அதிபரான கணவர் மூன்று நாட்கள் வீட்டுக்கு வராமையினால் ஆத்திரமுற்ற மனைவி பாடசாலைக்கு சென்று கணவரைக் கீழே தள்ளி மண்ணெண்ணெய் ஊற்றினார்: யாழ். நகரப் பாடசாலை ஒன்றில் சம்பவம், சமாதானப்படுத்தி அனுப்பிய ஆசிரியர்கள்

(மயூரன்) அதி­ப­ராக கட­மை­யாற்றும் தனது கணவர் சில நாட்­க­ளாக வீட்­டுக்கு வராத கார­ணத்தால் அவரை பாட­சா­லைக் குத் தேடிச் சென்ற மனைவி மண்­ணெண்ணெய் ஊற்றி தீ மூட்ட முயற்­சித்த சம்­பவம் ஒன்று யாழ் நகரப் பாட­சாலை ஒன்றில் இடம்­பெற்­றுள்­ளது. யாழ். நகரப் பகு­தியில் உள்ள பாட­சாலை ஒன்றில் கட­மை­யாற்றும் அதிபர் ஒருவர் கடந்த விடு­முறை தினங்­க­ளான மூன்று நாட்­களும், தனது வீட்­டுக்கு செல்­லாமல் வேறு இடத்தில் தங்­கி­யுள்ளார். இவர் கடந்த திங்­கட்­கி­ழமை வீட்­டுக்கு வருவார் என எதிர்­பார்த்த […]

சைக்­கிளில் வரு­வ­தற்கு கூட அனு­ம­திக்­கின்­றார்கள் இல்லை நிலைமை மோச­ம­டைந்து விட்­டது! – மஹிந்த ராஜ­பக்க்ஷ

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) நாடா­ளு­மன்­றத்­திற்குள் சைக்­கிளில் வரு­வ­தற்கு கூட அனு­ம­திக்­கின்­றார்கள் இல்லை. நிலைமை மோச­ம­டைந்து விட்­டது என முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்­க்ஷ குற்றம் சாட்­டி­யுள்ளார். நாடா­ளு­மன்­றத்­துக்கு சைக்­கிளில் வருகை தந்­தமை தொடர்பில் நாடாளுமன்ற வளா­கத்தில் வைத்து கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், நாங்கள் பொது­மக்­களின் அவ­லத்தை வெளிப்­ப­டுத்தும் வகையில் சைக்­கிளில் நாடா­ளு­மன்­ற­திற்கு வருகை தந்தோம். அதற்குக் கூட அனு­ம­திக்­கின்­றார்கள் இல்லை. நிலை­மைகள் மிகவும் மோச­ம­டைந்து விட்­டன என்றார். இதே­வேளை நாமல் ராஜ­பக்க்ஷ […]

எனது கல்வி அமைச்­சி­லேயே அதி­காரப் பகிர்வு இல்­லாத நிலையில் இந்த நாட்டில் எவ்­வா­று­ அ­தி­காரப் பகிர்வை அரசு வழங்க முடியும்? ; வர்த்­த­மானி மூலம் தனக்கு அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டி­ருந்­தாலும் எத­னை­யுமே செயற்­ப­டுத்த முடி­யா­துள்­ளது என்­கிறார் இரா­ஜாங்க அமைச்சர் இரா­தா­கி­ருஷ்ணன்

நாட்டில் அதி­காரப் பகிர்வு தொடர்­பாக பல மட்­டத்­திலும் கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெ­று­கின்­றன. ஆனால், எங்­க­ளு­டைய கல்வி அமைச்சில் அந்த அதி­காரப் பகிர்வு இல்லை. எனவே, எவ்­வாறு நாட்டில் அனைத்துப் பகு­தி­க­ளுக்கும் இந்த அர­சாங்கம் அதி­காரப் பகிர்வை வழங்க முடியும் என கல்வி இரா­ஜாங்க அமைச்சர் வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன் கேள்வி எழுப்­பி­யுள்ளார். கொழும்­பி­லுள்ள கல்வி இரா­ஜாங்க அமைச்சின் காரி­யா­ல­யத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­விகளுக்கு பதில் அளிக்கும் போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார். தொடர்ந்து அவர் […]

வரவு – செலவுத் திட்­டத்தில் வாக்­க­ளிப்­பதா இல்­லையா என்­பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் கூடி ஆராய்வு

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) தமிழ் மக்­களின் உட­னடிப் பிரச்­சி­னைகள் குறித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை எதிர்­வரும் 16ஆம் திக­திக்கு முன்­ன­தாக சந்­திப்­ப­தற்கு பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நாடா­ளு­மன்றக் குழு தீர்­மா­னித்­துள்­ளது. வரவு செல­வுத்­திட்­டத்­திற்கு வாக்­க­ளிப்­பது குறித்த விட­யத்தை, மக்­களின் உட­ன­டிப்­பி­ரச்­சி­னை­க­ளுக்­கு­ரிய தீர்­வினை வழங்­கு­வது குறித்த விட­யத்­தி­னையும் இரு­மு­றை­களில் அணு­க­வேண்­டு­மெ­னவும் இரண்­டையும் ஒன்­றை­யொன்று இணைத்­துக்­கொண்டு பய­ணிக்க முடி­யாது எனவும் உறுப்­பி­னர்­க­ளுக்கு தலைமை அறி­வு­றுத்­தி­ய­தா­கவும் தெரி­ய­வ­ரு­கின்­றது. 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள […]

‘நீலப்­ப­சுமை’ எனும் தொனிப்­பொ­ருளில் 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத்­திட்டம் சமர்ப்­பிப்பு

    (ஆர்.ராம், எம்.எம்.எம்.மின்ஹாஜ்) நாட்டின் பொரு­ளா­தா­ரத்­தினை மீளவும் சரி­யான தடத்தில் முன்­னெ­டுத்துச் செல்­வ­தனை இலக்­காகக் கொண்டு ‘நீலப் பசுமை’ எனும் தொனிப்­பொ­ருளில் 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத்­திட்டம் இரண்­டா­வது வாசிப்­புக்­காக நாடா­ளு­மன்­றத்தில் நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் நேற்று சமர்ப்­பிக்­கப்­பட்­டது. நாடா­ளு­மன்றம் நேற்று வியா­ழக்­கி­ழமை பிற்­பகல் 3மணிக்கு சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய தலை­மையில் கூடி­ய­போதே நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர மேற்­படி வரவு செல­வுத்­திட்­டத்­ததை சமர்ப்­பித்தார்.   பர­ப­ரப்­பான நாடா­ளு­மன்றம் நாடா­ளு­மன்­றத்தில் 2018ஆம் ஆண்­டுக்­கான […]