ஜப்பானிய பிரதமருடனான உத்தியோகபூர்வ பைவத்தில் குட்டைப் பாவாடையுடன் தோன்றியதால் சர்ச்சையில் சிக்கிய இவான்கா ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியின் மகளான இவான்கா ட்ரம்ப், ஜப்பானிய பிரதமருடன் நிகழ்வொன்றில் பங்குபற்றியபோது பொருத்தமற்ற வகையில் ஆடையணிந்திருந்தார் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 36 வயதான இவான்கா  ட்ரம்ப், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மூத்த மகளாவார். தற்போது ட்ரம்ப் நிர்வாகத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரர் எனும் சம்பளமற்ற பதவியை வகிக்கிறார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஜப்பானிய விஜயத்துக்கு முன்னோடியாக இவான்கா ட்ரம்ப்பும் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். கடந்த வெள்ளிக்கிழமை டோக்கியோ நகரில் நடைபெற்ற பெண்களுக்கான உலக அரங்கம் 2017 […]

2006 : நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ந.ரவிராஜ் சுட்­டுக்­கொல்­லப்­பட்டார்

வரலாற்றில் இன்று… நவம்பர் – 10 1444 : ஹங்­கேரி, போலந்து ஆகி­ய­வற்றின் அரசர் மூன்றாம் விளா­டிஸ்லாஸ் பல்­கே­ரி­யாவின் வர்னா என்ற இடத்தில் ஒட்­டோமான் பேர­ர­சுடன் இடம்­பெற்ற சமரில் தோற்­க­டிக்­கப்­பட்டு கொலை செய்­யப்­பட்டார். 1520 : டென்மார்க் மன்னன் இரண்டாம் கிறிஸ்­டி­ய­னினால் சுவீ­டனை முற்­று­கை­யி­டப்­பட்­ட­போது ஸ்டொக்ஹோம் நகரில் பலர் கொல்­லப்­பட்­டனர். 1674 : ஆங்­கி­லே­ய-­டச்சு போரை­ய­டுத்து, வெஸ்ட்­மின்ஸ்டர் உடன்­பாட்டின் படி, அமெ­ரிக்­காவில் ஸ்தாபிக்­கப்­பட்ட “புதிய நெதர்­லாந்து” பிராந்­தி­யத்தை இங்­கி­லாந்­திடம் நெதர்­லாந்து ஒப்­ப­டைத்­தது. 1847 : ஸ்டீவன் விட்னி […]

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்றுநர் பதவியிலிருந்து சந்திக்க ஹத்துருசிங்க இராஜினாமா; இலங்கை அணியின் பயிற்றுநராக நியமிக்கப்படுவாரா?

பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்­றுநர் பத­வி­யி­லி­ருந்து இலங்கை அணியின் முன்னாள் வீரர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க இரா­ஜி­னாமா கடிதத்தை செய்­துள்ளார். அவ­ரது இரா­ஜி­னா­மாவை பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் சபை ஏற்­றுக்­கொள்­ளுமா? அப்­படி ஏற்­றுக்­கொண்டால் ஹத்­து­ரு­சிங்க வெளி­யே­று­வாரா? என்­பவை விரைவில் தெரி­ய­வரும். இரா­ஜி­னாமாவை ஹத்­து­ரு­சிங்­காவோ பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் சபையின் உயர் அதி­கா­ரி­களோ உத்­தி­யோ­க­பூர்­வ­மாக உறு­தி­செய்­யவும் இல்லை, மறு­த­லிக்­கவும் இல்லை. இதே­வேளை, ஹத்­து­ரு­சிங்­கவை ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை நாடி, அவ­ருடன் பேரம் பேசி வரு­வ­தற்­கான அறி­கு­றிகள் தென்­ப­டு­கின்­றன. ஹத்­து­ரு­சிங்­கவின் பதவிக் காலத்தில் பங்­க­ளாதேஷ் […]

நாயின் காதுக்குள் டொனால்ட் ட்ரம்பின் தோற்றம்

பிரிட்­டனைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர் தனது நாயின் காதுக்குள் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் முகத்­தோற்றம் தென்­பட்­டதைக் கண்டு பெரும் வியப்­ப­டைந்­துள்ளார். இங்­கி­லாந்தின் சௌத் ஷீல்ட் நகரில் வசிக்கும் ஜேட் ரொபின்சன் எனும் 26 வய­தான யுவதி, தனது வீட்டில் செல்லப் பிரா­ணி­யாக நாய் ஒன்றை வளர்த்து வரு­கின்றார். சில நாட்­க­ளுக்கு முன்னர் அவ­ரது நாயின் காதில் நோய் தொற்று ஏற்­பட்டு அவதிப்பட்­டுள்­ளது. இதனை கவ­னித்த நாயின் உரி­மை­யாளர் ஜேட் ரொபின் சன் கால் நடை மருத்­து­வ­ரிடம் நாயை […]

பாதுகாப்பு குறித்து முன்னணி வீரர்கள் அச்சம் தெரிவிப்பு; பாகிஸ்தானுக்கான விஜயத்தை மே. தீவுகள் பிற்போட்டது

பாகிஸ்­தானில் தங்­க­ளது பாது­காப்பு குறித்து முன்­னணி வீரர்கள் அச்சம் வெளி­யிட்­டதன் கார­ண­மாக அந்­நாட்­டுக்­கான கிரிக்கெட் விஜ­யத்தை மேற்­கிந்­தியத் தீவுகள் பிற்­போட்­டுள்­ள­தாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன. பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக 3 போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொடரில் பங்­கு­பற்­றும்­ பொ­ருட்டு மேற்­கிந்­தியத் தீவுகள் அணி அங்கு செல்­வ­தாக இருந்­தது. இரண்டு அணி­க­ளுக்கும் வாய்ப்பு ஒன்று உரு­வா­கும்­போது இந்த கிரிக்கெட் விஜ­யத்தை அடுத்த வருடம் நடத்­து­வது குறித்து திட்­ட­மி­டப்­படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வட்­டாரம் […]