்­டுப்­பாடு தொடர்பில் பலத்த சந்­தேகம் ஏற்­பட்­டுள்­ளது. எனவே, இது தொடர்பில் உண்­மையை கண்­ட­றி­வ­தற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளிடம் விசேட அறிக்­கை­யொன்றை பெற்­று­த்த­ரு­மாறு கோரி­யுள்ளார். இந்த அறிக்கை கிடைத்த பின்னர் உரிய சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது என ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைமை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே பாராளுமன்ற உறுப்­பினர் நளின் பண்­டார மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், நாட்டில் தற்­போது […]

பெற்றோல் தட்டுப்பாட்டுக்கான காரணத்தை கண்டறிவதற்கு விசாரணை; மேலுமொரு கப்பலை அனுப்பி வைப்பதற்கு இந்தியா இணக்கம் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார்

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) நாட்டில் பெற்றோல் தட்­டுப்­பாட்­டினால் மக்கள் மூன்று மணி­நே­ர­ம­ளவில் எரி­பொருள் நிரப்பு நிலை­யங்­களில் வரி­சையில் நின்று கஷ்­டப்­ப­டு­வ­தனை நினைத்து நான் கவ­லையடை­கின்றேன். எனினும் இந்த விட­ய­மாக நானும் ஜனா­தி­ப­தியும் இந்­திய உயர்ஸ்­தா­னி­க­ருடன் பேசினோம். இதன்­படி ஏற்­க­னவே நாம் எதிர்­பார்த்­துள்ள கப்­ப­லுடன் இன்­னு­மொரு கப்­பலை அனுப்பி வைப்­ப­தற்கு இந்­தியா இணக்கம் தெரி­வித்­துள்­ளது. இதன்­படி இரண்டு கப்பல்கள் வருகை தர­வுள்­ளன. அத்­துடன் இந்த நிலை­மைக்­கான உண்­மை­யான கார­ணத்தை கண்­ட­றி­வ­தற்கு விசா­ர­ணை­யொன்றை நடத்­த­வுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். நான் […]