பொப் பாடகியாகும் ஸ்ருதி

சூர்யா, தனுஷ் உள்­ளிட்ட முன்­னணி ஹீரோக்­க­ளுடன் ஜோடி­யாக நடித்து வந்த ஸ்ருதி ஹாசன், கடந்த சில மாதங்­க­ளாக புதிய படங்கள் ஒப்­புக்­கொள்­ளாமல் ஒதுங்கியிருக்­கிறார்.   தந்தை கமல் இயக்கும் ‘சபாஷ் நாயுடு’ படப்­பி­டிப்­புக்­காக காத்­தி­ருக்­கிறார்.   நடிப்­பி­லி­ருந்து சற்று விலகி நிற்கும் ஸ்ருதி­ஹாசன் விரைவில் பொப் பாட­கி­யாக வலம் வர­வி­ருக்­கி­றாராம்.   இசை, பாடல் பாடு­வதில் ஏற்­க­னவே ஸ்ருதி­ஹாசன் திற­மையை நிரூ­பித்­தி­ருக்­கிறார். இதையடுத்த கட்­டத்­துக்கு கொண்டு செல்லும் வித­மாக இம்­மு­யற்­சியை அவர் மேற்­கொண்­டி­ருக்­கிறார் என்று தெரி­கி­றது.   […]

ஜெயா டி.வி அலுவலகத்தில் இந்திய வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

  சென்னையிலுள்ள ஜெயா டி.வி அலுவலகத்தில் இந்திய வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை இன்று நடத்தி வருகின்றனர்.   சென்னை ஈக்காட்டுத் தாங்கலிலுள்ள ஜெயா டி.வி. தலைமை அலுவலகத்திலும் மற்றும் வேறு பல இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் ஜெயா டி.வி. இயங்கி வருகிறது. அக்குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை மற்றும் டிடிவி தினகரனின் அலுவலகம் ஆகியவற்றிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

யுத்தத்தில் பலியான இராணுவ வீரரின் இருவருட சம்பளத்தை போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பெற்ற சகோதரன் கைது: தாய், தந்தை உயிரிழந்ததனையும் மறைத்தார் எனவும் குற்றச்சாட்டு

(எம். செல்­வ­ராஜா) யுத்த காலத்தில் கொல்­லப்­பட்ட இரா­ணுவ வீரர் ஒரு­வரின் இரு­வ­ருட சம்­ப­ளத்தை போலி ஆவ­ணங்­களைச் சமர்ப்­பித்துப் பெற்று மோசடி செய்தார் என்ற சந்­தே­கத்தில் உயி­ரி­ழந்த இரா­ணுவ வீரர் ஒரு­வரின் சகோ­த­ரனை மொன­ரா­கலை விசேட குற்­றப்­பு­ல­னாய்வுப் பொலிஸார் கைது செய்­துள்­ளனர். கைது செய்­யப்­பட்­டவர் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட போது இந்த நபரால் 13 இலட்சம் ரூபா இவ்­வாறு மோசடி செய்­யப்­பட்­டுள்­ளமை தெரிய வந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். வெல்ல­வாயப் பகு­தியைச் சேர்ந்த 44 வய­தான நபரே சந்­தே­கத்தின் பேரில் கைது […]

2012 : வெலிக்­கடை சிறைச்­சா­லையில் மோதல்: 27 பேர் பலி

வரலாற்றில் இன்று… நவம்பர் – 09   1799 : பிரெஞ்சுப் புரட்சி முடி­வுக்கு வந்­தது. நெப்­போ­லியன் போன­பார்ட்டின் கட்­டுப்­பாட்­டுக்குள் பிரான்ஸ் வந்­தது. 1872 : அமெ­ரிக்­காவின் மசா­சூசெட்ஸ் மாநி­லத்தில் பொஸ்டன் நகரில் களஞ்­சியசாலை ஒன்றில் ஏற்­பட்ட தீ பர­வி­யதில் பொஸ்­டனின் பெரும் பகுதி அழிந்­தது. 776 கட்­ட­டங்கள் அழிந்து 20 பேர் கொல்­லப்­பட்­டனர். 1887 : ஐக்­கிய அமெ­ரிக்கா ஹவாய் தீவின் பேர்ள் துறை­மு­கத்தின் உரி­மையைப் பெற்­றது. 1913 : தென் ஆபி­ரிக்­காவில் மகாத்மா காந்தி […]

முல்லைத்தீவு வெள்ளமுள்ளிவாய்க்காலில் கண்ணிவெடிகள் கண்டுபிடிப்பு

(எஸ்.கே.) இறுதி யுத்தம் இடம்­பெற்ற முல்­லைத்­தீவு வெள்­ள­முள்ளி­ வாய்க்கால் பிர­தே­சத்தில் வீடு ஒன்றை நிர்­மா­ணிப்­ப­தற்கு அடித்­தளம் வெட்­டி­ய­போது நேற்று முன்­தினம் ஒரு தொகை கண்ணிவெடிகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. அங்கு புதைக்­கப்­பட்­டி­ருந்த 50 கண்­ணி­வெ­டிகள் மற்றும் 43 பியூ­சஸ்­களும் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ள­துடன் பின்னர் அவை மேல­திக சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்­காக முல்­லைத்­தீவு பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. வெள்ள முள்­ளி­வாய்க்கால் கடற்­கரை பிர­தே­சத்தில் இறுதி யுத்­தத்தில் பாது­காப்புப் படை­யி­னரின் தாக்­கு­தலில் தப்­பிச்­சென்ற புலிகள் இக்­கண்­ணி­ வெ­டி­களை புதைத்து விட்டுச்சென்றிருக்கலாமென பாதுகாப்பு பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.